TN 6 Maths

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Ex 3.1

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Ex 3.1

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Ex 3.1

Question 1.
ஒரு பள்ளி நிர்வாகம் மரப்பொருள்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறது.

வினாக்கள் :
i) அங்காடியின் பெயர் என்ன?
விடை :
முல்லை மரச்சாமான்கள் அங்காடி

ii) பட்டியல் எண் என்ன?
விடை :
பட்டியல் எண் : 728

iii) ஒரு கரும்பலகையின் விலை என்ன?
விடை :
₹ 3000

iv) எத்தனை சோடி அமரும் மற்றும் எழுதும் பலகைகளைப் பள்ளி வாங்கியது?
விடை :
50 சோடிகள்

v) பட்டியலின் மொத்தத் தொகையைச் சரிபார்.
விடை :
சரியாக உள்ளது.

 

Question 2.
சிதம்பரம், மருது நூல் அங்காடியிலிருந்து 12.04.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கு 507 ஆம் எண்ணுடைய பட்டியல் தயாரிக்க.

ஒன்று ₹ 55 வீதம் சுப்பிரமணியப் பாரதியார் நூல்கள் 10, ஒன்று ₹ 75 வீதம் திருவள்ளுவர் நூல்கள் 15, ஒன்று ₹ 60 வீதம் வீரமாமுனிவர் நூல்கள் 12 மற்றும் ஒன்று ₹ 70 வீதம் திரு.வி.க. நூல்கள் 12.

நாள் :

Question 3.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

விடை :

(i) அடக்கவிலை = ரூ 100
விற்பனை விலை = ரூ 120
அடக்கவிலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
= ரூ 120 – ரூ 100 = ரூ 20

ரூ 20 = விற்பனை விலை – ரூ 120
ரூ 20 + ரூ 120 = விற்பனை விலை இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
விற்பனை விலை = ரூ.140 ‘
இலாபம் = ரூ 20

(ii) அடக்கவிலை = ரூ.110
விற்பனை விலை = ரூ 120
அடக்கவிலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
= ரூ 120 – ரூ 110 = ரூ 10

(iii) அடக்கவிலை = ரூ.120
இலாபம் = ரூ.20
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
ரூ.20 = விற்பனை விலை – ரூ.120
ரூ.20 + ரூ.120 = விற்பனை விலை
விற்பனை விலை = ரூ.140

(iv) அடக்கவிலை = ரூ 100
விற்பனை விலை = ரூ.90
அடக்கவிலை > விற்பனை விலை
நட்டம் = அடக்கவிலை – விற்பனை விலை
= ரூ100 – ரூ 90 = ரூ 10

(v) அடக்கவிலை = ரூ 120
இலாபம் = ரூ 25
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
ரூ25 = விற்பனை விலை – ரூ 120
ரூ 25 + ரூ120 = விற்பனை விலை
ரூ.145 = விற்பனை விலை
விற்பனை விலை = ரூ 145

 

Question 4.
பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

விடை :
இலாபம் = விவி – அவி
= ரூ 130 – ரூ 110

(i) அடக்கவிலை = ரூ 110
குறித்த விலை = ரூ 130
தள்ளுபடி இல்லை எனில்
குறித்த விலை = விற்பனை விலை
விற்பனை விலை = ரூ 130

(ii) அடக்கவிலை = ரூ 110
குறித்த விலை = ரூ 130
தள்ளுபடி = ரூ 10

இலாபம் = விவி – அவி
= ரூ 120 – ரூ 110
= ரூ 10
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 130 – ரூ 10 = ரூ 120

(iii) அடக்கவிலை = ரூ 110
குறித்த விலை = ரூ 130
தள்ளுபடி = ரூ 30

நட்டம் = அவி – விவி
= ரூ 110 – ரூ 100 = ரூ 10
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 130 – ரூ 30 = ரூ 100

(iv) அடக்கவிலை = ரூ 110
குறித்த விலை = ரூ 120
நட்டம் = ரூ 10
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
விற்பனை விலை = அடக்க விலை – நட்டம்
= ரூ 110 – ரூ. 10
= ரூ 100
தள்ளுபடி = குறித்த விலை – விற்பனை விலை
= ரூ 120 – ரூ 100
= ரூ 20

(v) குறித்த விலை = ரூ 120
தள்ளுபடி = ரூ10
இலாபம் = ரூ 20
நட்டம் = ரூ 0

விற்பனை விலை
= குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 120 – ரூ 10 = ரூ 110
இலாபம் = ரூ 20
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
ரூ 20 = ரூ 110 – அடக்க விலை
அடக்கவிலை = விற்பனைவிலை – இலாபம்
= ரூ 110 – ரூ 20 = ரூ 90

 

Question 5.
இராணி ஒரு சோடி வளையல்களை ₹ 310க்கு வாங்கினார். அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையலை ₹ 325 விற்கிறார் எனில் இராணியின் இலாபம் அல்லத நட்டம் காண்க.
விடை :
அடக்க விலை = ரூ 310,
விற்பனை விலை = ரூ.325.
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை
= ரூ 325 – ரூ.310 = ரூ 15

Question 6.
சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ₹ 750க்கு வாங்கினார். இது அவருக்குப் பொருந்தவில்லை அதை அவருடைய நண்பருக்கு ₹ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
அடக்க விலை = ரூ750
விற்பனை விலை = ரூ 710
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
= ரூ750 – ரூ 710 = ரூ 40

Question 7.
சோமு ஓர் உந்து வண்டியை மற்றொருவரிடமிருந்த ₹28, 000 க்கு வாங்கி, அதனைப் பழுது பார்க்க ₹2000 செலவு செய்தார். பிறகு அதனை ₹30,000க்கு விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
அடக்க விலை = ரூ 28,000 + ரூ 2,000
அடக்க விலை = ரூ 30,000
விற்பனை விலை = ரூ 30,000
அடக்க விலை = விற்பனை விலை
இலாபமும் இல்லை / நட்டமும் இல்லை

 

Question 8.
முத்து ஒரு மகிழுந்து வண்டியை ₹ 8,50,000 க்கு வாங்கினார், அதை ₹ 25,000 இலாபத்திற்கு விற்பனை செய்ய விரும்பினார் எனில் மகிழுந்தின் விற்பனை விலை என்னவாக இருக்கும்?
விடை :
அடக்க விலை = ரூ8,50,000
இலாபம் = ரூ 25,000
விற்பனை விலை = அடக்க விலை + இலாபம்
= ரூ 8,50,000 + ரூ 25,000 = ரூ 8,75,000

Question 9.
வளர்மதி தன்னுடைய முத்து மாலையை ₹ 30,000 க்கு விற்பனை செய்து, அதனால் இலாபம் ₹ 5000 பெறுகிறார் எனில் முத்து மாலையின் அடக்க விலையைக் காண்க.
விடை :
விற்பனை விலை = ரூ 30,000
இலாபம் = ரூ 5,000
அடக்க விலை = விற்பனை விலை – இலாபம்
= ரூ 30,000 – ரூ 5,000 = ரூ 25,000)

Question 10.
குணா தனது பொருளை₹325 எனக் குறித்து₹30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க. விடை :
குறித்த விலை = ரூ 325
தள்ளுபடி = ரூ 30 விற்பனை
விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 325 – ரூ 30 = ரூ 295

 

Question 11.
ஒருவர் ஒரு நாற்காலியை ரூ. 1500க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ. 100 அளித்த பின் ரூ. 250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு?
விடை :
அடக்க விலை = ரூ 1,500
இலாபம் = ரூ 250
விற்பனை விலை = அடக்க விலை + இலாபம்
= ரூ 1,500 + ரூ 250 = ரூ 1,750
தள்ளுபடி = ரூ 100
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
குறித்த விலை = விற்பனை விலை + தள்ளுபடி
= ரூ 1,750 + ரூ 100 = ரூ 1,850

Question 12.
அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு ₹ 300 என விலை குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் ₹ 275 க்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு அவரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி எவ்வளவு?
விடை :
குறித்த விலை = ரூ 300
விற்பனை விலை = ரூ 275
தள்ளுபடி = குறித்த விலை – விற்பனை விலை
= ரூ 300 – ரூ 275 = ரூ 25

 

Question 13.
வளவன் 24 முட்டைகளை ₹96 க்கு வாங்கினார். அவற்றில் 4 முட்டைகள் உடைந்து விட்டன. மீதியை விற்பனை செய்ததில் ₹ 36 நட்டம் எனில் ஒரு முட்டைக்கான விற்பனை விலை எவ்வளவு?
விடை :
24 முட்டைகளின் விலை = ரூ 96
நான்கு முட்டைகள் உடைந்து விட்டன எனில்,
மீதமுள்ள முட்டைகள் = 24 – 4 = 20
நட்டம் = ரூ 36 எனில், 20 முட்டைகளின் விற்பனை விலை
விற்பனை விலை = அடக்க விலை – நட்டம்
= ரூ 96 – ரூ 36
= ரூ 60 ஒரு முட்டையின் விலை = ரூ60/20 = ரூ 3

Question 14.
மங்கை ஒரு அலை பேசியை ரூ. 12585க்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது. அதைச் சரி செய்ய ரூ. 500 செலவு செய்து அதை அவர் ரூ.7,500க்கு விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
அடக்க விலை = ரூ 12,585 + ரூ 500 = ரூ 13,085
விற்பனை விலை = ரூ.7,500
அடக்க விலை > விற்பனை விலை
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
= ரூ 13,085 – ரூ 7,500 = ரூ 5,585

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *