கேள்வி 10.
கொடுக்கப்பட்ட முக்கோணம் POR – யின் ஒத்த பக்கங்களின் விகிதம் 2/3 அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி 23 < 1).
தீர்வு :

வரைமுறை :

  1. ஏதேனும் ஒரு அளவைக் கொண்டு ΔPQR வரைக.
  2. QR என்ற கோட்டுத் துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப்புள்ளிக்கு எதிர்திசையில் வரைக.
  3. QX ன் மீது Q1, Q2, Q3 என்ற மூன்று புள்ளிகளை QQ1 = Q1Q2 = Q2Q3 என்றவாறு குறிக்கவும்.
  4. Q3R ஐ இணைத்து Q2, யிலிருந்து Q3R க்கு இணையாக ஒரு கோடு வரைக. இது QR ஐ R’ல் சந்திக்கிறது.
  5. R’ லிருந்து RP க்கு இணையாக வரையப்படும் கோடு QP ஐ P’ ல் சந்திக்கிறது. ΔP’QR’ ன் பக்கங்கள் ΔPQRன் ஒத்த பக்கங்களின் அளவில் 2/3 ஆகும்.
  6. ΔP’QR’ ஆனது தேவையான வடிவவொத்த முக்கோணம் ஆகும்.

கேள்வி 11.
கொடுக்கப்பட்ட முக்கோணம் LMN ன் ஒத்த பக்கங்களின் விகிதம் 4/5 என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரையக.(அளவு காரணி 4/5 < 1).
தீர்வு :

வரைமுறை :

  1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔLMN வரைக.
  2. MN என்ற கோட்டுத் துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, MX என்ற கதிரை L என்ற முனைப்புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
  3. MX – யின் மீது M1, M2, M3, M4, M5; என்ற 5 புள்ளிகளை MM1 = M1M2 = M2M3 = M4M5 என்றவாறு குறிக்க.
  4. M5N – ஐ இணைத்து M, லிருந்து M5N க்கு இணையாக ஒரு கோடு வரைக. இது MN – ஐ N’ல் சந்திக்கும்.
  5. N’ லிருந்து NL க்கு இணையாக வரையப்படும் கோடு LM ஐ L’ல் சந்திக்கும். ΔL’MN’ ன் பக்கங்கள் ΔLMN ன் ஒத்த பக்கங்களின் அளவில் 5 ல் 4 பங்கு ஆகும்.
  6. ΔL’MN’ ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.

 

கேள்வி 12.
கொடுக்கப்பட்ட முக்கோணம் ABC யின் ஒத்த பக்கங்களின் விகிதம் 6/5 என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி 6/5 > 1).

வரைமுறை :

  1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔABC வரைக
  2. BC என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு BX என்ற கதிரை A என்ற முனைப்புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
  3. BX – ன் மீது B1, B2, B3, B4, B5, B6, என்ற 6 புள்ளிகளை BB1 = B1B2 = B2B3 = B4B5 = B5B6
    என்றவாறு குறிக்க.
  4. B5 ஐ புள்ளி ( வுடன் இணைக்க . B5C க்கு இணையாக B6 லிருந்து = வரையப்படும் கோடு BC ஐ C’ ல் சந்திக்கிறது.
  5. ΔA’BC’ ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.

 

கேள்வி 13.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR ன் ஒத்த பக்கங்களின் விகிதம் 7/3 என்றவாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி 7/3 > 1)
தீர்வு :

வரைமுறை :

  1. ஏதேனும் ஓர் அளவைக்கொண்டு ΔPQR வரைக.
  2. QR – ல் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு QX
  3. QX ன் மீது Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7 ஐ குறிக்க
  4. Q3R ஐ இணை Q3R R’க்கு இணையாக Q7 – லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R-ல் சந்திக்கும்.
  5. Rலிருந்து PR க்கு இணையாக வரையப்படும் கோடு PQ ஐ P’ல் சந்திக்கும்.
  6. ΔP’QR’ ன்பக்கங்கள் ΔPQR ன் ஒத்த பக்கங்களின் அளவில் 7/3 பங்கு
  7. ΔP’QR’ தேவையான முக்கோணம் ஆகும்.

அடிப்படை விகிதச்சம் தேற்றம் (or) தேல்ஸ் தேற்றம்
கூற்று: ஒரு நேர்க்கோடு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விரண்டு பக்கங்களையும் சம விகிதத்தில் பிரிக்கும்.
நிரூபணம் :

கொடுக்கப்பட்டவை : ΔABCல், AB ன் மீது D ம், ACன் மீது E ம் உள்ளது.
அமைப்பு : DE|| BC வரைக
நிரூபிக்க : AD/DB=AE/EC

கோண இருசமவெட்டி தேற்றம்

கூற்று :
ஒரு முக்கோணத்தின் ஒரு கோணத்தின் உட்புற இருசம வெட்டியானது அக்கோணத்தின் எதிர்பக்கத்தை உட்புறமாக அக்கோணத்தினை அடக்கிய பக்கங்களின் விகிதத்தில் பிரிக்கும்.
கொடுக்கப்பட்டவை : ΔABC ல், AD என்பது ∠A ன் உட்புற இருசமவெட்டி
நிரூபிக்க : AB/AC=BD/CD
அமைப்பு : AB க்கு இணையாக C வழியாக CE வரைக்