Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்
TN Board 6th Science Solutions Term 3 Chapter 1 காந்தவியல்
6th Science Guide காந்தவியல் Text Book Back Questions and Answers
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
அ) மரக்கட்டை
ஆ) ஊசி
இ) அழிப்பான்
ஈ) காகிதத் துண்டு
விடை:
ஆ) ஊசி
Question 2.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
விடை:
இ) சீனர்கள்
Question 3.
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
அ) வடக்கு – கிழக்கு
ஆ) தெற்கு – மேற்கு
இ) கிழக்கு – மேற்கு
ஈ) வடக்கு – தெற்கு
விடை:
ஈ) வடக்கு – தெற்கு
Question 4.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
அ) பயன்படுத்தப்படுவதால்
ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்
இ) சுத்தியால் தட்டுவதால்
ஈ) சுத்தப்படுத்துவதால்
விடை:
இ) சுத்தியால் தட்டுவதால்
Question 5.
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
அ) வேகத்தை
ஆ) கடந்த தொலைவை
இ) திசையை
ஈ) இயக்கத்தை
விடை:
இ) திசையை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
விடை:
நீள்கோளம், வட்டம்,
உருளை
Question 2.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.
விடை:
காந்தப்பொருள்கள்
Question 3.
காகிதம் _____ பொருளல்ல.
விடை:
காந்த தன்மை உள்ள
Question 4.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
விடை:
காந்தக்கல்
Question 5.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.
விடை:
இரு
III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.
Question 1.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
விடை:
தவறு.
உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.
Question 2.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை:
சரி.
Question 3.
காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
விடை:
தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.
Question 4.
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
விடை:
தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
Question 5.
இரப்பர் ஒரு காந்தப்பொருள்.
விடை:
தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.
IV. பொருத்துக
V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக.
Question 1.
இரும்பு ஆணி, குண்டூசி, (இரப்பர் குழாய்) , ஊசி.
காரணம் : இரப்பர் குழாய் காந்தப்பொருள் அல்ல.
Question 2.
மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு
காரணம் : மின்பல்பில் காந்தம் பயன்படவில்லை.
Question 3.
கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்
காரணம் : ஒளியூட்டுதல் காந்தத்தின் பண்பு அல்ல.
VI. பின்வரும் படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு. (ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஓட்டிக் கொள்ளும்)
விடை :
(a) ஈர்க்கும்
(b) விலக்கும்
(c) ஈர்க்கும்
(d) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
(e) விலக்கும்
(f) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
VII. நிரப்புக.
விடை :
VIII. சிறு வினாக்கள் :
Question 1.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
விடை:
- காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N – N), (S – S) ஒன்றை ஒன்று விலக்கும்.
- எதிரெதிர் துருவங்கள் (N – S), (S – N) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
Question 2.
பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.
விடை:
காந்தங்கள் காந்தத் தன்மையை இழக்கக் காரணங்கள்
- வெப்பப்படுத்துதல்
- உயரத்திலிருந்து கீழே போடுதல்
- சுத்தியலால் தட்டுதல்.
IX. நெடுவினா :
Question 1.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
விடை:
- ஒரு சட்டகாந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனை யிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
- தேய்க்கும் போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும்.
- 30 அல்லது 40 முறை இதே போல் தேய்க்க வேண்டும்.
- பின் இரும்பு ஊசியின் அருகே இரும்புத்துகள்களை கொண்டு சென்றால் அது ஈர்க்கும் இவ்வாறு இரும்பு ஊசி காந்தமாக மாறும்.
- இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் செய்ய வேண்டும்.
Question 2.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
விடை:
- மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. மின்சாரம் பாயும் போது மட்டும் இவை காந்தத் தன்மை பெறும்.
- மின்சாரத்தின் திசைமாறும் போது துருவங்கள் மாறும்.
- தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குவதால் வண்டி தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் நிற்கும்.
- தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலுமுள்ள காந்தங்களில் காந்த ஈர்ப்பு விசையும், விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது.
- மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
- மின்காந்தத் தொடர்வண்டியில் சக்கரமில்லை. எனவே உராய்வு இல்லை. மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாக செல்லலாம்.
X. உயர்சிந்தனை வினாக்களுக்கு பதிலளிக்கவும்.
Question 1.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ. காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத் தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?
விடை:
அ. இரும்புத்தூள்களை காகிகத்தில் எடுத்துக் கொண்டு சட்ட காந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து சிறிது நேரம் இரும்புத்தூள்களை புரட்டினால் காந்தத்தின் எந்தப் பகுதிகளில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அப்பகுதி துருவங்கள் ஆகும்.
ஆ. துருவப்பகுதிகளில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். காரணம் துருவப்பகுதிகளில் காந்த வலிமை அதிகம்.
Question 2.
படம் – ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவை இரு சட்டக்காந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டகாந்தம் ‘ஆ’. வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.
காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். எனவே படம் ‘ஆ’ வின் துருவங்கள் (S – N)
Question 3.
ஒரு கண்ணாடி குவளை / முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:
கண்ணாடி முகவையில் நீருக்கு மேல் ஒரு வலிமையான காந்தத்தை வைத்தால் நீருக்குள் உள்ள குண்டூசிகள் எல்லாம் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.
6th Science Guide காந்தவியல் Additional Important Questions and Answers
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்
அ) இரும்பு
ஆ) கோபால்ட்
இ) நிக்கல்
ஈ) இரப்பர்
விடை:
ஈ) இரப்பர்
Question 2.
திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் யார்?
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்
இ) சீனர்கள்
ஈ) அமெரிக்கர்கள்
விடை:
இ) சீனர்கள்
Question 3.
காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
அ) வெப்பப்படுத்துதல்
ஆ) கீழே போடுதல்
இ) சுத்தியால் தட்டுதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் பருவம்
Question 4.
ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
அ) ஈர்க்கும்
ஆ) விலக்கும்
இ) சுழலும்
ஈ) ஏதும் நடக்காது
விடை:
ஆ) விலக்கும்
Question 5.
மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்
அ) 380 கிமீ / மணி
ஆ) 600 கிமீ / மணி
இ) 480 கிமீ / மணி
ஈ) 690 கிமீ / மணி
விடை:
ஆ) 600 கிமீ/மணி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
Question 1.
காந்தங்கள் திசையை அறியப் பயன்படுவதால் ____ என அழைக்கப்படுகின்றன.
விடை:
வழிகாட்டும் கற்கள்
Question 2.
காந்தத்தன்மை உடைய தாது _____
விடை:
மேக்னடைட்
Question 3.
எவர்சில்வர் கரண்டி ஒரு _____ பொருள்.
விடை:
காந்தத் தன்மை அற்ற
Question 4.
குப்பைகளில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க _____ காந்தங்கள் பயன்படுகின்றன.
விடை:
மின்
Question 5.
காந்தங்களில் ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதி _____ ஆகும்.
விடை:
துருவங்கள்
III. பொருத்துக.
IV. சிறுவினாக்கள்
Question 1.
செயற்கை காந்தம் என்றால் என்ன?
விடை:
மனிதனால் தயாரிக்கப்படும் காந்தங்கள் செயற்கை காந்தங்கள் எனப்படும்.
(எ.கா.) சட்டகாந்தம், லாடகாந்தம்
Question 2.
செயற்கை காந்தங்களில் பல வித வடிவங்கள் யாவை?
விடை:
- சட்டகாந்தம், லாடகாந்தம், வளையகாந்தம், காந்தஊசி ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும்.
- நீள்கோள வடிவம், வட்டவடிவம் மற்றும். உருளை வடிவிலும் காந்தங்கள் கிடைக்கின்றன.
Question 3.
காந்தத் தன்மை உள்ள பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள் காந்தத்தன்மை உள்ள பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை.
Question 4.
காந்தத்தன்மை அற்ற பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள் காந்தத்தன்மை அற்ற பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) காகிதம், நெகிழி, கண்ணாடி, இரப்பர் முதலியன.
Question 5.
காந்தத்தின் பயன்பாடுகள் யாவை?
விடை:
- நம் நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
- ஒலிப்பான்கள், சில மின்மோட்டார்கள், சிலவகை தாழ்ப்பாள், பைகள், காந்த திசைகாட்டிகள், பென்சில் பெட்டிகள், அலைபேசி உறைகள், குண்டூசித்தாங்கிகள், காந்தத் தூக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறோம்.
V. நெடுவினாக்கள்
Question 1.
காந்தங்களை பாதுகாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
- காந்தங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அவை காந்தத் தன்மையை இழந்து விடுகின்றன,
- சட்டகாந்தங்களை பாதுகாக்க, இரு சட்ட காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து அவற்றிற்கிடையே மரக்கட்டையை வைக்க வேண்டும்.
- இரு தேனிரும்பு துண்டுகளை காந்தங்களின் முனைகளுக்கு குறுக்கே வைத்து பாதுகாக்க வேண்டும்.
- குதிரை லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்பு துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்.
Question 2.
ஒரு சட்ட காந்தத்தைக் கொண்டு எவ்வாறு திசையைக் கண்டறிவாய்?
விடை:
- சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதைத் தொங்க விட வேண்டும்.
- காந்தம் எந்த திசையில் ஓய்வுநிலைக்கு வருகிறது என பார்க்க வேண்டும்.
- சட்டகாந்தம் ஓய்வு நிலைக்கு வரும் திசைக்கு இணையாக ஒரு / கோட்டினை வரைய வேண்டும்.
- எத்தனை முறை சுழற்றினாலும் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு தெற்கு திசையிலே ஓய்வுக்கு வரும்.
- வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் ஆகும். தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் ஆகும்.
VI. உயர் சிந்தனை வினாக்கள்
Question 1.
ஓர் இரும்பு ஆணியின் மீது காந்தத்தை தேய்ப்பதால் அது காந்தத்தன்மையைப் பெறுகிறது. ஆனால் அதே போல் ரப்பர் துண்டின் மீது காந்தத்தை தேய்த்தால் இரப்பர் காந்தமாவதில்லை ஏன்?
விடை:
இரப்பர் காந்தத் தன்மை அற்ற பொருள்.
Question 2.
டிவி, கணினி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் காந்தங்களைக் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
விடை:
- மின்சாதனங்கள் பாதிக்கப்படும்.
- காந்தம் காந்தத் தன்மையை இழக்கும்.
மனவரைபடம்