Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி
கற்பவை கற்றபின்
Question 1.
அறிவியல் ஆத்திசூடி’ பகுதியில் உங்களுக்குப் பிடித்த அடியை எழுதி அதன் காரணத்தைக் கூறுக.
Answer:
அறிவியல் ஆத்திசூடி பகுதியில் எனக்குப் பிடித்த அடிகள் :
1. ஈடுபாட்டுடன் அணுகு
2. ஏன் என்று கேள்
ஈடுபாட்டுடன் அணுகு : நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டுடன் செய்தால் மட்டும் தான் சிறப்பாகச் செய்ய இயலும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு ஈடுபாடு மிகவும் இன்றியமையாததாகும்.
ஏன் என்று கேள் : யார் எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாகச் செம்மறியாட்டுக் கூட்டம் போல் எச்செயலையும் செய்யக்கூடாது. எதற்காகச் செய்கிறோம் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.
Question 2.
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கத் தொடர்கள் ஐந்து உருவாக்குக.
எ.கா. அறிவியலை வளர்ப்போம்!
உலகை வெல்வோம்!
Answer:
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கங்கள்
இயற்கையை அழிக்காமலே !
அறிவியலாய்வு செய்வோம்!
அவசியத்திற்குப் பயன்படுத்துவோம்!
நன்மைக்கு வழிகாட்டுவோம்!
அளவுடன் அனுபவிப்போம்!
தீமையை விட்டொழிப்போம்!
அணு ஆராய்ச்சி செய்வோம்!
அமைதியைக் காப்போம்!
மருத்துவத்தில் புதுமை காண்போம்!
நோய் நொடியின்றி வாழ்வோம்!
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உடல் நோய்க்கு ……….. தேவை
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
Answer:
அ) ஔடதம்
Question 2.
நண்பர்களுடன் ………….. விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
Answer:
அ) ஒருமித்து
Question 3.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
Answer:
ஆ) கண்டு + அறி
Question 4.
‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
Answer:
அ) ஓய்வு + அற
Question 5.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
Answer:
ஆ) ஏனென்று
Question 6.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) ஒளடதமாம்
ஆ) ஔடதம் ஆம்
இ) ஓளடதாம்
ஈ) ஔடத ஆம்
Answer:
அ) ஔடதமாம்
எதிர்ச்சொற்களைப் பொருத்துக
அணுகு × தெளிவு
ஐயம் × சோர்வு
உண்மை × பொய்மை
உண்மை × விலகு
விடை :
அணுகு × விலகு
ஐயம் × தெளிவு
ஊக்கம் × சோர்வு
ஊக்கம் × பொய்மை
பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக
1. சிந்தனை கொள் அறிவியல் ……………………..
விடை : அறிவியல் சிந்தனை கொள்.
2. சொல் தெளிந்து ஐயம் …………………………….
விடை : ஐயம் தெளிந்து சொல்.
3. கேள் ஏன் என்று ……………………….
விடை : ஏன் என்று கேள்.
4. வெல்லும் என்றும் அறிவியலே ………………………..
விடை : அறிவியலே என்றும் வெல்லும்.
குறுவினா
Question 1.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
Answer:
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.
சிறுவினா
Question 1.
பாடலின் கருத்தை உனது சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) அறிவியல் பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
(ii) ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
(iii) தெளிவாக நம்மால் முடிந்தவரை புரிந்துகொள்ள வேண்டும்.
(iv) அனைத்து செயல்களையும் ஆர்வத்துடன் அணுகிச் செய்ய வேண்டும்.
(v) உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். முயற்சியே வெற்றி தரும் என்பதை உணர வேண்டும்.
(vi) அறிவியல் எப்போதும் வெல்லும். எதனையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன்? என்று வினா எழுப்பி புரிந்துகொள்ள வேண்டும்.
(vii) சந்தேகமின்றி தெளிவாகப் பேச வேண்டும். அனைவருடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இடைவிடாமல் உழைக்க வேண்டும்.
(viii) மனிதர்களுக்கு அவரவர் அனுபவமே மருந்தாகும்.
சிந்தனை வினா
Question 1.
உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?
Answer:
(i) சித்த மருத்துவம்
(ii) ஓமியோபதி
(iii) ஆயுர்வேதம்
(iv) யுனானி
(v) அலோபதி
(vi) அக்குபஞ்சர்
நூல் வெளி
‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
சொல்லும் பொருளும்
1. இயன்றவரை – முடிந்தவரை
2. ஒருமித்து – ஒன்றுபட்டு
3. ஔடதம் – மருந்து
Good