TN 6 Science

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

TN Board 6th Science Solutions Term 2 Chapter 2 மின்னியல்

6th Science Guide மின்னியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
அ) மின் விசிறி
ஆ) சூரிய மின்கலன்
இ) மின்கலன்
ஈ) தொலைக்காட்சி
விடை:
இ) மின்கலன்

Question 2.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____
அ) மின்மாற்றி
ஆ) மின்உற்பத்தி நிலையம்
இ) மின்சாரக்கம்பி
ஈ) தொலைக்காட்சி
விடை:
ஆ) மின்உற்பத்தி நிலையம்

 

Question 3.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.


விடை:
அ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 21

Question 4.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

விடை:
ஈ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 13

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ) வெள்ளி
ஆ) மரம்
இ) அழிப்பான்
ஈ) நெகிழி
விடை:
அ) வெள்ளி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
மின்கடத்தி

 

Question 2.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.
விடை:
மின்னோட்டம்

Question 3.
_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை:
தாவி

Question 4.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும் _____
விடை:
நேர்

Question 5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____
விடை:
மின்கல அடுக்கு

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.
விடை:
சரி.

Question 2.
இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
விடை:
தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
விடை:
சரி.

 

Question 4.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை:
தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை:
தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

IV. பொருத்துக.


விடை:

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக.


விடை:
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்.

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.

விடை:
மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.

Question 2.
கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A-தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 3.
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
விடை:
முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

 

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக. இரும்புச் சங்கிலி ஒரு மின்கடத்தி ஆகும்.
விடை:

Question 5.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
விடை:
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

Question 6.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 40
மின்னியற்றி மின் மூலமாகும். மற்றவை மின்சுற்றின் பாகங்களாகும்.

VII. குறுகிய விடையளி :

Question 1.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
விடை:

Question 2.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
விடை:
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V)

Question 3.
வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ? ஏன்?
விடை:
வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

VIII. விரிவான விடையளி:

Question 1.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
விடை:
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும். அனல் மின் நிலையங்கள் :

  1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
    நீர் மின் நிலையங்கள் ; 

    1. அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அறிவியல் அணுமின் நிலையம் :

  1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. காற்றாலை :
    1. காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

 

Question 2.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
விடை:

Question 3.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்கடத்திகள் :

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
  2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுப்பட்ட நீர் மற்றும் புவி

போன்றவை. அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.
  2. (எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ , மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?
விடை:

  1. மின்விளக்கு ஒளிரும்.
  2. எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் குண்டூசியை செருக வேண்டும்.
  3. இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக் கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
  4. எலுமிச்சை – மின்பகுளியாகவும், தாமிரம் – நேர்மின்வாயாகவும், குண்டூசி – எதிர்மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.

X. கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.

6th Science Guide மின்னியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
அ) நீர்மின் நிலையம்
ஆ) அணுமின்நிலையம்
இ) அனல்மின் நிலையம்
ஈ) காற்றாலை
விடை:
இ) அனல்மின்நிலையம்

Question 2.
மின்காந்தங்களுக்கிடையே கம்பிச்சுருள் சுழல்வதால் ஏற்படுகிறது.
அ) வெப்பம்
ஆ) மின்காந்தத் தூண்டல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) மின்காந்தத்தூண்டல்

 

Question 3.
கீழ்க்கண்டவைகளில் எதில் துணை மின்கலன்கள் பயன்படுகிறது?
அ) கைக்கடிகாரம்
ஆ) ரோபோ பொம்மை
இ) மடிக்கணினி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
இ) மடிக்கணினி

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று முறை ____
அ) பக்க இணைப்பு
ஆ) தொடரிணைப்பு
இ) எளிய மின்சுற்று
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) பக்க இணைப்பு

Question 5.
மின்சாரத்தை உருவாக்கும் மீன் வகை _____
அ) கெண்டை
ஆ) ஈல்
இ) கட்லா
ஈ) சாலமன் மீன்
விடை:
ஆ) ஈல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் _______ எனப்படும்
விடை:
மின்மூலங்கள்

Question 2.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் _____ ஆகும்.
விடை:
ஆரல்வாய்மொழி

Question 3.
மின்நிலையங்களில் அதிகக்காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமானவை _____
விடை:
நீர்மின் நிலையங்கள்

Question 4.
நேர் மற்றும் எதிர் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் ____ ஆகும்.
விடை:
மின்பகுளி

Question 5.
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் ______
விடை:
தாமஸ் ஆல்வா எடிசன்

III. கூற்றும் காரணமும்.

Question 1.
கூற்று (A) : மின்சாரம் தொடர்பான சோதனைகளை டார்ச் விளக்கு (அ) வானொலியில் பயன்படும் மின்கலன்களைக் கொண்டே செய்ய வேண்டும்.
காரணம்(R): வீட்டில் (அ) பள்ளியில் உள்ள மின்சாரத்தில் மின்னழுத்தம் அதிகம் மற்றும் ஆபத்தானது
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A) : முதன்மை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. காரணம்(R): வாகனங்களில் உள்ள மின்கலன் முதன்மை மின்கலன் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான உதாரணம்.
ஆ) A சரி ஆனால் R தவறு.
இ) A மற்றும் R சரி, ஆனால் R என்பது A க்கு உதாரணம் அல்ல.
ஈ) A தவறு ஆனால் R சரி.
விடை:
ஆ) A சரி ஆனால் R தவறு

 

IV. மிகக்குறுகிய விடையளி.

Question 1.
ஒரு மின்கல அடுக்கை உருவாக்க எத்தனை மின்கலன்கள் தேவை?
விடை:

  1. மின்கலன் உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தேவை.
  2. மின்கல அடுக்கு பல மின்கலன்களின் தொகுப்பாகும்.

Question 2.
ஒரு மின்சுற்றை உருவாக்க தேவையானவை யாவை?
விடை:
ஒரு சாவி, இணைப்புக்கம்பி, மின்கலன் மற்றும் மின்விளக்கு ஆகியவை தேவை.

Question 3.
ஒரு டார்ச் விளக்கினுள் மின்கலன்களை எவ்வாறு இணைத்தால் மின்விளக்கு எரியும்?
விடை:

ஒரு மின்கலனின் நேர்முனை மற்றதன் எதிர்முனையில் படுமாறு இணைக்க வேண்டும். அப்போது தான் மின்விளக்கு எரியும்.

Question 4.
மின்சுற்றின் மூன்று வகைகளை எழுதுக.
விடை:

  1. எளிய மின்சுற்று
  2. தொடரிணைப்பு
  3. பக்க இணைப்பு

Question 5.
மின்னோட்டம் என்றால் என்ன?
விடை:
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.

V. விரிவான விடையளி.

Question 1.
மின்கலன் என்றால் என்ன? மின்கலனின் வகைகள் யாவை?
விடை:

  1. மின்கலன் என்பது வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.
  2. மின்கலன் இருவகைப்படும் அவை முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள் ஆகும்.

முதன்மை மின்கலன்கள் :

  1. இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
  2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  3. சிறிய உருவளவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
  4. எ.கா. கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம், ரோபோ பொம்மைகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்

துணை மின்கலன்கள் :

  1. இவற்றை பல முறை மின்னேற்றம் செய்து மீண்டும் மீண்டும்பயன்படுத்தலாம்.
  2. இதன் உருவளவு பயன்பாட்டை பொருத்து சிறிதாக (அ) பெரிதாக இருக்கும்.
  3. எ.கா. கைப்பேசி, மடிக்கணினி, அவசர கால விளக்கு மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.

Question 2.
ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டால் அவரைக் காப்பாற்ற செய்ய வேண்டியவை யாவை?
விடை:

  1. மின்னதிர்வு ஏற்படக் காரணமான மின்இணைப்பை அணைக்கவேண்டும்.
  2. சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  3. மின்கடத்தாப் பொருளைக் கொண்டு மின்கம்பியின் தொடர்பில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
  4. முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *