TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.1 எங்கள் தமிழ்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.1 எங்கள் தமிழ்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.1 எங்கள் தமிழ்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நெறி ‘ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
Answer:
அ) வழி

 

Question 2.
குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
Answer:
ஆ) குரல் + ஆகும்

Question 3.
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) வான் ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானெலி
Answer:
ஆ) வானொலி

 

நயம் அறிக

Question 1.
‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள்நெறி-  ……………………..
பொருள் பெற – ……………………..
கொல்லா – ……………………..
Answer:
மோனை:
அருள்நெறி – அதுவே
பொருள் பெற – போற்றா
கொல்லா – கொள்கை

Question 2.
‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அருள் –  ……………………..
கொல்லா –  ……………………..
அன்பும் –  ……………………..
Answer:
எதுகை :
அருள் – பொருள்
கொல்லா – எல்லா
அன்பும் – இன்பம்

 

Question 3.
‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
தரலாகும் – ……………………..
புகழாது – ……………………..
குறியாக – ……………………..
ஊக்கிவிடும் – ……………………..
Answer:
இயைபு :
தரலாகும் – குரலாகும்
புகழாது – இகழாது
குறியாக – நெறியாக
ஊக்கிவிடும் – போக்கிவிடும்

குறுவினா

Question 1.
தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  • தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
  • அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

 

Question 2.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
Answer:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். இவையே கற்றவரின் இயல்புகளாகும் என நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
தமிழ்மொழியின் பண்புகள்:

  • தமிழ்மொழி , அருள்நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.
  • அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்கள்.

எல்லா மனிதர்களும் இன்புற்று வாழும் நெறிகள்:

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

தமிழ்மொழி தேன் போன்றது:

  • நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
  • அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.
  • எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.

 

சிந்தனை வினா

Question 1.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:

  • தமிழைப் போற்றிப் புகழாத கவிஞர்களே இல்லை எனலாம். நம் கவிஞர் எங்கள் தமிழ்’ என்னும் கவிதையில் நம் தமிழ் மொழியானது அன்பையும் அறத்தையும் தூண்டக்கூடியது.
  • தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.
  • தேன்சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

கற்பவை கற்றபின்

Question 1.
“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
இப்பாடலை இசையுடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கத்தி யின்றி ரத்தமின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!….. (கத்தியின்றி…)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட…… (கத்தியின்றி ….)

இப்பாடல் விடுதலை வேட்கையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இவர் பாடலில் இயல்பாகவே சொல் நயம், பொருள் நயம், தொடைநயம் அமையப் பெற்ற ஓர் அற்புத பாடலாகும்.

மோனை: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

கத்தியின்றி – கண்டதில்லை, பண்டு – பலித்த

எதுகை : செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

கத்தியின்றி – யுத்தமொன்று,
கண்டதில்லை – சண்டையிந்த

 

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. அருள் – கருணை
2. நெறி – வழி
3. விரதம் – நோன்பு
4. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
5. குறி – குறிக்கோள்
6. பொழிகிற – தருகின்ற
7. வானொலி – வான்மொழி

நிரப்புக :

Question 1.
குறி என்பதன் பொருள் ………
Answer:
குறிக்கோள்

 

Question 2.
விரதம் என்பதன் பொருள்……………..
Answer:
நோன்பு

விடையளி :

Question 1.
தமிழ்மொழியைக் கற்றோர் எதனை விரும்பமாட்டார்?
Answer:

  • தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
  • தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

Question 2.
எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ எவை உதவும்?
Answer:
கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்பமாக வாழ அன்பும் அறமும் பெரிதும் உதவும் என நாமக்கல் கவிஞர் தம் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.

 

Question 3.
தமிழ்மொழி எதனைத் தூண்டும்?
Answer:
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும் என நாமக்கல் கவிஞர் தம் பாடல் மூலம் தெரியப்படுத்துகிறார்.

Question 4.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் யார்?
Answer:
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

Question 5.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் காந்தியக் கவிஞர் என ஏன் அழைக்கப்பட்டார்?
Answer:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் ‘காந்தியக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார்.

 

Question 6.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் படைத்த நூல்களைக் குறிப்பிடுக.
Answer:
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை, சங்கொலி முதலியன நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் படைத்த நூல்கள்.

பொருத்துக :

1. ஊக்கிவிடும் – அ) நோன்பு
2. பொழிகிற – ஆ) ஊக்கப்படுத்தும்
3. குறி – இ) தருகின்ற
4. விரதம் – ஈ) குறிக்கோள்
Answer:
1-  ஆ
2-  இ
3-  ஈ
4- அ

 

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேச மாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்; எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

 

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *