TN 10 SST

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

TN Board 10th Social Science Solutions History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T.M. நாயர்
ஆ) P. ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A. நடேசன்
விடை:
ஆ) P. ரங்கையா

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு
விடை:
ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P. வாடியா
ஈ) G.S. அருண்டேல்
விடை:
அ) அன்னிபெசன்ட்

Question 4.
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்தூரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈவெ.ரா
விடை:
அ) S. சத்தியமூர்த்தி

Question 5.
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C. இராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்
விடை:
ஈ) T. பிரகாசம்

Question 6.
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
விடை:
இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.
விடை:
T. முத்துச்சாமி

Question 2.
………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
விடை:
பாரத மாதா சங்கம்

Question 3.
சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.
விடை:
B.P. வாடியா

Question 4.
சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..
விடை:
C. இராஜாஜி

Question 5.
……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
விடை:
யாகுப் ஹசன்

Question 6.
1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
விடை:
ஆரியா (எ) பாஷ்யம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (iii) மட்டும் சரி
இ) (iv) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

Question 2.
i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii) மட்டும் சரி
ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
இ (ii) மட்டும் சரி

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.
விடை:

  • தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

Question 2.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

Question 3.
இந்தியாவின் விடுதலைப் பேராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
விடை:

  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது இந்தியா ஒரு தேசம் எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
விடை:
சுதேசி இயக்கம் :

  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ.உ. சிதம்பரனார். V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
    மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துக்களைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின.
  • சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
விடை:
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

  • பிராமணரல்லாதோர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
  • 1912இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
  • அதன் செயலராக (. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
  • 1916 ஜீன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கா ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினர்.
  • 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் – சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Question 3.
சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
விடை:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்:
காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.

ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.

1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.

இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.

காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.

T.S.S. ராஜன் திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்:

  • T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
  • 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்:
1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.
அ) நவம்பர் 1884
ஆ) டிசம்பர் 1994
இ) டிசம்பர் 1884
ஈ) நவம்பர் 1994
விடை:
ஆ) டிசம்பர் 1994

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.
அ) 1886
ஆ) 1898
இ) 1868
ஈ) 1888
விடை:
அ) 1886

Question 3.
இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
அ) 22
ஆ) 72
இ) 83
ஈ) 17
விடை:
ஆ) 72

Question 4.
மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.
அ) ஆங்கிலம்
ஆ) தமிழ்
இ) ஹிந்தி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Question 5.
புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.
அ) தமிழ்நாடு
ஆ) பாண்டிச்சேரி
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) பாண்டிச்சேரி

Question 6.
…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
அ) 1912
ஆ) 1921
இ) 1812
ஈ) 1821
விடை:
அ) 1912

Question 7.
……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.
அ) சுப்பராயலு
ஆ) T.M. நாயர்
இ) சி. நடேசனார்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சுப்பராயலு

Question 8.
தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
அ) மே 17, 2000
ஆ) 17 ஏப்ரல் 1920
இ) 12 ஏப்ரல் 1922
ஈ) 25 ஏப்ரல் 1930
விடை:
ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.
………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.
அ) 13 ஜனவரி 1922
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930)
ஈ) அக்டோபர் 1919
விடை:
அ) 13 ஜனவரி 1922

Question 10.
……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.
அ) காந்திஜி
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ராஜாஜி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.
விடை:
G. சுப்ரமணியம்

Question 2.
தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.
விடை:
சென்னை மகாஜன சபை

Question 3.
………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.
விடை:
சுதேசமித்ரன், தி ஹிந்து

Question 4.
…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விடை:
சுதேசி

Question 5.
சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.
விடை:
பாண்டிச்சேரி

Question 6.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.
விடை:
ஆஷ்

Question 7.
……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.
விடை:
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.
…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.
விடை:
அன்னிபெசன்ட்

Question 9.
1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.
விடை:
பனகல் அரசர்

Question 10.
1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
விடை:
கருப்புச் சட்டத்தை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.
காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி
விடை:
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று: சைமன் குழு இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
காரணம்: ஒரு இந்தியர்கள் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை என்பதால்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
ஜார்ஜ் ஜோசப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றி சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோசாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர்.

Question 3.
நீல் சிலை அகற்றும் போராட்டம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  • 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

Question 4.
திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து எழுதுக.
விடை:

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்தியவண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.
  • பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார்.
  • ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழ்ப்படுகிறார்.

Question 5.
முதல் காங்கிரஸ் அமைச்சரவை பற்றிக் கூறு.
விடை:

  • 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
  • நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
  • தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சென்னை மகாஜன சபை மற்றும் மிதவாதக் கூட்டத்தை விவரி.
விடை:
சென்னை மகாஜன சபை:

  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு , P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

மிதவாதக் கூட்டம் :

  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது.
  • தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VII. செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *