TN 10 SST

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

TN Board 10th Social Science Solutions History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
அ) கால்டுவெல்
ஆ) F.W. எல்லிஸ்
இ) சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
விடை:
இ சீகன்பால்கு

Question 2.
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R. அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம்.சி. ராஜா
விடை:
அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.
அ) 1918
ஆ) 1917
இ) 1916
ஈ) 1914
விடை:
அ) 1918

Question 4.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
அ) பணியாளர் தேர்வு வாரியம்
ஆ) பொதுப் பணி ஆணையம்
இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ) பணியாளர் தேர்வாணையம்
விடை:
அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ) எம்.சி. ராஜா
ஆ) இரட்டை மலை சீனிவாசன்
இ) டி.எம். நாயர்
ஈ) பி. வரதராஜூலு
விடை:
அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.
விடை:
தமிழ்

Question 2.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.
விடை:
F.W. எல்லிஸ்

Question 3.
……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
விடை:
மறைமலையடிகள்

Question 4.
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.
விடை:
நீதிக்கட்சி

Question 5.
சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.
விடை:
பரிதிமாற்கலைஞர்

Question 6.
…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
விடை:
ஆபிரகாம் பண்டிதர்

Question 7.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………
விடை:
டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி
இ) (iv) சரி
ஈ) (ii), (iii) ஆகியன சரி
விடை:
ஆ) (i), (iii) ஆகியன சரி

Question 2.
கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.
ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .
விடை:
அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின.

Question 2.
தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பை நன்குப் புலப்படுத்துக.
விடை:

  • தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ – ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழன் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Question 3.
தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டிலிடவும்.
விடை:
சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின்
புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

Question 4.
நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
விடை:

  • நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
  • அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

Question 5.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

Question 6.
பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
விடை:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
விடை:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை.தாமோதரனார் உ.வே. சாமிநாதர் போன்றவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.

சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர் மறைமலையடிகள். சுப்பிரமணிய பாரதி. ச.வையாபுரி. கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

வி. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

பண்டிதர் அயோத்திதாசரும் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.

Question 2.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்.
விடை:
1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர்.

ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது.

இச்சமூகத் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது.

சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையம் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன.

நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது.

இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப்பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

Question 3.
தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈவே.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
விடை:
பெரியார் ஈ.வெ.ரா:

  • பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார்.

பெரியார் ஒரு பெண்ணியவாதி:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன. என்றார்.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் “பெண் ஏன் அடிமையானாள்?” என்பதாகும்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Question 2.
……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அ) 1999
ஆ) 1909
இ) 1990
ஈ) 1899
விடை:
ஆ) 1909

Question 3.
தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.
அ) பிரான்ஸ்
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 4.
சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அ) 1996
ஆ) 1932
இ) 1923
ஈ) 1899
விடை:
இ 1923

Question 5.
……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அ) பெரியார்
ஆ) காமராஜ்
இ) காந்திஜி
ஈ) நேரு
விடை:
அ) பெரியார்

Question 6.
M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு
ஆ) கீழ் வகுப்பு
இ) மேல் வகுப்பு
ஈ) நடுத்தர வகுப்பு
விடை:
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.
அ) ஆக்ரா
ஆ) கொல்கத்தா
இ) பம்பாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பம்பாய்

Question 8.
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.
அ) M.C. ராஜா
ஆ) M. சிங்காரவேலர்
இ) அடிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) M. சிங்காரவேலர்

Question 9.
இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) இவையெல்லாம்
விடை:
ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.
விடை:
கருத்தியல்

Question 2.
தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.
விடை:
தமிழ் மறுமலர்ச்சி

Question 3.
……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
விடை:
பௌத்தம்

Question 4.
………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.
விடை:
மறைலை அடிகள்

Question 5.
நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.
விடை:
இந்து சமய அறநிலை

Question 6.
பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.
விடை:
ஆணாதிக்க

Question 7.
1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.
விடை:
ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.
……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
விடை:
பெண்களின் விடுதலை

Question 9.
………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.
விடை:
மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.
மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.
விடை:
15 ஆண்டுகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.
காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 2.
கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.
காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ஆ) காரணம் சரி, கூற்று தவறு

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?
விடை:
சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

Question 2.
நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.
விடை:

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

Question 3.
இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.
விடை:

  • இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக
  • ராவ்சாகிப் (1926),
  • ராவ் பகதூர் (1936),
  • திவான் பகதூர் (1936)
  • ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

Question 4.
பெண்கள் இயக்கங்கள் யாவை?
விடை:

  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)
  • அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

Question 5.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • முத்துலட்சுமி அம்மையார்,
  • நாகம்மை ,
  • கண்ணம்மா,
  • நீலாவதி,
  • மூவலூர் இராமாமிர்தம்,
  • ருக்மணி அம்மாள்,
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்,
  • நீலாம்பிகை மற்றும்
  • சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் இயக்கங்களைப் பற்றி விவரிக்க.
விடை:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.

அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம், அகில இந்தியப் பெண்கள் மாநாடு ஆகியவை முக்கியமானவையாகும்.

இந்தியப் பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.

இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டனர்.

பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினார்.

தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *