N Board 10th Social Science Solutions Civics Chapter 2 நடுவண் அரசு

10th Social Science Guide நடுவண் அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
விடை:
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

Question 3.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ) மாநிலங்களவை
விடை:
ஆ) மக்களவை

Question 4.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ 25 வயது

Question 5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு .
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) மாநில அரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்
விடை:
ஈ) நாடாளுமன்றம்

Question 6.
கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365
விடை:
ஆ) சட்டப்பிரிவு 360

Question 7.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
விடை:
நிதி

Question 2.
……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
விடை:
பிரதம அமைச்சர்

Question 3.
…………….. அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
விடை:
துணைக் குடியரசுத் தலைவர்

Question 4.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ……………….
விடை:
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

Question 5.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………
விடை:
65

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 7.
தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ……………………
விடை:
28

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i& iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
விடை:
ஈ) i, ii & iii சரியானவை

Question 2.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை
விடை:
அ) ii & iv சரியானவை

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:

  • குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
  • அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.

Question 2.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
விடை:
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

Question 3.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

Question 4.
நிதி மசோதா குறிப்பு வரைக.
விடை:

  • நிதி மசோதா என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாவை குறிக்கிறது.
  • இது பொதுவாக பணம் பெறுதல், பணம் செலவழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • எ.டு. வரிச் சட்டங்கள், கறுப்புப் பணம் தடுப்பு போன்றவை.

 

Question 5.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
விடை:

  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.
விடை:
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:

  • பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
  • மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
  • நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

Question 2.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
விடை:
தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,

  • இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.

மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Question 3.
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
விடை:

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

Question 4.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
விடை:
இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. > மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.

10th Social Science Guide நடுவண் அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………. நாட்டின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாகும்.
அ) உயர் நீதிமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றம்
ஈ) குற்றவியல் நீதிமன்றம்
விடை:
ஆ) உச்ச நீதிமன்றம்

Question 2.
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள் ………………..
அ) ஆலோசனை
ஆ) தனக்கேயுரிய வரையறை
இ) இதர நீதிவரையறை
ஈ) மேல்முறையீட்டு நீதிவரையறை
விடை:
ஆ) தனக்கேயுரிய வரையறை

Question 3.
நடுவண் அரசாங்கத்தின் ………………. அங்கம் நீதித்துறை ஆகும்.
அ) முதலாவது
ஆ) மூன்றாவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 4.
ஒருங்கிணைந்த நீதித்துறையானது ……………… அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளது.
அ) இரட்டை
ஆ) ஒற்றை
இ) இரண்டும்
ஈ) பல
விடை:
ஆ) ஒற்றை

Question 5.
இந்திய உச்சநீதிமன்றம் ……………..ஆம் நாள் துவங்கப்பட்டது.
அ) ஜீன் 28, 1950
ஆ) ஜனவரி 28, 1950
இ) ஜீன் 20, 1940
ஈ) ஜனவரி 20, 1940
விடை:
ஆ) ஜனவரி 28, 1950

Question 6.
உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட ………………. நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
அ) 65
ஆ) 34
இ) 43
ஈ) 25
விடை:
ஆ) 34

Question 7.
உச்சநீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் ………….. ஆகும்.
அ) புதுதில்லி
ஆ சென்னை
இ) ஹைதராபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுதில்லி

Question 8.
இந்திய அரசியலமைப்புச் …………………….. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 25
ஆ) சட்டப்பிரிவு 26
இ) சட்டப்பிரிவு 76
ஈ) சட்டப்பிரிவு 14
விடை:
இ சட்டப்பிரிவு 76

Question 9.
இந்திய நாடாளுமன்றத்தில் . ……. …. பகுதிகள் உள்ளன.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஐந்து
விடை:
ஆ) மூன்று

Question 10.
மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் ………………. ஆகும்.
அ) நிரந்தர அவை
ஆ) புகழ்மிக்க அவை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புகழ்மிக்க அவை

Question 11.
நடுவண் அமைச்சர்களில் கடைசி தரநிலையில் ……………… உள்ள னர்.
அ) காபினெட் அமைச்சர்கள்
ஆ) இராசங்க அமைச்சர்கள்
இ) இணை அமைச்சர்கள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இணை அமைச்சர்கள்

Question 12.
……………… என்பவர் குடியரசு தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
அ) பிரதம அமைச்சர்
ஆ) காபினெட் அமைச்சர்
இ) இணை அமைச்சர்
ஈ) கவர்னர்
விடை:
அ) பிரதம அமைச்சர்

Question 13.
………………. நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது.
அ) புதுதில்லி
ஆ) சீனா
இ) இங்கிலாந்து
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இங்கிலாந்து

Question 14.
63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் ……………… வகிக்கிறார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) கவர்னர்
இ) துணை குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
இ துணை குடியரசுத் தலைவர்

Question 15.
குடியரசுத் தலைவர் ஆண்டிற்கு …………….. முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஒரு
விடை:
இ இரண்டு

Question 16.
நடுவண் ……………… ஆனது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சட்டமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவண் அரசு தலைமையகம் ……………. உள்ளது.
விடை:
புதுதில்லி

Question 2.
நடுவண் அரசு ………………. அம்சங்களைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
……………… நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 4.
……………… பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கக் கூடாது.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 5.
புதுதில்லியிலுள்ள ………………. குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும்.
விடை:
ராஷ்டிரபதி பவன்

Question 6.
இந்திய அரசியலமைப்பு …………. வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டணை பெற்ற ஒருவரின் தண்டணையை குறைக்கவும் அதிகாரம் வழங்குகிறது.
விடை:
சட்டத்தின 72

Question 7.
……………… அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் இரகசியகாப்பும் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 8.
நிர்வாகத்தின் மையக் கரு ………………. ஆகும்.
விடை:
காபினெட்

Question 9.
இந்திய நாடாளுமன்றதில் மேலவை மற்றும் கீழவை கொண்டுள்ளதால் …………… ஆகும்.
விடை:
ஈரவை சட்டமன்றம்

Question 10.
மாநிலங்களவையின் ………………. அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
துணைத் தலைவர்

Question 11.
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ………………. ஆவார்.
விடை:
552

Question 12.
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ……………… அதிகாரம் உண்டு .
விடை:
நாடாளுமன்றத்திற்கே

Question 13.
மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ……………. பின்பற்றப்படுகிறது.
விடை:
வயது வந்தோர் வாக்குரிமை

Question 14.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் …………………. ஆவார்.
விடை:
சபாநாயகர்

Question 15.
ஒரு சட்டத்திணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் ……………. ஆகும்.
விடை:
நீதிப்புனராய்வு

Question 16.
…………….. எதிர்பாரா நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி .
விடை:
எதிர்பாரா செலவு நிதி

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மக்களவையானது நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை ஆகும்.
(ii) தற்சமயம் மக்களவை 543 உறுப்பினர்களை நியமிக்கப்படுகிறது.
(iii) ஆங்கிலோ – இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
(iv) தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
ஆ) iii) மற்றும் iv) சரி

Question 2.
(i) நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அமைதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(ii) அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியும்.
(iii) எதிர்பார்த்த செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
(iv) ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
இ i) மற்றும் iv) சரி

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
முடிவு வாக்கு என்றால் என்ன?
விடை:
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்.

இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது.

அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

Question 2.
மாநிலங்களவை குறிப்பு எழுதுக.
விடை:
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டது.

இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அணுமூலம் கொள்ளலாம்.

Question 3.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

Question 4.
இராணுவ அதிகாரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • அவர் சட்டத்தின்படி ராணுவத்தை வழிநடத்துகிறார்.

Question 5.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
  • மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
  • இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.
  • எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

Question 2.
இந்திய குடியரசுத் தலைவரின் நிதி மற்றும் இராஜதந்திர அதிகாரங்களை விவரி.
விடை:

  • நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது.
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

இராஜதந்திர அதிகாரங்கள்:
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார்.

வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

The Complete Educational Website