Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்
TN Board 6th Science Solutions Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்
6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
குளம் வாழிடத்திற்கு உதாரணம்
அ) கடல்
ஆ) நன்னீர் வாழிடம்
இ) பாலைவனம்
ஈ) மலைகள்
விடை:
ஆ) நன்னீர் வாழிடம்
Question 2.
இலைத் துளையின் முக்கிய வேலை ______
அ) நீரைக் கடத்துதல்
ஆ) நீராவிப்போக்கு
இ ஒளிச் சேர்க்கை
ஈ) உறிஞ்சுதல்.
விடை:
இ) ஒளிச் சேர்க்கை
Question 3.
நீரை உறிஞ்சும் பகுதி ____ ஆகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) பூ
விடை:
அ) வேர்
Question 4.
நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்
அ) நீர்
ஆ) நிலம்
இ) பாலைவனம்
ஈ) மலை
விடை:
அ) நீர்
II. சரியா, தவறா – தவறு எனில் சரியான விடையை எழுதுக
Question 1.
தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்
விடை:
தவறு
பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
Question 2.
தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
விடை:
தவறு
பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.
Question 3.
தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.
விடை:
சரி
Question 4.
மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
விடை:
தவறு
மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.
Question 5.
வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
விடை:
தவறு
முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.
Question 6.
பசுந் தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.
விடை:
சரி
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
Question 1.
புவி பரப்பில் நீரின் அளவு ………
விடை:
1.70
Question 2.
பூமியில் மிகவும் வறண்ட பகுதி ……..
விடை:
பாலைவனங்கள்
Question 3.
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் …….. வேலை
விடை:
வேரின்
Question 4.
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ………
விடை:
இலைகள்
Question 5.
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
விடை:
இருவித்திலைத்
IV. பொருத்துக
V. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.
Question 1.
இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்
விடை:
வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்
Question 2.
நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
விடை:
ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு
VI. மிகக் குறுகிய வினா.
Question 1.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
விடை:
நில வாழிடம் – நீர் வாழிடம் என வகைப்படும்.
Question 2.
பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க.
விடை:
சப்பாத்திக்கள்ளி, ஹைடிரில்லா, மா, ரோஜா.
சப்பாத்திக்கள்ளி தாவரங்கள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில் நீரைச் சேமிக்கின்றன.
Question 3.
வாழிடம் என்பதை வரையறு.
விடை:
ஒவ்வொரு உயிரினமும், உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.
(உ.ம்) நன்னீர் வாழிடம் – ஆறுகள், குளங்கள், குட்டைகள்.
Question 4.
இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
விடை:
இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
VII. குறுகிய வினா.
Question 1.
மல்லிகைக் கொடி ஏன் பின்னுகொடி என அழைக்கப்படுகிறது?
விடை:
நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. உம்) பட்டாணி.
Question 2.
ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
விடை:
Question 3.
நிலவாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.
விடை:
Question 4.
உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.
விடை:
செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை, முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.
VIII. விரிவான வினா.
Question 1.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைத் தருக.
விடை:
- ஊன்றுதல் – தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.
- உறிஞ்சுதல் – மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
- சேமிப்பு – சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது. (எ.கா) கேரட்.
தண்டின் பணிகள்
- தாங்குதல் – கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.
- கடத்தல் – நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.
- இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
- சேமித்தல் – கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.
Question 2.
கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.
விடை:
6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தோர்ந்தெடுத்து எழுதுக
Question 1.
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
அ) ஆணிவேர்
ஆ) சல்லிவேர்
இ) வேற்றிடவேர்
ஈ) கொத்துவேர்கள்
விடை:
ஆ) சல்லிவேர்
Question 2.
தண்டில் இலை உருவாகும் பகுதி,
அ) கணு
ஆ) கணுவிடை
இ) நுனிமொட்டு
ஈ) பக்கமொட்டு
விடை:
அ) கணு
Question 3.
இலையின் காம்பு
அ) மஞ்சரிக்காம்பு
ஆ) கூட்டிலைக்காம்பு
இ) பூக்காம்பு,
ஈ) இலைக்காம்பு
விடை:
ஈ) இலைக்காம்பு
Question 4.
இலை பச்சையாகக் காணப்படுவதற்கான காரணம்
அ) குளோரன்கைமா
ஆ) பச்சையம்
இ) இலைத்தாள்
ஈ) இலைத்துளை
விடை:
ஆ) பச்சையம்
Question 5.
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
அ) 2 மீட்டர்
ஆ) 2.5 மீட்டர்
இ) 3 மீட்டர்
ஈ) 1 மீட்டர்
விடை:
இ) 3 மீட்டர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
Question 1.
தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு …… என்று பெயர்
விடை:
தகவமைப்புகள்
Question 2.
இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும், மிகப் பெரிய மணல் குன்றுகளாலான பாலைவன …….. எனப்படும்.
விடை:
தார் பாலைவனம்
Question 3.
இலையின் மையத்தில் காணப்படும் நரம்புக்கு……. என்று பெயர்.
விடை:
நடு நரம்பு
Question 4.
ஒரு உயிரினத்தில் அதன் சூழலுக்கேற்ப காணப்படும் மாற்றத்திற்கு ………. என்று பெயர்.
விடை:
மாறுபாடு
Question 5.
காகிதப்பூ ……என்று அழைக்கப்படுகிறது
விடை:
போகன் வில்லா
III. சரியாக வரிசைப்படுத்துக
Question 1.
கடல், ஏரி, ஆறு, குளம்
விடை:
குளம், ஏரி, ஆறு, கடல்
Question 2.
கணுவிடை-கணு- கோணமொட்டு-நுனிமொட்டு
விடை:
நுனிமொட்டு – கோணமொட்டு-கணு- கணுவிடை
IV. மிகக் குறுகிய வினா
Question 1.
இலையின் புற அமைப்பைப் படம் வரைக – பாகங்களைக் குறிக்க
விடை:
Question 2.
பூக்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்து
விடை:
பூக்களின் அடிப்படையில் தாவரங்கள் இருவகையாகப் பிரிக்கலாம்
- பூக்கும் தாவரங்கள் எ.கா. ரிக்ஸியா
- பூவாத தாவரங்கள் எ.கா. மா ம்
Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களை வேறுபடுத்து
விடை:
- ஜிம்னோஸ்பெர்ம்கள் – பூவாத தாவரங்கள் ஆனால் விதைகளை உருவாக்கும் (எ.கா) பைனஸ், சைகஸ்
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் : பூக்கும் தாவரங்கள் விதைகளை உருவாக்கும். (எ.கா) மா- ரோஜா
Question 4.
காக்டஸ்- தாவரம்-குறிப்பு வரைக
விடை:
- இது ஒரு பாலைவன வாழ் தாவரம் (இங்கு மழை அளவு குறைவு (அ) காணப்படாது)
- ‘தண்டு – நீரை சேமிக்கும்.
- இலைகள் – முட்களாக மாறுபாடடைந்து காணப்படும்.
- வேர்கள் – நன்கு வளர்ச்சியடைந்து மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.
Question 5.
முட்கள் என்றால் என்ன?
விடை:
சில தாவரங்களில் இலைகள் அல்லது பாகங்கள் முட்களாக மாறுபாடடைந்துள்ளன. இவை நீராவிப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைக் குறைக்கின்றன.
(எ.கா) அகேவ் (இலை நுனி மற்றும் விளிம்பு முட்களாக மாறுபாடடைந்துள்ளது)
V. விரிவான விடையளி
Question 1.
பற்றுக்கம்பிக் கொடி-விவரி
விடை:
- பற்றுக்கம்பி என்பது சில மெலிந்த தண்டுடைய தாவரங்களில், காணப்படுகிறது.
- இது ஆதாரத்தைச் சுற்றிக் கொண்டு அத்தாவரங்கள் மேலே ஏறுவதற்கு ஏதுவாக உள்ளது.
- இனிப்புப்பட்டாணி – இதில் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
- பாகற்காய் – இதில் கோணமொட்டு பற்றுக்கம்பிகளாக மாற்றம் அடைந்து மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.
Question 2.
பாலைவன வாழிடம் குறித்தெழுது
விடை:
- பூமியின் மிக வறண்ட பகுதி.
- மழை அளவு சராசரி 25 செ.மீக்கும் குறைவாக உள்ளது.
- பூமியில் சுமார் 20% பாலைவனமாக உள்ளது.
- தாவரங்கள் – கடுமையான வறட்சியைத் தாங்கும் தகவமைப்புடையவை.
- தடிமனான இலைகள் நீரையும் கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கின்றன.
- தண்டுகள் – நீரை சேமிக்கின்றன. எ.கா. காக்டஸ் (கள்ளி வகைகள்)
- இலைகள் – முட்களாக மாறுபாடடைந்துள்ளன. எ.கா. ஒபன்ஷியா.
மனவரைபடம்