Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்
TN Board 6th Science Solutions Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்
6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
ஈ) MOUSE
Question 2.
கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்
Question 4.
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
அ) WINDOWS
ஆ) MACOS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்
Question 5.
______ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
அ) ANDROID
II. பொருத்துக.
Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக.
விடை:
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென் பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயங்கு தளமின்றி கணினியைப் பயன்படுத்த முடியாது. (எ.கா.) Linux, Windows, Mac, Android.
Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. (எ.கா.) :
- லினக்ஸ்,
- ஜியோ ஜீப்ரா
6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்
Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல
Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ). பயன்பாட்டு மென்பொருள்
Question 4.
Windos என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்
விடை:
அ) கட்டண மென்பொருள்
Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) pendrive
விடை:
ஆ) Linux
II. பொருத்துக.
III. சிறுவினா
Question 1.
மென்பொருள் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
- இயக்க மென்பொருள்
- பயன்பாட்டு மென்பொருள்
Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.
Question 3.
Open Source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative.
மனவரைபடம்