Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.1
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.1
TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.1
கேள்வி 1.
கீழ்க்கண்ட படவிளக்கத்திற்கு உரிய தசம எண்களை எழுதுக.
(i)

தீர்வு:
10 – பத்துகள் எண் 12.2
2 – ஒன்றுகள்
2- பத்தில் ஒன்றுகள்
(ii)
தீர்வு:
2 – பத்துகள் எண் 21.3
1 – ஒன்றுகள்
3 – பத்தில் ஒன்றுகள்
கேள்வி 2.
கீழ்க்கண்டவற்றைத்தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
(i) 5 மி.மீ
தீர்வு:
5 மி.மீ = 5/10 செ.மீ = 0.5 செ.மீ
10 மி.மீ = 1 செ.மீ
(ii) 9 மி.மீ
தீர்வு:
9 மி.மீ = 9/10 செ.மீ = 0.9 செ.மீ
(iii) 42 மி.மீ
தீர்வு:
42 மி.மீ = 42/10 ச.மீ = 4.2 செ.மீ
(iv) 8 செ.மீ 9 மி.மீ
தீர்வு:
8 செ.மீ.9 மி.மீ = 89/10 செ.மீ = 8.9 செ.மீ
(v) 375 மி.மீ
தீர்வு:
375 மி.மீ = 375/10 செ.மீ = 37.5 செ.மீ.
கேள்வி 3.
கீழ்க்கண்டவற்றை தசம எண்களைப் பயன்படுத்தி மீட்டரில் குறிப்பிடுக. (i) 16 செ.மீ
தீர்வு:
16 செ.மீ = 16/100 மீ = 0.16மீ
100 100செ.மீ = 1மீ
(ii) 7 செ.மீ
தீர்வு:
7 செ.மீ = 7/100 மீ = 0.07மீ
(iii) 43 செ.மீ
தீர்வு:
43 செ.மீ = 43/100 மீ = 0.43மீ
(iv) 6 மீ 6 செ.மீ
தீர்வு:
6 மீ 6 செ.மீ = 606/100 மீ= 6.06மீ
(v) 2 மீ 54 செ.மீ
தீர்வு:
2 மீ 54 செ.மீ = 254/100 மீ = 2.54மீ
கேள்வி 4.
கீழ்க்காணும் தசம எண்களை விரிவுக் குறியீட்டு முறையில் எழுதுக.
(i) 37.3
தீர்வு:
37.3 = 30 + 7 + 3/10
(ii) 658.37
தீர்வு:
658.37 = 600 + 50 + 8 + 3/10 + 7/10
(iii) 237.6
தீர்வு:
237.6 = 200 + 30 + 7 + 6/10
(iv) 5678.358
தீர்வு:
5678.358 = 5000 + 600 + 70 + 8 + 3/10 + 5/100 + 8/1000
கேள்வி 5.
கீழ்க்கண்டவற்றை இடமதிப்பு அட்டவணையில் குறித்து மற்றும் அடிகோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.
(i) 53.61
(ii) 263.271
(iii) 17.39
(iv) 9.657
(v) 4972.068
தீர்வு:
(i) 53.61 இல் 6ன் இடமதிப்பு பத்தில் ஒன்று.
(ii) 263.271 ல் உன் இடமதிப்பு பத்தில் ஒன்று.
(iii) 17.39 ல் 9ன் இடமதிப்பு நூறில் ஒன்று.
(iv) 9.657 ல் 5ன் இடமதிப்பு நூறில் ஒன்று.
(v) 4972.068 ல் 8ன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று.
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 6.
85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு
(i) பத்தில் ஒன்று
(ii) நூறில் ஒன்று
(iii) ஆயிரம்
(iv) ஆயிரத்தில் ஒன்று
விடை:
(iii) ஆயிரம்
கேள்வி 7.
கிராமை கிலோகிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?
(i) 10000
(ii) 1000
(iii) 100
(iv) 10
விடை:
(ii) 1000
கேள்வி 8.
30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண்
(i) 30.43
(ii) 30.430
(iii) 30.043
(iv) 30.0043
விடை:
(iii) 30.043
கேள்வி 9.
மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது __________ மீட்டருக்குச் சமம்.
(i) 26.4
(ii) 2.64
(iii) 0.264
(iv) 0.0264
விடை:
(iii) 2.64