Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.3 சிறகின் ஓசை
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
1. காகம்
2. சிட்டுக்குருவி
3. குயில்
4. மைனா
5. இட்டைவால் குருவி
6. கொக்கு
7. நாரை
8. பருந்து
9. கழுகு
10. மயில்
11. மரங்கொத்தி
12. பச்சைக் கிளி
Question 2.
உங்கள் வீட்டுக்கு அருகில் பறவைகள் வருவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குமரன் : முகிலா! இன்று எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான்கைந்து குருவிகள் இருந்தன. பார்க்கவே அழகாக இருந்தன.
முகிலன் : அப்படியா? இப்போதெல்லாம் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் எங்கள் வீட்டிற்கருகில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதனால் நிறைய பறவைகள் இருக்கும். இப்போதெல்லாம் வருவதே இல்லை. மரத்தையும் வெட்டிவிட்டார்கள். பெரிய தொழிற்சாலை கட்டிவிட்டார்கள். அந்த இரைச்சலுக்குப் பறவைகள் அச்சப்படுவதால் வருவதில்லை .
குமரன் : நீ சொல்வதும் சரிதான். நகரங்களின் வளர்ச்சியினால் இயற்கைச்சூழல் மாறிவிட்டது. இயற்கையை விற்று செயற்கையை வாங்கிவிட்டோம். அதன் விளைவுதான் இந்நிலைக்குக் காரணம்.
முகிலன் : பறவைகள் நமது நண்பன் என்பதை மறந்துவிட்டோம். அதை நாம் மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்திக்க வேண்டும்.
குமரன் : மாடிகளில் தானியங்களைத் தூவி விட வேண்டும். அருகில் சிறு சிறு து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். வீட்டிற்கு ஒரு மரம் என்ற தொடரை மெய்ப்பிக்கும் படி மரம் நடுவோம். மாடியில் செயற்கையாகக் கூடுகள் அமைப்போம். அட்டைப் பெட்டிகளைப் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாகப் பயன்படுத்தலாம். குடியிருப்புகளின் நடுவில் உள்ள செல்பேசி கோபுரங்களை அகற்றுவதற்கு வழி செய்யலாம்.
முகிலன் : கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். கேழ்வரகு, நெல், கம்பு போன்ற சிறுதானியங்களை மாடிகளில் போட்டு வைக்கலாம். இவற்றைச் செய்தால் பறவைகள் தினமும் வரும். செயற்கைக் கூடுகள் இருப்பதால் இரவில் தங்குவதற்கும் வரும்.
குமரன் : இனிமேல் நாம் பேசியபடி செய்து பறவைகளின் வரவை அதிகரிக்கச் செய்வோம். நம் நண்பர்களிடம் கூறி அவர்களை இவ்வாறு செய்யச் சொல்லலாம்.
Question 3.
பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பறவைகள் தொடர்பான பழமொழிகள் :
(i) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
(ii) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
(iii) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
(iv) எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
(v) எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
(vi) கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
(vii) சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
(viii) சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை .
Question 4.
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
எ.கா. காப்போம் காப்போம்! பறவைகளைக் காப்போம்!
Answer:
இயற்கையைப் பாதுகாக்கும் முழக்கங்கள் :
(i) காப்போம்! காப்போம் ! பறவைகளைக் காப்போம்!
(ii) காப்போம் ! காப்போம் ! விளைநிலங்களைக் காப்போம்!
(iii) சேமிப்போம் ! சேமிப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!
(iv) செய்வோம்! செய்வோம்! இயற்கை விவசாயம் செய்வோம்!
(v) தவிர்ப்போம் ! தவிர்ப்போம் ! நெகிழியைத் தவிர்ப்போம்!
(vi) மரங்களை நடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
Answer:
அ) தட்பம் + வெப்பம்
Question 2.
வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
Answer:
ஆ) வேதி + உரங்கள்
Question 3.
தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
Answer:
அ) தரையிறங்கும்
Question 4.
வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
Answer:
ஆ) வழித்தடம்
Question 5.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ……………….
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
Answer:
அ) துருவப்பகுதி
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ………
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ………..
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ……………. என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் ………….
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று …….
Answer:
[விடை: ஆர்டிக் ஆலா]
(விடை: சத்தி முத்தப் புலவர்)
(விடை: வலசை போதல்)
(விடை: டாக்டர். சலீம் அலி)
(விடை: தட்ப வெப்ப நிலை மாற்றம்)
சொற்றொடர் அமைத்து எழுதுக
1. வெளிநாடு …………………
விடை : நம் நாட்டில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்வது நல்லது அன்று.
2. வாழ்நாள் …………………
விடை : வாழ்நாள் முழுவதும் உண்மை மட்டுமே பேசி வாழ்ந்தவன் அரிச்சந்திரன்.
3. செயற்கை ……………….
விடை : விவசாயத்தில் செயற்கை உரங்களை இடுவது மண்ணிற்குக் கேடு.
பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக
1. மரங்களை வளர்த்து ………… யைக் காப்போம் ………. உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம் (செயற்கை / இயற்கை)
2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……… தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….. (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
Answer:
1. (விடை: இயற்கை, செயற்கை)
2. (விடை: மிகுந்துள்ளது, குறைந்துள்ளது)
குறுவினா
Question 1.
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
Answer:
பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :
பறவைகள் உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
போன்றவற்றிற்காக இடம்பெயர்கின்றனள.
Question 2.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
Answer:
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
(i) தலையில் சிறகுகள் வளர்தல்.
(ii) இறகுகளின் நிறம் மாறுதல்.
(iii) உடலில் கற்றையாக முடி வளர்தல்.
சிறுவினா
Question 1.
சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
Answer:
(i) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
(ii) கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
(iii) துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
Question 2.
வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
Answer:
(i) பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிற்கு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
(ii) சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
சிந்தனை வினா
Question 1.
பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
(i) அழியும் நிலையில் உள்ள பறவைகளை அறிந்து அவற்றிற்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி செய்து இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்
(ii) ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற செடி, கொடிகளையும் வளர்க்கலாம்.
(iii) நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர் தாவரங்களையும் வளர்க்கலாம்.
(iv) தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்கலாம்.