TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.2

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.2

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களில் உரிய “>” அல்லது “<” அல்லது “=. “குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
(i) 48792 ________ 48972
விடை:
<

(ii) 1248654 ________ 1246854
விடை:
>

(iii) 658794 ________ 658794
விடை:
=

 

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.
விடை:
தவறு

(ii) 8, 6, 0, 9 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கிடைக்கப் பெறும் மிகப் பெரிய 4 இலக்க எண் 9086 ஆகும்.
விடை:
தவறு

(iii) நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை 9000
விடை:
சரி

கேள்வி 3.
1386787215 ,13769889() , 86720560
என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது?
விடை:
மிகப்பெரிய எண் = 1386787215
மிகச்சிறிய எண் = 86720560

கேள்வி 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக
128435 ,10835. 21354 , 6348 , 25840
விடை:
128435 > 25840 > 21354 > 10835 > 6348

 

கேள்வி 5.
பத்து லட்சம் இடத்தில் 6 என்ற எண்ணும் பத்தாயிரம் இடத்தில் 9 என்ற எண்ணும் உள்ளவாறு ஏதேனும் ஓர் எட்டு இலக்க எண்ணை எழுதுக.
விடை:
76594231 , 86493725

கேள்வி 6.
இராஜன் 4,7 மற்றும் 9 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி 3 இலக்க எண்களை எழுது கிறான். எத்தனை எண்களை அவனால் எழுத முடியும்?
விடை:
974, 947, 479,497, 749 ,794

கேள்வி 7.
என்னுடைய பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை ) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை ) கடவுச் சொல் காண்க.
விடை:
4698

கேள்வி 8.
அஞ்சலகக் குறியீட்டு எண் 6 இலக்கங்களைக் கொண்டது. இதன் முதல் 3 இலக்க எண்கள் 6, 3 மற்றும் 1, ஆகும். மேலும் 0, 3 மற்றும் 6 என்ற மூன்று இலக்கங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய அஞ்சலகக் குறியீட்டு எண்களை அமைக்க.
விடை:
மிகப்பெரிய அஞ்சலகக் குறியீட்டு எண் – 631603
மிகச்சிறிய அஞ்சலகக் குறியீட்டு எண் – 631036

 

கேள்வி 9.
தமிழ் நாட்டிலுள்ள மலைகளின் உயரங்கள் (மீட்டரில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.2 1
(i) மேற்கண்ட மலைகளில் உயரமான மலை எது?
(ii) உயரத்தைக் கொண்டு மலைகளின் பெயர்களை மிகப் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப் படுத்தி எழுதவும்.
(iii) ஆனைமுடி மற்றும் மகேந்திர கிரி ஆகிய மலைகளின் உயரங்களின் வேறுபாடு என்ன?
விடை:
(i) ஆனைமுடி
(ii) ஆனைமுடி, தொட்ட பெட்டா, வெள்ளியங்கிரி, மகேந்திர கிரி
(iii) 1048 மீ

புறவய வினாக்கள்

கேள்வி 10.
பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதி லிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்
பட்டு உள்ளது?
அ) 1468 ,1486 ,1484
ஆ) 2345 ,2435,2235
இ 134205 ,134208 ,154203
ஈ) 383553 ,383548 , 383642
விடை:
இ) 134205 ,134208 154203

கேள்வி 11.
அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
அ) 1489000 மற்றும் 1492540
ஆ) 1489000 மற்றும் 1490540
இ 1490000 மற்றும் 1490100
ஈ) 1480000 மற்றும் 1490000
விடை:
அ) 1489000 மற்றும் 1492540

 

கேள்வி 12.
இந்திய நாளிதழ் படிப்பவர்கள் கணக்கீட்டின் படி, 2018 இல் விற்ற நாளிதழ்களின்
எண்ணிக்கையைக் காட்டும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?

அ) 8
ஆ) 52
இ 77
ஈ) 26
விடை:
ஈ) 26

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *