TN 6 Tamil

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

கற்பவை கற்றபின்

 

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Question 2.
முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.
Answer:
(i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும்.

(ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது.

(iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்

 

சிந்தனை வினா

Question 3.
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது?
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என் இறப்புக்குப் பின் என்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும்படி செய்வதற்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வேன். என் நண்பர் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

மதிப்பீடு

சிறுவினா

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
Answer:
‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :
(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.

(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.

(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.

(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.

 

Question 2.
இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.
Answer:
தொடரும் இயக்கம்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *