TN 7 Science

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

TN Board 7th Science Solutions Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ………….. நாட்களாகும்.
அ) 25
ஆ) 26
இ) 27
ஈ) 28
விடை:
இ) 27

Question 2.
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது ……….. நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
அ) பரணி
ஆ) கார்த்திகை
இ) ரோஹிணி
ஈ) அஸ்வினி
விடை:
ஈ) அஸ்வினி

 

Question 3.
…………….. தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
அ) ஹான் லிப்பெர்ஷே
ஆ) கலிலியோ
இ) நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்
ஈ) தாலமி
விடை:
அ) ஹான் லிப்பெர்ஷே

Question 4.
அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு………………… என்று பெயர்.
அ) நீள்வட்ட விண்மீன் திரள்
ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள்
இ) குழுக்கள்
ஈ) சுருள் விண்மீன் திரள்
விடை:
ஈ) சுருள் விண்மீன் திரள்

Question 5.
………….. துணைக்கோளை நிறுவியவுடன் ISRO4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
அ) GSAT-13
ஆ) GSAT- 14
இ) GSAT-17
ஈ ) GSAT- 19
விடை:
ஈ) GSAT- 19

II. கோடிட்ட இடத்தை நிரப்பவும்

Question 1.
வளர்பிறை என்பது ……………………
விடை:
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்

Question 2.
சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் …………………..
விடை:
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்

Question 3.
அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ……… ஆகும்.
விடை:
பெரு வெடிப்பு கோட்பாடு

Question 4.
ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ………………… ஆகும்
விடை:
உர்சா மேஜர்

Question 5.
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை …………… ஆகும்.
விடை:
ஆர்யபட்டா

III. சரியா – தவறா. தவறெனில் காரணம் கூறவும்

Question 1.
முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்
சரியான விடை: முழு நிலவு நாளில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் நிலவு கிழக்கில் உதிக்கிறது.
விடை:
தவறு

 

Question 2.
நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.
விடை:
சரி

Question 3.
கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
சரியான விடை : சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ வெள்ளிக்கோளை உற்று நோக்கி கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார்.
விடை:
தவறு

Question 4.
நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
சரியான விடை : நமது பால்வெளித் திரளானது சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.
விடை:
சரி

IV. பொருத்துக.


விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 2

V. ஒப்புமை

Question 1.
பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் : புது நட்சத்திரங்கள் : …………………
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

 

Question 2.
அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் ………….
விடை:
ஆல்ஃபா சென்டாரி

VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்

Question 1.
………………. என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு/ கூனல் நிலவு) .
விடை:
பிறை நிலவு

Question 2.
………. மற்றும் ……….. கோள்கள் நடு இரவில் தோன்றாது.
விடை:
புதன் மற்றும் வெள்ளி

Question 3.
சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்
விடை:
687 நாட்கள்

Question 4.
வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?
விடை:
பிறை நிலவு

Question 5.
பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று
விடை:
காஸ்மிக் நுண்ணலை பின்ன ணி (CMB)

Question 6.
அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ………………….
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

Question 7.
உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?
விடை:
ரஷ்யா (ஸ்புட்னிக் -1)

VII. குறுகிய விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்றால் என்ன?
விடை:
பல குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
நான்கு வகையான விண்மீன் திரள்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • சுருள் விண்மீன்திரள்கள்
  • நீள்வட்ட விண்மீன்திரள்கள்
  • ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
  • கோடிட்ட சுருள் விண்மீன்திரள்கள்

 

Question 3.
விண்மீன் மண்டலம் என்றால் என்ன?
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம்’ என அழைக்கப்படுகிறது.

Question 4.
PSLV மற்றும் GSLV யின் விரிவாக்கம் தருக.
விடை:
PSLV – துருவ செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம்
GSLV – ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
வெள்ளியின் வளர் மற்றும் தேய் கட்டங்களைக் குறித்து விளக்குக.
விடை:

  • நிலவைப்போலவே வெள்ளியும் பல கட்டங்களைக்கொண்டுள்ளது. பிறை வடிவத்திலிருந்து கிப்பஸ் வடிவத்திற்கு அதன் வடிவமானது மாறியது. கிரகத்தின் அளவும் வேறுபட்டது.
    1. கிரகமானது கிப்பஸ் கட்டத்தில் இருந்தபோது அதன் அளவு சிறியதாக இருந்தது.
    2. மெல்லிய பிறைபோல் இருந்தபோது அதன் அளவு பலமடங்கு அதிகமானது.
  • வெள்ளி நீள் வட்டத்தில் சுற்றி வருகிறது. சில நேரங்களில் கிரகம் அருகில் இருக்கும் போது அதன் அளவு பெரியதாக இருக்கும். சில நேரங்களில் அது தொலைவில் உள்ளபோது அதனளவு சிறியதாக இருக்கும்.
  • வெள்ளியானது சூரியனைச் சுற்றி சென்றுக்கொண்டிருந்தாலும், நள்ளிரவு வானத்தில் அதனைக் காண முடியாது.
  • வெள்ளி பூமிக்கு அருகில் வரும்போது அது சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்ததனைவிடப் பெயரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்.
  • வெள்ளி பூமியைச் சுற்றி வந்தால் நம்மால் வெள்ளியின் குமிழ் பிறையைக் காண இயலாது, வெள்ளி சூரியனைச் சுற்றி வந்தால் மட்டுமே காண இயலும்.

Question 2.
விண்மீன் மண்டலத்தைக் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற * நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.

உர்சாமேஜர் (சப்தரிஷிமண்டலம்) பெரியவிண்மீன் மண்டலம் ஆகும். அதுவானத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் சிறப்பு ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் பெரிய குவளை (இந்திய வானியலில் ஏழு துறவிகள்) என அழைக்கப்படும் ஒரு குழுவாகும்.

வட வானத்திலுள்ள உர்சா மைனர் இலத்தீன் மொழியில் ‘சிறிய கரம்’ என பொருள்படும். துருவ நட்சத்திரம் (போலாரிஸ்) சிறிய டிப்பர் (ஏழு நட்சத்திரம் கொண்ட குழு) போன்றவை இம்மண்டலத்தில் உள்ளது

ஒரியன் விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது. இதில் 10 தவிர மற்றவற்றை வெறும் கண்களால் காண இயலாது.

பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.

விண்மீன் திரள்களில் நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஓர் அமைப்பாக – உள்ளன. ஆனால் விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றமே.

IX. உயரிய சிந்தனைக் கேள்வி

Question 1.
நீலனும் மாலாவும் நமது அண்டத்தினைக் குறித்த ஒரு உரையாடலில் உள்ளனர். நமது பூமி மட்டும் தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள் என நீலன் கூறுகிறான். ஆனால் சில விளக்கங்களைக் கூறி மாலா அவனது கருத்தினை எதிர்க்கிறாள். மாலா என்ன விவாதம் செய்திருப்பாள். நீ மாலாவை ஆதரிக்கிறாயா? உனது நிலையை நியாயப்படுத்து.
விடை:
நீலன் : ‘நமது பூமி மட்டும்தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள்.
மாலா :
தற்போது வேறு நட்சத்திரங்களைச் சுற்றியும் வெளிக்கோள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலிருந்து சூரியனை சுற்றி மட்டுமல்லாமல், பிரபஞ்சம் முழுவதும் இந்தக்கிரக அமைப்புகள் இருப்பது நிரூபணம் ஆகிறது.

யாருக்குத் தெரியும்? அந்த கிரகங்களில் எதிலாவது வாழ்க்கை இருக்கலாம், அதிலும் சிலவற்றில் மனிதனைப் போன்ற பகுத்தறிவுள்ள உயிர் வாழ்வதாக இருக்கலாம்.

நாம் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்புற்று, ஆராய்ச்சி செய்வது போல் அவர்களும் ஆராய்ச்சி செய்யலாம்.

எதிர்காலத்தில் நாம் அவர்களைச் சந்திக்கும் பொழுது அந்தக் கணம் எவ்வளவு அற்புதமானதாகவும், உற்சாகமானதாகவும் இருக்கும்!

குறிப்பு :
மாலாவின் கூற்றுப்படி, ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பில் பூமி மட்டுமே உயிரிகள் வாழ ஏதுவான கோளாக உள்ளது.

சூரியன் :
பூமியின் இருப்பிடம், தட்ப வெப்ப நிலை, புறஊதாக்கதிர்களின் பாதுகாப்பு, புவியீர்ப்பு முடுக்கம் போன்ற பல காரணங்களால் பூமி கோள் மட்டுமே தற்போது உயிர் வாழத் தகுந்த ஒரே கோள் ஆகும்.

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேய்பிறை என்பதன் விளக்கம் ……………
அ) வளர்தல்
ஆ) விரிவடைதல்
இ) குறைதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) குறைதல்

 

Question 2.
தேய்பிறைக் காலத்தின் போது அரை நிலவு ………… என அழைக்கப்படுகிறது.
அ) முதல் கால் பகுதி
ஆ) இரண்டாவது கால் பகுதி
இ) மூன்றாவது கால் பகுதி
ஈ) நான்காவது கால் பகுதி
விடை:
அ) முதல் கால் பகுதி

Question 3.
……………. எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளன. எனவே நள்ளிரவில் வானத்தில் தெரிவதில்லை .
அ) செவ்வாய்
ஆ) வியாழன்
இ) சனி
ஈ) வெள்ளி & புதன்
விடை:
ஈ) வெள்ளி & புதன்

Question 4.
………………. நிலவின் மலைகளையும் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத சிறிய மங்கலான நட்சத்திரங்களையும், சூரியன் முகத்தில் சூரியம் புள்ளிகளையும் கண்டறிந்தார்.
அ) ஹான்ஸ் லிப்பர்ஷே
ஆ) டைக்கோ ப்ராஹே
இ) கலிலியோ
ஈ) கிரிக்கோ ரோமன்
விடை:
இ) கலிலியோ

Question 5.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில் அது ………. வாயுக்களால் ஆன கூட்டமாகவே இருந்தது.
அ) நைட்ரஜன் – ஹிலியம்
ஆ) கார்பன் – ஹிலியம்
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவிலிருந்து முனைவரை சுருண்ட சக்கரம் போன்ற அமைப்பு கொண்டதால் இவை …………. எனப் பெயரிடப்பட்டுள்ளன.
விடை:
சுருள் விண்மீன்

Question 2.
திரள்கள் ஒரு …………… என்பது விண்மீன்களாலான குறுக்குக் கோடு கொண்ட சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
கோடிட்ட சுருள் விண்மீன் திரள்கள்

Question 3.
அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் ………… சூழப்பட்டுள்ளன.
விடை:
நீள்வட்ட விண்மீன்

Question 4.
…………. மிகத் தொலைவில் அமைந்துள்ளதால் அவை சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தோன்றுகின்றன.
விடை:
நட்சத்திரங்கள்

 

Question 5.
………………… விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தார்.
விடை:
சுப்ரமணியன் சந்திரசேகர்

III. சரியா தவறா (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை எழுதுக)

Question 1.
இந்தப் பிரபன்சத்தில் விண்மீன் திரள்கள், கிரகங்கள் நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக் கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன.
விடை:
சரி

Question 2.
சந்திரன் ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.
விடை:
தவறு
விளக்கம் : சூரிய ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.

Question 3.
கிரகங்கள் பூமிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.
விடை:
சரி

Question 4.
கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சத்தினைத் தொலை நோக்கியால் பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
நட்சத்திரங்களின் சிறிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.
விடை:
தவறு
விளக்கம் : நட்சத்திரங்களின் பெரிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.

IV. பொருத்துக.

V. ஒப்புமை தருக.

Question 1.
சுழல் விண்மீன் திரள் : தட்டையான சுழலும் வட்டு நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
நீள்வட்ட விண்மீ ன்திரள் ……………………
விடை:
அமைப்பு இல்லாத முப்பரிமாண வடிவம்

Question 2.
சூரிய மையக் கோட்பாடு : சூரியன் மையத்தில் உள்ளது.
புவி மையக் கோட்பாடு ………………….
விடை:
பூமி மையத்தில் உள்ளது

Question 3.
உர்சா மைனர் என்பதன் பொருள் …………………
தேய்பிறை என்பதன் பொருள் : வெளிச்சம் குறைதல்
விடை:
சிறிய கரடி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : வளர்பிறைக் காலத்தில் நிலவானது மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
காரணம் : கிப்பஸ் என்பது சந்திரன் அரை வட்டத்திற்கு கீழ் குறைவாக ஒளிரும் கட்டங்களைக் குறிக்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

 

Question 2.
கூற்று : பெரும்பாலான விண்மீன் திரள்களின் விட்டம் ஆயிரம் முதல் விண்ணியல் ஆரம் வரை உள்ளன.
காரணம் : ஒழுங்கற்ற விண்மீன் திரள்கள் ஏராளமான வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

VII. இதில் ஒன்று பொருந்தாததை கண்டுபிடி

Question 1.
மேஷம், சிம்மம், விருட்சிகம், கேப்ரிகோன்
விடை:
கேப்ரிகோன்
காரணம் : இவை ஆங்கிலப் பெயர் விண்மீன் மண்டலம்.

Question 2.
ரோகினி -1, அக்னி, பிருத்வி, சந்திரயான்-1
விடை:
சந்திரயான் -1
மற்ற மூன்றும் : APJ அப்துல்கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டது.

VIII. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
பிற்போக்கு இயக்கம் என்பது யாது?
விடை:
கோள்கள் தங்களது பாதையை திருப்பிக் கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும்.

Question 2.
பிரபஞ்சத்தில் காணப்படும் விண்மீன் திரள்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • கிரகங்கள்
  • நட்சத்திரங்கள்
  • விண்கற்கள்
  • செயற்கைக் கோள்கள்
  • அனைத்து வகையான பொருள்களும் ஆற்றல் உள்ளன.

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன்கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:

  • பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.
  • இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

 

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது. –
  • 1 PC = 3.2615 ஒ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால்பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 5

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன் கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:
பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.

இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

 

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது.
  • 1 PC = 3.2615 ஓ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால் பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 5.
APJ அப்துல் கலாம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் பற்றி எழுதுக?
விடை:
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்.எல்.வி 3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியினைப் பயன்படுத்தி ரோகினி -1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.

இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி. நாக் மற்றும் ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.

X. விரிவான விடையளி

Question 1.
இயற்கையான செயற்கைக் கோள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  • ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் அனைத்து இயற்கைப் பொருள்களும் இயற்கை செயற்கைக் கோள்கள் ஆகும்.
  • அவை நிலவுகள் என அழைக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான நிலவுகள் கோள வடிவுடையவையாக உள்ளன.
  • இவை பொதுவாக கோள்களின் வலுவான ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்படும் விண்கற்களோ எரி கற்களோ அல்ல.
  • நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும்.
  • பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது.
  • அதே சமயம் வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளன.

 

Question 2.
சுப்ரமணியன் சந்திரசேகர் விண்வெளி இயற்பியலாளர் பற்றி எழுதுக?
விடை:

  • சுப்பிரமணியன் சந்திர சேகர் இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார்.
  • 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
  • இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித நீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருத்துளைகளின் பரிணாமப்படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தது.
  • சந்திரசேகர் தமது வாழ்நாளில் பல்வேறுவகையான இயற்பியல்ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார்.

Question 3.
நீள்வட்ட விண்மீன் திரள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  1. ஒரு நீள்வட்ட விண்மீன் திறள் என்பது ஏறத்தாழ நீள்வட்ட வடிவம் மற்றும் ஒரு மென்மையான உருவம் உடைய ஒரு வகை விண்மீன் திரள் ஆகும்.
  2. சுழல் விண்மீன் திரள்கள் போல் அல்லாமல் நீள்வட்ட விண்மீன் திரள்கள் மூன்று பரிமாணங்களை கொண்ட, கட்டமைப்பற்ற மையத்தில் சீரற்ற சுற்றுப்பாதையில் உள்ள விண்மீன்களைக் கொண்டுள்ளன.
  3. இவை சுழல் விண்மீன் திரள்களில் காணப்படுவதை விட அதிக வயதுடைய விண்மீன்களை உள்ளடக்கியவையாகும்.
  4. அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் நீள்வட்ட விண்மீன்கள் சூழப்பட்டுள்ளன.

Question 4.
சூரிய மைய மாதிரி பற்றி விளக்குக?
விடை:

  • சிக்கலான புவிமைய நீள்வட்ட மாதிரியை ஏற்றுக்கொள்ளாத, நிகோலஸ் கோப்பர் நிக்கஸ். சூரியனை மையமாகக் கொண்டு பூமியை மற்றும் அனைத்துக் கிரகங்களும் சுற்றி வருவதாகக் கூறினார்.
  • சூரியனின் இரு பக்கத்திலும் பூமி மற்றும் செவ்வாய் இருப்பதாகக் கொண்டால் செவ்வாயானது அவை அருகில் இருப்பதனை விட மங்கலாகத் தெரியும்.
  • பூமி 365 நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • ஆனால் செவ்வாய் 687 நாள்களில் சுற்றுகிறது.
  • பூமி, செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போதும், அதனை முந்திச் செல்லும் போதும் செவ்வாய் பிற்போக்கு இயக்கத்தினை மேற்கொள்கிறது.

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *