Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
TN Board 7th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை ……………..
அ) கெல்வின்
ஆ) பாரன்ஹீட்
இ) செல்சியஸ்
ஈ) ஜூல்
விடை:
அ) கெல்வின்
Question 2.
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
அ) விரிவடைகிறது
ஆ) சுருங்குகிறது
இ) அதே நிலையில் உள்ளது
ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
விடை:
அ) விரிவடைகிறது
Question 3.
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
அ) 0°C
ஆ) 37°C
இ) 98°C
ஈ) 100°C
விடை:
ஆ) 37°C
Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது ……………………
அ) பாதுகாப்பான திரவம்
ஆ) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது
ஈ) விலை மலிவானது
விடை:
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது
Question 5.
கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = °C (செல்சியஸ்) + 273.15
விடை:
இ ) +127 + 400.15
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
மருத்துவர்கள் ………………….. வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் ‘ வெப்பநிலையினை அளவிடுகின்றனர்.
விடை:
மருத்துவ
Question 2.
அறைவெப்ப நிலையில் பாதரசம் …………………… நிலையில் காணப்படுகிறது.
விடை:
திரவ
Question 3.
வெப்ப ஆற்றலானது ……………………. பொருளில் இருந்து …………………… பொருளுக்கு மாறுகிறது.
விடை:
உயர் வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையிலுள்ள
Question 4.
-7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட …………………..
விடை:
குறைவு
Question 5.
பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி …………… வெப்பநிலைமானி ஆகும்.
விடை:
திரவ கண்ணாடி (அ) பைமெட்டாலிக் துண்டு
III. பொருத்துக
விடை:
IV. மிகக் குறுகிய விடையளி
Question 1.
ஸ்ரீநகரின் (ஜம்மு&காஷ்மீர்) வெப்பநிலை -4°Cமேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3’C இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
விடை:
- கொடைக்கானலின் வெப்பநிலை அதிகம் ஆகும்
- இருப்பகுதிகளுக்கும் இடையேக் காணப்படும் வெப்பநிலை வேறுபாடு
7°C (3°C – (-4°C) = 3 + 4) ஆகும்.
Question 2.
ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா? ஏன்?
விடை:
- தவறு
- ஏனெனில் மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு உடலின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும்.
- ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தி சூடான நீரின் வெப்பநிலையினைக் கண்டறியலாம்.
Question 3.
நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
விடை:
மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு ஒருவரின் உடல் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். எனவே காற்றின் வெப்பநிலையினை அளக்க முடியாது.
மருத்துவ வெப்பநிலைமானியை காற்றில் வைக்கும் போது அதனுடைய வெப்பநிலையானது உயரவோ அல்லது குறையவோ கூடும். மேலும் அப்படியே பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் வெப்பநிலையினை தவறாகக் காட்ட நேரிடும்.
பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக்கூடும்.
Question 4.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
விடை:
- குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
- இதனால் நோயாளியின் வெப்பநிலையை சரியாக குறித்துக்கொள்ள இயலும்.
Question 5.
மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
விடை:
- வெப்பநிலைமானியை உதறும்போது அதிலுள்ள பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும்.
- பாதரச மட்டமானது 35°C[95°F] கீழ் உள்ளதா என உறுதி செய்தபின் வெப்பநிலையினைக் கண்டறியவும்.
V. குறுகிய விடையளி
Question 1.
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
விடை:
- அறை வெப்ப நிலையில் திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசமாகும்.
- மேலும் வெப்பதால் எளிதில் விரிவடையக்கூடியது.
- பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலாது.
Question 2.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்.
விடை:
ரமணியின் கூற்று சரியானது ஆகும்.
ஆய்வக வெப்பநிலைமானியில், கீழ்ப்பகுதியில் கிங்க் எனப்படும் வளைவான பகுதி எனவே சுவாதி ஆய்வக வெப்பநிலை மானியை சூடான நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் வெப்பநிலைமானியின் அளவீடானது கீழே சென்று குறைய நேரிடும்.
எனவே ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தும் போது சூடான நீரின் உள்ளே வைத்து அளவினை குறிக்க வேண்டும் கண்டிப்பாக வெப்பநிலைமானியை வெளியே எடுக்கக் கூடாது.
Question 3.
இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
விடை:
- 99°F என்பதை காய்ச்சலாக கருத முடியாது என்பதால் இராமு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை.
- பொதுவாக மனிதரில் காணப்படும் சாதாரண உடல் வெப்பநிலையானது 97°F முதல் 949°F ஆகும்.
- மேலும் குழந்தைக்கு சற்று கூடுதலாக வெப்பநிலையானது 97°.9°F முதல் 100.4°F வரை இருக்கும்.
VI. விரிவான விடையளி
Question 1.
மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
விடை:
Question 2.
ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
விடை:
VII. உயர் சிந்தனை வினாக்கள்
Question 1.
செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
விடை:
வெப்பநிலை என்பது 320°
தீர்வு:
பாரன்ஹீ ட் F= 2C ———- (1)
செல்சியஸ் C = C ————(2)
F = 95C + 32
2C = 95 C + 32
2C – 95 C = 32
10c−9c5 = 32
C = 160°
F = 2C = 2 × 160 = 320°
Question 2.
கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.
விடை:
7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் ……………………. மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
அ) நீளம் மட்டும்
ஆ) அகலம்
இ) பரப்பளவு
ஈ) கன அளவு
விடை:
ஈ) கன அளவு
Question 2.
நீரின் கொதிநிலை எவ்வளவு ………………….
அ) 273.15k
ஆ) 373.15k
இ) 473.15k
ஈ) 573.15k
விடை:
ஆ) 373.15k
Question 3.
பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
அ) F + 495.67
ஆ) F + 594.67
இ) F + 945.67
ஈ) F+ 459.67
விடை:
ஈ) F + 459.67
Question 4.
45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை.
அ) 93°F
ஆ) 73°F
இ) 113°F
ஈ) 133°F
விடை:
ஈ) 133°F
Question 5.
வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்.
அ) வில்லியம் லார்டு
ஆ) டேனியல் கேப்ரியல்
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்
ஈ) ரான்கீன்
விடை:
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
வெப்பநிலை
Question 2.
வெப்பநிலையினை அளக்க பொதுவாக பயன்படுத்தப்படும் கருவி …………………. ஆகும்.
விடை:
வெப்பநிலைமானி
Question 3.
ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
விடை:
-10°C முதல் 110°C
Question 4.
மெர்குரி இல்லாமல் தற்போது பயன்படுத்தப்படும் வெப்பநிலைமனி………………….
விடை:
டிஜிட்டல் வெப்பநிலை மானி
Question 5.
கெல்வின் அளவீட்டு முறையை கண்டறிந்தவர் ……………….
விடை:
வில்லியம்லார்டு கெல்வின்
III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்
Question 1.
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும்.
விடை:
சரி
Question 2.
பெரும்பாலும் பாசரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தவில்லை .
விடை:
தவறு – காரணம் : பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுகின்றன.
Question 3.
ஆல்கஹால் – 100°C க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது.
விடை:
சரி
Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியானது உடல் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
தவறு
காரணம் .: ஆய்வக வெப்பநிலைமானியானது அறிவியல் ஆய்வுகளுக்கான வெப்பநிலை அளக்க பயன்படுகிறது.
Question 5.
டிஜிட்டல் வெப்பநிலைமானி முக்கியமாக உடலின் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
சரி
IV. பொருத்துக
V. ஒப்புமை தருக
Question 1.
ஆற்றல் : ஜீல்; வெப்பநிலை; ……………….
விடை:
கெல்வின்
Question 2.
மருத்துவ வெப்பநிலைமனி : 35° C to 42° C : ஆய்வக வெப்பநிலைமனி : …………..
விடை:
-10° C to 110° C
Question 3.
வெப்பத்தின் போது திரவம் ; விரிவடையும் : குளிர்ச்சியின் போது திரவம் …………..
விடை:
சுருங்கும்
VI. கூற்றும் காரணமும்
Question 1.
கூற்று (A) : பாதரசம் ஒரு நச்சும் பொருள் மற்றும் ஒரு வெப்பமணி உடைந்தால் அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.
காரணம் (R) : டிஜிட்டல் வெப்பநிலைமனியில் மெர்குரி பயன்படுத்தவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம் இல்லை.
Question 2.
கூற்று (A) : பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானது.
காரணம் (R) : ரான்கீன் தனிச்சுழி அளவீட்டு முறையை கண்டபிடிக்கவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் தவறு.
VII. ஓரிரு வரிகளில் விடையளி
Question 1.
பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலை மானிகளை எழுதுக.
விடை:
- மருத்துவ வெப்பநிலைமானி
- ஆய்வக வெப்பநிலைமானி
Question 2.
வெப்பநிலையை அளக்க பயன்படும் அலகுகளின் பெயர் எழுதுக.
விடை:
- செல்சியஸ் (உதா) 20° C
- பாரன்ஹீட் (உதா) 25° F
- கெல்வின் (உதா) 100 k
Question 3.
பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு எழுதுக.
விடை:
(F−32)9=C5
K = 273.15 + C
VIII . குறுகிய விடையளி
Question 1.
ஆய்வக வெப்பநிலைமானியினை பயன் படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எழுதுக.
விடை:
- வெப்பநிலையினை அளவீடும் போது வெப்பநிலை மானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்.
- எப்பொருளின் வெப்பநிலையினை அளக்க வேண்டுமோ அப்பொருளானது முழுவதும் வெப்பநிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களில் சூழ்ந்து உள்ள போது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும்.’
Question 2.
மருத்துவ வெப்பநிலைமானியை வெளிச்சத்தில் படும்படி அல்லது எரியும் பொருள்களுக்கு அருகிலே வைக்க கூடாது ஏன்?
விடை:
- மருத்துவ வெப்பநிலைமானி குறைந்த அளவு வெப்பநிலை எற்க கூடியது.
- பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக் கூடும்.
Question 3.
பெரும, சிறும வெப்பநிலைமானி என்றால் என்ன?
விடை:
ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலை மானியானது பெரும், சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.
Question 4.
வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.
Question 5.
பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:
- பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
- ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன.
IX. விரிவான விடையளி
Question 1.
பாதரசம் மற்றும் ஆல்கஹால் பண்புகளை பற்றி எழுதுக.
விடை:
பாதரசத்தின் பண்புகள் :
- பாதரசம் சீராக விரிவடைகிறது.
- இது ஒளி ஊடுருவாதது மற்றும் பளபளப்பானது.
- இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.
- இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.
- இது அதிக கொதிநிலையும் (357°C) குறைந்த உறைநிலையும் (-39°C) கொண்டது.
- திக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.
ஆல்கஹாலின் பண்புகள் :
- ஆல்கஹால் -100°C க்கும் குறைவான உறைநிலை கொண்டுள்ளது.
- எனவே மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது.
- ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும்.
- அதிக அளவிற்கு வண்ண மூட்ட முடியும்.
- ஆதலால் கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.
Question 2.
மருத்துவ வெப்பநிலை மானியினை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எழுதுக.
விடை:
- வெப்பநிலைமானியினால் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும்.
- பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
- அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது 35°C அல்லது 94°F கீழ் இருக்க வேண்டும்.
- வெப்பநிலைமானியின் குமிழ் பகுதியில் வெப்பநிலைமானியை பிடிக்கக் கூடாது.
- உங்கள் கண்ணிற்கு நேராக பாதரச மட்டத்தினை வைத்து பிறகு அளவீட்டினை எடுக்க வேண்டும்.
- வெப்பநிலைமானியினைக் கவனமாக கையாள வேண்டும்.
- கடினமான பரப்பில் வெப்பநிலைமானி மோதினால் அது உடைந்து விடக்கூடும்.
- வெப்பநிலைமானியினை எரியக்கூடிய பொருள்களுக்கு அருகிலோ அல்லது நேரடியாக சூரிய ஒளியின் கீழோ வைக்கக் கூடாது.
மனவரைபடம்