TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 சொலவடைகள்

மதிப்பீடு

Question 1.
பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
ஆளுக்கு ஒரு வேலை (பொம்மலாட்டம்)
(சிறுகதை)
Answer:
பொம்மலாட்டம் ஒரு கலை, கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்னணியில் கதை மாந்தர்களை பேச விட்டு கதை சொல்லத் தொடங்குவர். கதை விறுவிறுப்பாக சென்று ஒரு கட்டத்தில் சட்டென்று முடியும். இக்காட்சியைப் பார்த்து சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து மகிழ்வர். இதோ மெல்லிய ஒடிசலான தேகம் கொண்ட நடுத்தர வயதுக்காரர் பொம்மலாட்டம் மூலம் கதையொன்றை சொல்லி அசத்துகிறார். அந்தக் கதையை நாமும் கேட்போமே!

பொம்மலாட்டம் பார்க்க வந்தவர்களை இரு கரம் கூப்பி வணங்கி கதை நாயகனை அறிமுகம் செய்கிறார் கதை சொல்லி.

பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே ஊரைச் சுற்றுகிறான் பையன். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.

”அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையிலே முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு” என்கிறார் அப்பா. “படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” முகத்தில் அறைந்தாற் போல் பேசுகிறான் நம் கதைநாயகன். அப்பா சத்தம் போடுகிறார், சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க, “ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ளே விலைபோகும். நீ ன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க – இது அம்மாவின் உபதேசம்.

வேறு வழியில்லாம பையன் பள்ளிக்கூடம் போகிறான். அவனுக்கு படிப்பதில் நாட்டமில்லை, விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒன்ணு போய்கிட்டு இருக்கு , “எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?” – என்றான் பையன். ”குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம் எனக்கு நெறைய வேலை கிடக்கு. நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.

“தேனீ! தேனீ! நீ என் கூட விளையாட வர்றியா? என்றான் பையன்” “உனக்குத்தான் வேலை இல்லை, எனக்குமா வேலை இல்லை. போபோ நான் தேன் எடுக்கனும்” பறந்து போனது தேனீ. பையன் கொஞ்சம் தூரம் நடக்கிறான். பொதிமாடு ஒன்றைப் பார்க்கிறான்.

“மாடே! மாடே! சும்மாதானே இருக்கே! என் கூட விளையாட வர்றியா?” என்றான் பையன்.
”எனக்கு வேலை இருக்கு அந்த ஆமையை போய்பாரு என்றது பொதிமாடு”. “ஆமையே! ஆமையே! என் கூட விளையாட வர்றியா? எனக் கேட்டான் பையன்.

“முயலோட போட்டி வச்சிருக்கேன். எனக்கு உன்கூட விளையாட நேரமில்லே நீ அந்த முயலைப் போய் பாரு” என்றது ஆமை.
முயலை விளையாட அழைத்தான். முயலும் விளையாட மறுத்தது.

சுராவின் தமிழ் உரைநூல் – 7 ஆம் வகுப்பு – 5 in 17 முதல் பருவம்
கடைசியில் குட்டிச்சுவரில் எகிறி குதித்தான் பையன். குட்டிச் சுவரில் இருந்து எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோடு அவன் கையில் கால்ல ஏறி நறுக்கு நறுக்கென்று கடித்தன. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடுறான்.

அம்மாவைப் பார்த்து “இந்த உலகத்திலே எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாக்குறாங்க ஈ, எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது என்றான் பையன்.
அம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் மகனின் மன மாற்றத்திற்காக.

 

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
Answer:

  • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மப் பகைங்கிற மாதிரி படிக்காத பையனை போராடித்தான் படிக்க வைக்கணும்.
  • அடை மழைவிட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி படிக்கலனா அப்பாவிட்டாலும் அம்மா விட மாட்டாங்க.
  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  •  “அப்பன் குதிருக்குள்ள இல்ல.”

Question 2.
பரடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
Answer:

  • குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
  • தட்டிப்போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லே என்பது போல வறுமையிலே வாடுகிறவங்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடுவாங்க.
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி நிழலில் படுத்து தூங்கினதால ஆமையிடம் தோற்று போச்சாம் முயலு!
  • ஆயிரம்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் உழைக்கிறவன் மத்தியிலே உதவாக்கரை ஒருத்தன் இருந்தால் அந்தக் கூட்டமே கெட்டுவிடும்.
  • புண்ணுக்கு மருந்து போட முடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? வீண் விதண்டாவாதம் செய்கிறவனிடம் பேசி ஜெயிக்க முடியாது.

 

கூடுதல் வினாக்கள்

நீரப்புக :

Question 1.
உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள ……… போகும்.
Answer:
விலை

Question 2.
அடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.
Answer:
செடி

 

Question 3.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு ………….. பூச்சி போதும்.
Answer:
அந்துப்பூச்சி

Question 4.
பாடிப்பாடிக் குத்தினாலும் ……………. அரிசி ஆகுமா?
Answer:
பதரு

 

Question 5.
அதிர அடிச்சா ……… விளையும்.
Answer:
உதிர

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *