TN 6 Science

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

TN Board 6th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம்

6th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை:
அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன்
ஆ) ஜில்
இ) வோல்ட்
ஈ) செல்சியஸ்
விடை:
ஆ) ஜூல்

 

Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40°

Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ). இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை
அதிகமான, குறைவான

Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்

Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்

Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை:
வெப்பச் சமநிலையில்

 

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை:
சரி.

Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும். தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
விடை:
தவறு.

Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
விடை:
தவறு.

Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.

Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
விடை:
தவறு.

 

IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.

Question 1.
கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.
விடை:
போரோசில் கண்ணாடி வெப்பத்திற்கு மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே விரிசல் ஏற்படுவதில்லை.

Question 2.
மின்கம்பங்களில் உள்ள மின்சாரக்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
விடை:
உலோகங்கள் (மின்சாரக்கம்பி) கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும் எனவே தொய்வாகவும், குளிர்காலத்தில் சுருங்குகின்றன எனவே நேராகவும் இருக்கும்.

Question 3.
இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:

  • கடையாணி வெப்பப்படுத்தப்படுவதால் விரிவடைகிறது.
  • ஆணியின் அடிப்பக்கத்தை வெப்பமாக உள்ள போது சுத்தியலால் அடித்து மறுபுறமும் புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும்.
  • குளிரும் போது சுருங்குவதால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.

V. பொருத்துக.

VI. ஒப்புமை தருக.

Question 1.
வெப்பம் : ஜில் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்

Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C

 

Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

 

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:

IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

  1. இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.
  2. மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.
  3. மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங் களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.
  4. இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர்ச்சி அறைக் குள்ளே கடத்தப்படுவதால் இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
விடை:

  1. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் குளிராக உணர்வேன்.
  2. குளிர்கால இரவில் வெளியே காற்றின் வெப்பநிலை குறைவு. அறையினுள் அதிகம்.
  3. ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
  4. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். எனவே அறையினுள் வெப்பநிலை குறைந்து நமக்கு குளிர் ஏற்படும்.

Question 2.
ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்ப நிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
விடை:

  1. நமது உடல் சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும்.
  2. ஏனெனில் வெப்பமானது அதிக வெப்பநிலை உள்ள சுற்றுச் சூழலிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள நம் உடலுக்குச் செல்லும். ஆகவே நாம் வெப்பமாக உணர்வோம்.

 

Question 3.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
விடை:
தகடானது வெப்பத்தால் விரிவடையும். எனவே தகட்டின் துளையின் விட்டம் அதிகரிக்கும்.

6th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
வெப்பநிலையின் SI அலகு.
அ) கலோரி
ஆ) ஜில்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்

Question 3.
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
அ) 0°C
ஆ) 32°C
இ) 100°C
ஈ) 110°C
விடை:
இ) 100°C

Question 4.
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
அ) 100°C
ஆ) 0°C
இ) 50°C
ஈ) 0° க்கும் 100°C க்கும் இடையே
விடை:
இ) 50°C

 

Question 5.
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
அ) வாயு
ஆ) திண்மம்
இ) நீராவி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஆ) திண்மம்

II. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
விடை:
தவறு

Question 2.
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
விடை:
தவறு

Question 3.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C.
விடை:
சரி

Question 4.
இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
விடை:
சரி

Question 5.
அதிர்வுகள் ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறிற்கு பாய்வதால் வெப்பம் பரவுகிறது.
விடை:
சரி

III. பொருத்துக.

IV. ஒப்புமை தருக.

Question 1.
வெயில் காலம் : விரிவடைதல் :: குளிர்காலம்: _____
விடை:
சுருங்குதல்

Question 2.
ஆவியாதல் : 100° C :: உறைதல் : _____
விடை:
0° C

 

V. காரணம் கூறுக.

1. மேம்பாலங்களில் கற்காரைப் பாலங்களுக்கிடையே சிறு இடைவெளி விடப்படுகிறது
கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும்.
2. 80°C வெப்பநிலையிலுள்ள இரும்பு குண்டினை 80°C வெப்பநிலை உள்ள நீரில் போடும் போது அது சுருங்குவதில்லை.
ஏனெனில் இரண்டும் வெப்பச் சமநிலையில் உள்ளன.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வெப்ப மூலங்கள் யாவை?
விடை:

  1. முதன்மை வெப்ப ஆற்றல் மூலம் சூரியன் ஆகும்.
  2. எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் மூலமும் வெப்ப ஆற்றலை பெறலாம்.

Question 2.
வெப்பம் என்றால் என்ன? அலகு யாது?
விடை:

  1. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் எனப்படும்.
  2. SI அலகு ஜூல். மேலும் கலோரி என்ற அலகும் பயன்படுத்தப் படுகிறது.

Question 3.
இரு பொருட்கள் வெப்பச் சமநிலையிலுள்ளன என எவ்வாறு அறியலாம்?
விடை:
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன என அறியலாம்.

 

Question 4.
ஒரு கலோரி வரையறு.
விடை:
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.

Question 5.
இரு பொருட்களுக்கிடையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
விடை:
பொருட்களின் வெப்பநிலையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
வெப்பத்தால் பொருளின் நீளத்தில் விரிவடைகிறது என்பதை ஓர் ஆய்வின் மூலம் விளக்குக.
விடை:

  1. வெப்பத்தால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு வெப்ப நீள்விரிவு எனப்படும்.
  2. ஒரு சைக்கிள் கம்பியின் ஒரு முனையை இணைப்புக் கம்பியோடும் தொடர்ந்து மின்கலன் மற்றும் மின்விளக்கோடும் இணைக்க வேண்டும்.
  3. விளக்கின் மறுமுனையை வேறு இணைப்புக்கம்பியோடு இணைத்து இணைப்புக்கம்பியை ஒரு நாணயத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
  4. நாணயத்தை சைக்கிள் கம்பியில் மோதாதவாறு சிறு இடைவெளியில் மரக்கட்டை மீது வைக்க வேண்டும்.
  5. இப்போது மின்சுற்று திறந்த சுற்றாக உள்ளது மின்விளக்கு எரியாது.
  6. சைக்கிள் கம்பியை வெப்பப்படுத்தினால் நீளம் அதிகரிக்கும் எனவே நாணயத்தில் மோதி மின்சுற்று மூடிய மின்சுற்றாகி விடும்.
  7. எனவே மின்விளக்கு எரியும்.
  8. இந்த ஆய்வின் மூலம் வெப்பத்தால் நீளம் விரிவடைவதை அறியலாம்.

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *