TN 7 Science

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

TN Board 7th Science Solutions Term 3 Chapter 1 ஒளியியல்

7th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
ஒளியானது எப்பொழுதும் …………… செல்லும். இந்தப்பண்பு ……….. என அழைக்கப்படுகிறது.
அ) வளைகோட்டில், நிழல்கள்
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்
இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு
ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்
விடை:
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்

Question 2.
ஆடியில் படும் ஒளியானது ………………
அ) ஊடுருவிச் செல்கிறது
ஆ) எதிரொளிப்பு அடைகிறது
இ) உட்கவரப்படுகிறது
ஈ) விலகலடைகிறது
விடை:
ஆ) எதிரொளிப்பு அடைகிறது

Question 3.
……………………. பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
அ) நீர்
ஆ) குறுந்தகடு
இ) கண்ணாடி
ஈ) கல்
விடை:
இ) கண்ணாடி

 

Question 4.
ஒளி என்பது ஒரு வகை …………………..
அ) பொருள்
ஆ) ஆற்றல்
இ) ஊடகம்
ஈ) துகள்
விடை:
ஆ) ஆற்றல்

Question 5.
நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ……………..
அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை:
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

Question 6.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
அ) கண்ணாடி
ஆ) மரம்
இ) நீர்
ஈ) மேகம்
விடை:
ஈ) மேகம்

Question 7.
ஒளியானது ……………. எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது.
ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும்போது
இ) எதிராளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை .
விடை:
ஈ) மேற்கூறிய எதுவும் இல்
(குறிப்பு: ஒளியானது எதிரொளிக்கும் பரப்பை அடைந்த பின் எதிரொளிப்பு நடைபெறுகிற)

Question 8.
கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
அ) பிளாஸ்டிக் தட்டு
ஆ) சமதள ஆடி
இ) சுவர்
ஈ) காகிதம்
விடை:
ஆ) சமதள

Question 9.
சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலாக, ……………….
அ) தோன்றாது.
ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசை தோன்றும்.
இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரிய அதே திசையில் தோன்றும்.
ஈ) காலையில் தோன்றிய நிழலை விடக் குறைவான நீளம் கொண்டது.
விடை:
அ) தோன்ற

Question 10.
ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ………………………….
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
விடை:
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்

 

Question 11.
பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
அ) ஒளி நேர்கோட்டில் செல்கிறது .
ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை .
இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
ஈ) இடவலமாற்றம் அடைகிறது.

i) அ மற்றும் ஆ
ii) அ மற்றும் ஈ
iii) அ மற்றும் இ
iv) இ மற்றும் ஆ
விடை:
i) அ மற்றும் ஆ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் …………… ஆகும்
விடை:
நேரான மாய பிம்பு

Question 2.
……………. எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
விடை:
ஒளி

Question 3.
ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை …………………… அடைகின்றன
விடை:
எதிரொளிப்பு .

Question 4.
சூரிய ஒளியானது…………. வண்ண ங்களின் கலவை ஆகும்
விடை:
பல (VIBGYOR)

Question 5.
ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு …………… எனப்படும்.
விடை:
நிறப்பிரிகை

Question 6.
சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ……… செய்கிறது.
விடை:
எதிரொளிக்க

Question 7.
……………….. பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
விடை:
முப்பட்டகம்

Question 8.
சொரசொரப்பான பரப்பின் மேல் …………………. எதிராளிப்ப நடைபெறுகிறது.
விடை:
ஒழுங்கற்ற

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியான கூற்றை எழுதுக

Question 1.
ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன
விடை:
சரி

Question 2.
சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது
விடை:
சரி

Question 3.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. ஆனால் பெரிஸ்கோப் ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய கடைசி பிம்பமானது இடவலமாற்றம் இன்றி கிடைக்கிறது.
விடை:
தவறு

 

Question 4.
சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.
விடை:
சரி

Question 5.
புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
விடை:
சரி

Question 6.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் , நேர்மாறு பிம்பம் ஆகும்.
விடை:
சரி

Question 7.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்
சரியான விடை : ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிலிருந்து மாறுபடலாம்.
விடை:
தவறு

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பமானது தலைகீழ் மாற்றம் அடைவதில்லை
விடை:
தவறு

Question 9.
சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
விடை:
சரி

Question 10.
ஒரு பொருளின் நிழல், பொருள் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
சரியான விடை : ஒரு பொருளின் நிழலானது ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும்.
விடை:
தவறு

Question 11.
நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
விடை:
சரி

Question 12.
ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 2

V. சுருக்கமாக விடையளி

Question 1.
எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.
விடை:

Question 2.
படத்தில் ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 4

அ) ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 5

ஆ) பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்க.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 6
விடை:

Question 3.
ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?
விடை:
மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m
மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m
மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m
படுகோணம் ∠i = 4m ∠r = 4m
பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r
= 3.5m + 4m = 7.5m

 

Question 4.
ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
விடை:

  • தாமாகவே ஒளிரக்கூடிய பொருட்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்.
  • (எ.கா) சூரிய ஒளி, மின்சார பல்பு

Question 5.
நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.
விடை:

  • ஆம். சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும்.
  • ஆனால் சந்திரன் தாமாகவே ஒளியை உமிழாது.
  • சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது.

Question 6.
ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து, பொருள்களின் மூன்று வகைகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) தூய நீர்
  • பகுதி ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) சொரசொரப்பான கண்ணாடி
  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் (எ.கா) கல்

Question 7.
நிழல்களின் பகுதிகள் யாவை?
விடை:

  1. கரு நிழல்
  2. புற நிழல்

Question 8.
நிழல்களின் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
  • நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும்.
  • ஒரு பொருளின் நிழலின் மூலம் அதன் தன்மையைக் கண்டறிய முடியாது.
  • பொருளின் நிறம் எதுவானாலும், நிழல் கருமையாகவே இருக்கும்.
  • ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
  • நிழலின் அளவானது i) ஒளிமூலம் மற்றும் பொருள் மேலும் ii) பொருள் மற்றும் திரை இவற்றிற்கிடையே உள்ள தொலைவை சார்ந்துள்ளது.

Question 9.
சமதள ஆடி என்றால் என்ன?
விடை:

  • காது – சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும்.
  • தன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.

Question 10.
முப்பட்டகம் என்றால் என்ன?
விடை:
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.

Question 11.
கண்ணுறு ஒளி என்றால் என்ன?
விடை:
மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சின் வரம்பே கண்ணுறு ஒளி ஆகும்.

Question 12.
கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக.
விடை:
(நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி கோள்கள், மின்பல்பு, எரியும் மெழுகுவத்தி)

Question 13.
1 மீட்டர் 45 செ.மீ உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக.
அ) சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ……
விடை:
4 மீ ஆடியிலிருந்து சிறுவன் நிற்கும் தூரம் 1 = 2மீ(∠i)
∠i = ∠r = 2மீ
எனவே சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் உள்ள தொலைவு = சிறுவனிடமிருந்து கண்ணாடியின் தூரம் + கண்ணாடிக்கும் பிம்பத்திற்கும் உள்ள தூரம்.
= 2மீ + 2மீ = 4 மீ

ஆ) ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் …………………
விடை:
சமதள ஆடி ஏற்படுத்தும் பிம்பம் நேரானது. எனவே ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1 மீ 45 செ.மீ ஆகும்.

இ) சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு …………..
விடை:
சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால் சிறுவனுக்கும்,
ஆடிக்கும் உள்ள தொலைவு ∠i = 1மீ
∠i = ∠r = 1மீ
எனவே ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 1மீ ஆகும்.

 

Question 14.
ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 9

Question 15.
அவசர கால ஊர்திகளில் (AMBULANCE) என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?

விடை:
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக ‘AMBULANCE’ என நேராகத் தெரியும்.

Question 16.
ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின், பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக.
விடை:
A, H, I, M, O, T, U, V, W, X மற்றும் Y போன்ற 11 எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்கு ‘சமச்சீர் தன்மையே’ காரணமாகும்.

மற்ற எழுத்துக்களின் (B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S மற்றும் Z) பிம்பங்க ள் மாறாமல் இருக்கின்றன. இதற்கு இடவல மாற்றம்’ காரணமாகும்.

Question 17.
M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M) என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 11
அ. …………….. ………….. ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.
விடை:
BC, CD

ஆ. ……………………… ஆகியவை படுகதிர்கள் ஆகும்.
விடை:
AB, BC

இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?
விடை:
45°

ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன ?
விடை:
45°

Question 18.
ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?

விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 13

Question 19.
ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?
விடை:
எந்தவொரு பொருளின் மேற்பரப்பையும் அடைந்த பிறகு, ஒளி கதிர்கள் மீண்டு வருவது ஒளியின் எதிரொளிப்பு எனப்படும்.

Question 20.
ஓர் ஒளிக்கதிர் 50° கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன?
விடை:
படுகோணத்தின் மதிப்பு = 90° – 50° = 40° (∠i)
ஒளி எதிராளிப்பு விதியின்படி, படுகோணமும், எதிராளிப்புக் கோணமும் சமம்.
i = r
∠i = 40° ∠r = 40°
எனவே எதிராளிப்புக்கோணம் = 40° ஆகும்.

Question 21.
சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
சமதள ஆடியின் இடவல மாற்றப் பண்பின் காரணமாக ஆங்கில எழுத்து ‘b’ ஆனது d’ போன்று தெரியும்.

Question 22.
வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?
விடை:

  • ஒரு வெள்ளொளியானது முப்பட்டகத்தின் ஒரு சமதளப் பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகையடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை ஆகும்.
  • இதில் பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.

Question 23.
நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது?
விடை:
நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் – சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது.

நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடிகிறது.

 

Question 24.
நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருளானது, ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை. எனவே நிழல் உருவாகிறது.
  • சூரிய ஒளி, ஒளி ஊடுருவாப் பொருள், திரை ஆகியவை நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் ஆகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி.

Question 1.
ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு என்றால் என்ன? படத்துடன் விவரி.
விடை:
ஒழுங்கான எதிரொளிப்பு :

  • எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பாகவும் சமதளமாகவும் இருப்பின் ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறும்.
  • ஒழுங்கான எதிராளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்களாகப் பரப்பின் மேல் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுகின்றன.

ஒழுங்கற்ற எதிரொளிப்பு :

  • பரப்பு சொரசொரப்பாக இருப்பின் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறும்
  • இந்நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

Question 2.
ஒளிரும் மற்றும் ஒளிராமூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக்கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 15

Question 3.
அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக.
விடை:

  1. மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்
  2. சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்.
  3. லேசர் மற்றும் டார்ச் விளக்கின் ஒளி நேராக செல்லுதல்

Question 4.
எதிரொளிப்பு மற்றும் நிழல் – வேறுபடுத்துக.
விடை:

Question 5.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது.
  2. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்.
  3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும்.
  4. சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும் பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்.
  5. சமதள ஆடியின் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.

Question 6.
பின்வரும் படங்களின் மூலம் நீவீர் அறிவது என்ன?

விடை:

  1. ஒளியானது நேர்கோட்டில் செல்லும்
  2. ஒளியானது தானே வளைந்து செல்லாது
  3. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும்
  4. மேற்கண்ட படத்திலிருந்து B படமானது ஒளியின் முக்கியமான இப்பண்பினை விளக்குகிறது.
  5. படம் A-வில் ஒளியானது தானாகவே வளைகிறது. இந்த பண்பு ஒளியில் நடைபெறாத நிகழ்வாகும்.

 

Question 7.
பின்வருவனவற்றை வரையறுக்க.
i) படுகதிர்
ii) எதிரொளிப்புக் கதிர்
iii) குத்துக்கோடு
iv) படுகோணம்
விடை:

  1. படுகதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
  2. எதிரொளிப்புக் கதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக் கதிர் எனப்படும்.
  3. குத்துக்கோடு :
    படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
  4. படுகோணம் :
    படுகதிர்க்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் எனப்படும்

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 18

7th Science Guide ஒளியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் ஆனது …………….. வரை மதிப்பு உடையது.
அ) 300 nm முதல் 600 nm வரை
ஆ) 300 nm முதல் 700 nm வரை
இ) 400 nm முதல் 700 nm வரை
ஈ) 400 nm முதல் 600 nm வரை
விடை:
இ) 400 nm முதல் 700 nm வரை

Question 2.
ஓர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது நம் மூ ளை ……………… உணர்ந்து கொள்கிறது.
அ) பல நிறங்களை
ஆ) குறிப்பிட்ட நிறங்களை
இ) வெள்ளை நிறத்தை
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
ஆ) குறிப்பிட்ட நிறங்களை

Question 3.
…………………… சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
அ) சிவப்பு
ஆ) பச்சை
இ) வெள்ளை
ஈ) மெஜந்தா
விடை:
ஈ) மெஜந்தா

Question 4.
…………………….. நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) முதன்மை நிலை

Question 5.
கண்ணாடித்துண்டின் மேல் விழும் ஒளிக்கதிர் ………… என அழைக்கப்படுகிறது.
அ) எதிரொளிப்புக் கதிர்
ஆ) படுகதிர்
இ) படுபுள்ளி
ஈ) குத்துக்கோடு
விடை:
ஆ) படுகதிர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது நம் கண்ணின் ………….. தூண்டி பார்வையை ஏற்படுத்துகிறது.
விடை:
விழித்திரையைத்

Question 2.
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் …………. உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
விடை:
கண்ணாடி அல்லது

 

Question 3.
நிறங்களின் தொகுப்பு என்பது ……………….. தனித்துவமான நிறங்களை ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
விடை:
இரண்டு அல்லது மூன்று

Question 4.
………….. என்ற அறிவியல் அறிஞர் ஒளி காட்சி மற்றும் ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு முக்கிய பங்காற்றியவர்.
விடை:
அல்-ஹசன்-ஹயத்தம்

Question 5.
எதிரொளிப்புக் கதிர்ற்கும், குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ………… ஆகும்
விடை:
எதிரொளிப்புக் கோணம்

III. சரியா, தவறா என கண்டுபிடி (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை கண்டுபிடி)

Question 1.
ஒளிக்கதிர் கோடுகளை வரைவதின் மூலம் பொருளின் பிம்பத்தின் நிலையை அறியலாம்.
விடை:
சரி

Question 2.
திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விளக்கம் : திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு

Question 3.
கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது மூளையானது வெண்மையை உணர்கிறது.
விடை:
சரி

Question 4.
ஆரஞ்சு நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விளக்கம் : ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விடை:
தவறு

Question 5.
சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனைப்பூமிக்கும் பிரதிபலிக்கிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

V. ஒப்புமை தருக.

Question 1.
முதன்மை நிறம் : ஊதா
இரண்டாம் நிறம் : ………………….
விடை:
மெஜந்தா

Question 2.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால் : சூரிய கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி இருந்தால் : …………….
விடை:
சந்திரகிரகணம்

Question 3.
வெப்ப ஒளி மூலங்கள் : எரியும் மெழுகுவர்த்தி
வாயுவிறக்க ஒளி மூலங்கள் : ……………………
விடை:
நியான் விளக்கு

Question 4.
ஒளிரும் பொருள் : சூரியன்
உயிரி ஒளிர்தல் : …………………….
விடை:
ஜெல்லி மீன்

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச் சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.

காரணம் : தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

 

Question 2.
கூற்று : சந்திரன் ஒளியை வெளியிடுகிறது குறிப்பாக இரவில் சந்திரன் ஒளியைத் தருகிறது.
காரணம் : சந்திரன் ஓர் ஒளிரும் பொருள் ஆகும்.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Question 3.
கூற்று : பென்சிலின் நிழல் திரையில் உருவாகவில்லை.
காரணம் : நிழலின் உருவம் மற்றும் அளவு, ஒளி ஊடுருவாப் பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்.
விடை:
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

VII. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி

Question 1.
மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், நெருப்பு ஈ, வீட்டு ஈ
விடை:
வீட்டு ஈ
விளக்கம் : வீட்டு ஈ இயற்கையாக ஒளியை வெளியடாது.

Question 2.
எரியும் மெழுகுவர்த்தி, சுடர் ஏரி விளக்கு நியான் விளக்கு, சில ஆழ்கடல் தாவரங்கள்
விடை:
சில ஆழ்கடல் தாவரங்கள்
விளக்கம் : இவை இயற்கையாக ஒளியை வெளியிடுகின்றன.

VIII. சுருக்கமான விடையளி

Question 1.
வெப்ப ஒளி மூலங்கள் மற்றும் வாயுவிறக்க ஒளி மூலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக?
விடை:

Question 2.
ஒளியின் சில அடிப்படைப் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளியின் நேர்க்கோட்டு பண்பு
  • ஒளியின் எதிரொளித்தல் பண்பு
  • ஒளியின் வேகம்
  • பொருள்களோடு ஒளியின் செயல்பாடு
  • நிறமாலை

Question 3.
சோலா கிராமி என்றால் என்ன?
விடை:

  • காமிராவின் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில், ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது.
  • இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் சோலா கிராமி என்று பெயர்.
  • இவை நிலையான பொருள்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், சூரிய கிரகணத்தை காண்பதற்கும் பயன்படுகிறது.

Question 4.
குத்துக்கோடு என்றால் என்ன?
விடை:
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்கும் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.

 

Question 5.
ஒளி எதிரொளிப்பு விதிகள் யாவை?
விடை:

  • படுகோணமும் (i), எதிராளிப்புக் கோணமும் (r) சமம் ∠i = ∠r
  • படுகதிர். குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

Question 6.
ஒளிக்கதிர்களின் தொகுப்பு என்றால் என்ன?
விடை:
பொதவாக ஒளி என்பது ஒரே ஒரு கதிர் அன்று, அது பல ஒளிக்கதிர்களின் தொகுப்பு ஆகும்.

Question 7.
கிரகணம் என்றால் என்ன?
விடை:
ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாக மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் போது கிரகணம் தோன்றுகிறது.

Question 8.
வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
விடை:

  • சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன.
  • சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும்.
  • எனவே சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.

Question 9.
நிறங்களின் தொகுப்பு என்பது யாது?
விடை:

  • நிறங்களின் தொகுப்பு என்பது இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
  • அவ்வகையில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும்
  • இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 10.
VIBGYOR – யின் விளக்கம் தருக?
விடை:
V – ஊதா
I – கருநீலம்
B – நீலம்
G – பச்சை
Y – மஞ்சள்
O – ஆரஞ்சு
R – சிவப்பு

IX. விரிவான விடையளி

Question 1.
கிரணங்களின் வகைகளை பற்றி விளக்குக.
விடை:
சூரிய கிரகணம் :
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 21

  • சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.
  • சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது, புவியின் மேல் விழுகிறது.
  • புவியில் A என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியணைக் காண இயலாது.
  • இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
  • அதே போன்று புவியின் B மற்றும் C என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியனைப் பகுதியாகக் காண இயலும்.

சந்திர கிரகணம் :

  • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது எந்திர கிரகணம் நிகழ்கிறது.
  • சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து வருகிறது.
  • எனவே புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது.
  • இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது.
  • இது சந்திரகிரகணம் எனப்படும்.

 

Question 2.
ஒளி இழைகளை பற்றி விரிவாக விளக்குக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 23

  1. ஒளி இழை என்பது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
  2. இச்சாதனம் மூலம் ஒளி சமிக்ஞைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குறைவான நேரத்தில் மிகுந்த ஆற்றல் இழப்பு இல்லாமல் அனுப்ப இயலும்.
  3. இதனுள் சமிக்கைகளை அனுப்பும் வகையில் கண்ணாடி உள்ளகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளையும் தன்மை கொண்ட இழைகளும் உள்ளன.
  4. ஒளி இழையினை வளைக்கலாம், மடக்காலம்.
  5. ஒளியிழையின் ஒரு முனையில் ஒளியானது விழும்போது அது கண்ணாடி உள்ளகத்தில் முழு அக எதிரொளிப்பு அடைந்து மறு முனையில் குறைந்த ஆற்றல் இழப்புடன் வெளிவருகிறது.
  6. தரவு அல்லது தகவல் ஒளியியல் துடிப்புகளாக ஒளி இழையின் மூலம் அனுப்பப்படுகிறது.
  7. ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்கள் போன்ற அதிக வேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
  8. தொலை தொடர்புக்கு முன்னர் பயன்படுத்திய தாமிரக் கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  9. தாமிரக் கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்.

Question 3.
ஒளி ஊடுருவும் பொருள்கள் மற்றும் ஒளி ஊடுருவாப் பொருள்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக.
விடை:

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *