TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
Answer:
இ) காற்று

Question 2.
மக்கள் ………………….. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்
Answer:
ஈ) வங்கத்தில்

Question 3.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………….
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
Answer:
இ) கடல்

Question 4.
‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
Answer:
ஆ) பெருமை + கடல்]

Question 5.
இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) இன்று ஆகி
ஆ) இன்றி ஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றா ஆகி
Answer:
இ) இன்றாகி

Question 6.
எதுகை இடம்பெறாத இணை ………..
அ) இரவு – இயற்கை
ஆ) வங்கம் – சங்கம்
இ) உலகு – புலவு
ஈ) அசைவு – இசைவு
Answer:
அ) இரவு – இயற்கை

பொருத்துக

1. வங்கம் – பகல்
2. நீகான் – கப்பல்
3. எல் – கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்
Answer:
1. வங்க ம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

குறுவினா

Question 1.
நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
Answer:
நாவாயின் தோற்றம் : உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் என்று அகநானூறு நாவாயின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது.

Question 2.
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணை செய்கிறது?
Answer:
இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது.

சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
Answer:

  • உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.
  •  அந்த நாவாய் புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற கடற்காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்த பெரிதும் துணை புரிகின்றது.
  • உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என்று அகநானூறு கடலில் கப்பல் செல்லும் காட்சியை விளக்குகிறது.

சிந்தனை வினா

தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
Answer:

  • நான் விரும்பும் பயணம் கடல்வழிப் பயணம்.
  • ஏனென்றால் கடலில் செல்லும் போது கடலில் வீசும் இதமான காற்று உடலை வருடிச் செல்லும். மேலும் கீழுமாக தாவிச் செல்லும் அலைகள் காண்பதற்கு கவினுற அமைந்திருக்கும்.
  • கடலில் வாழும் பல்வகை மீன்கள் கடல் நீரில் நீந்திச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
  • இரவு நேரத்தில் கப்பலிலிருந்து ஆகாயத்தைப் பார்க்கும் போது பல்வகை விண்மீன்கள் மற்றும் நிலவு நம்முடனே பயணிப்பது போன்ற தோற்றம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கற்பவை கற்றபின்

Question 1.
கடலில் கிடைக்கும் பொருள்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்கள் :

  • பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள் கடலின் மூலம் கிடைக்கின்றன.
  • சுண்ணாம்பு. மணல், சரளை போன்ற பொருட்கள் மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள்.
  • கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு.
  • கடல் நீரில் இருந்து உப்பு கிடைக்கிறது.
  • கடல்வாழ், உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட்ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.
  • ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும். முத்தை அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Question 2.
கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. உரு – அழகு
2. வங்கம் – கப்பல்
3. போழ – பிளக்க
4. எல் – பகல்
5. வங்கூழ் – காற்று
6. கோடு உயர் – கரை உயர்ந்த
7. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘உரு’ என்பதன் பொருள் …..
அ) நாவாய் ஓட்டுபவன்
ஆ) கப்பல்
இ) கரை உயர்ந்த
ஈ) அழகு
Answer:
:ஈ) அழகு

Question 2.
‘போழ’ என்பதன் பொருள் …………………
அ) பிளக்க
ஆ) காற்று
இ) கப்பல்
ஈ) கலங்கரை விளக்கம்
Answer:
அ) பிளக்க

Question 3.
‘வங்கூழ்’ என்பதன் பொருள் ……………….
அ) காற்று
ஆ) அழகு
இ) பிளக்க
ஈ) பகல்
Answer:
அ) காற்று

Question 4.
‘நீகான்’ என்னும் சொல்லுக்கு …………………………. என்பது பொருள்.
அ) நாவாய் ஓட்டுபவன்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) பகல்
ஈ) கப்பல்
Answer:
அ) நாவாய் ஓட்டுபவன்

Question 5.
‘வங்கம்’ என்பதன் பொருள் ……………….
அ) கப்பல்
ஆ) பகல்
இ) அழகு
ஈ) காற்று
Answer:
அ) கப்பல்

Question 6.
கோடு உயர் என்பதன் பொருள் ……………..
அ) கரை உயர்ந்த
ஆ) கப்பல்
இ) காற்று
ஈ) பிளக்க
Answer:
அ) கரை உயர்ந்த

Question 7.
மாட ஒள்ளெரி என்பதன் பொருள் ………………
அ) கலங்கரை விளக்கம்
ஆ) பிளக்க
இ) கரை உயர்ந்த
ஈ) காற்று
Answer:
அ) கலங்கரை விளக்கம்

விடையளி:

Question 1.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றா?
Answer:
ஆம். இது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.

Question 2.
எட்டுத் தொகை நூல்களை வரிசைப்படுத்துக:
Answer:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.

Question 3.
மருதன் இளநாகனார் குறிப்பு வரைக.
Answer:

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்தைந்து பாடல்களையும் பாடியவர்.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

பாடலின் பொருள்

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செல்லும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *