Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.1
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.1
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) மிகச் சிறிய ஏழிலக்க எண் ________,
விடை:
1000000
(ii) மிகப் பெரிய எட்டு இலக்க எண் ________,
விடை:
99999999
(iii) 7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு ________,
விடை:
ஐந்து ஆயிரம்
(iv) 76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம் ________,
விடை:
7000000 + 600000 + 70000 + 900 + 5
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.
விடை:
சரி
(ii) ஓரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஓரிலக்க எண்ணாகும்
விடை:
தவறு
(iii) மூவிலக்க எண்ணின் முன்னி எப்போதும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும்
விடை:
தவறு
(iv) 88888 = 8 × 10000 + 8 × 100 + 8 × 10 + 8 × 1
கேள்வி 3.
கொடுத்துள்ளதை வரிசைப்படுத்தி முடிக்க.
பத்துக் கோடி, கோடி, பத்து இலட்சம்,
________, ________, ________, ________, ________,
விடை:
ஒரு இலட்சம், பத்தாயிரம், ஒரு ஆயிரம், நாறு, பத்து, ஒன்று
கேள்வி 4.
மிகச் சிறிய ஆறிலக்க எண்களில் எத்தனை பத்தாயிரங்கள் உள்ளன?
விடை:
மிகச் சிறிய ஆறிலக்க எண் = 1,00,000
ஒரு லட்சம் =10 பத்தாயிரம்
கேள்வி 5.
5, 2, 0,7, 3 என்ற இலக்கங்களைப் பயன்
படுத்தி மிகப் பெரிய ஐந்திலக்க எண்ணையும், மிகச் சிறிய ஐந்திலக்க எண்ணையும் எழுதுக,
விடை:
கொடுக்கப்பட்ட இலக்கங்கள் = 5,2,0,7,3;
மிகப் பெரிய ஐந்திலக்க எண்- 75320;
மிகச் சிறிய ஐந்திலக்க எண்- 20357
கேள்வி 6.
காற்புள்ளியை உற்று நோக்கி பின்வரும் எண்களில் 7 இன் இட மதிப்பை எழுதுக
(i) 56;74,56,345
(ii) 567,456,345
விடை:
(i) 70,00,000
(ii) 7,000,000
கேள்வி 7.
காற்புள்ளியைப் பயன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
(i) 347056
(ii) 7345671
(iii) 634567105
(iv) 1234567890
விடை:
(i) 347,056
(ii) 7,345,671
(iii) 634,567,105
(iv) 1,234,567,890
கேள்வி 8.
மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, தவறு அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறை களில் காற்புள்ளி இடுக.
விடை:
மிகப் பெரிய ஆறிலக்க எண்- 9,99,999 இந்திய முறை: 9,99,999 (ஒன்பது இலட்சத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூற்று ஒன்பது
பன்னாட்டு முறை: 999,999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது)
கேள்வி 9.
பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறை யில் எழுதுக.
(i) 75,32,105
(ii) 9,75,63,453
விடை:
(i) எழுபத்து ஐந்து இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து நூற்று ஐந்து
(ii) ஒன்பது கோடி எழுபத்து ஐந்து இலட்சத்து இரு அறுபத்து மூன்று ஆயிரத்து நானூற்று ஐம்பத்து மூன்று
கேள்வி 10.
பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
(i) 345,678
(ii) 8,343,710
(iii) 103,456,789
விடை:
(i) முன்னூற்று நாற்பத்து ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து எட்டு
(ii) எட்டு மில்லியன் முன்னூற்று நாற்பத்து மூன்று ஆயிரத்து எழுநூற்று பத்து
(iii) நூற்று மூன்று மில்லியன் நானூற்று ஐம்பத்து ஆறு ஆயிரத்து எழுநூற்று எண்பத்து ஒன்பது
கேள்வி 11.
எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக
(i) இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது
(ii) அறுபத்து ஆறு மில்லியன் முன்னூற்று நாற்பத்தைந்து ஆயிரத்து இருபத்து ஏழு
(iii) எழுநூற்று எண்பத்து ஒன்பது மில்லியன் நூற்று பதிமூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்து ஆறு
விடை:
(i) 2,30,51,980
(ii) 66,345,027
(iii) 789,213,456
கேள்வி 12.
தமிழ்நாட்டில், இருபத்து ஆறாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக.
விடை:
26,345
கேள்வி 13.
இந்தியத் தொடர் வண்டிப் போக்கு வரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர். இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக.
விடை:
1,000,000 (ஒரு மில்லியன்)
புறவய வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கேள்வி 14.
1 பில்லியனுக்குச் சமமானது
அ) 100 கோடி
ஆ) 100 மில்லியன்
இ 100 இலட்சம்
ஈ)10,000 இலட்சம்
விடை:
(அ) 100 கோடி
கேள்வி 15.
10 மில்லியனின் தொடரி
அ) 1000001
ஆ) 10000001
இ 9999999
ஈ) 100001
விடை:
(ஆ) 10000001
கேள்வி 16.
99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
அ) 90000
ஆ 1
இ 2
ஈ) 99001
விடை:
(இ)2
கேள்வி 17.
6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்
அ) 6 × 10000 + 7 × 1000 + 9 × 100 + 5 × 1
ஆ) 6 × 10000 + 7 × 1000 + 0 × 100 + 9 × 100 + 0 × 10 + 5 × 1
இ 6 × 1000000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1
ஈ) 6 × 100000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1
விடை:
ஈ) 6 × 100000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1