TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.2 அழியாச் செல்வம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.2 அழியாச் செல்வம்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.2 அழியாச் செல்வம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்வியைப் போல் , ……………….. செல்லாத செல்வம் வேறில்லை .
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
ஆ) கேடில்லாத

Question 3.
‘வாய்த்தியின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) வாய்த்து + ஈயீன்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
Answer:
ஆ) வாய் + தீயின்

Question 4.
கேடில்லை’ என்னும் கொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……..
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
Answer:
ஈ) கேடு = இல்லை

Question 5.
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Answer:
இ) எவனொருவன்

குறுவினா

Question 1.
கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Answer:
கல்வியைப் பொருள் போல் வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும் படி கொடுத்தாலும் குறைவுபடாது : மிக்கச் சிறப்பினை உடைய அரசராலும் கவா முடியாது போன்ற இயல்புகளைக் கொண்டது.

சிறுவினா

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • கல்வியைப் பொருள் போல் வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்கச் சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
  • ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
  • மற்றவை செல்வம் ஆகாது என்பன நாலடியார் கூறும் கருத்துகளாகும்.

சிந்தனை வினா

கல்விச் செல்வம் அழியாதக் செல்வம் எனப்படுவது ஏன்? சிந்தித்து எழுதுக.
Answer:
i) ஒரு மனிதன் தம்முடன் அனைத்துச் செல்வங்களையும் வைத்திருந்தாலும் அவனுக்கு கல்வியில்லையேல் அனைத்துச் செல்வங்களும் அழிந்து விடும். ஆனால் அழியாத ஒரு செல்வம் கல்விச் செல்வம் மட்டுமே

(ii) கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே. கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.

(iii) கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். கல்வி கற்றவரிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கியத் தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இவ்வுலகில்லை.

(iv) கல்வி கற்றவன் ஒழுக்கமாகவும், திறமையாகவும், அறிவாளியாகவும் சமுதாயத்தால் மதிக்கப்படுவனாக இருப்பான். எனவே என்றுமே அழியாத செல்வம் கல்வி மட்டுமே.

கற்பவை கற்றபின்

Question 1.
கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
Answer:

  • வேற்றுமை தெரிந்து நாற்பாலுள்ளும் – கீழ்ப்பால்
    ஒருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே. ………….- புறநானூறு )
  • கடைநிலத்திற் பிறந்தவர் எனினும்
    கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர். ………………………………- நாலடியார்
  • கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
    மற்றோர் அணிகலம் வேண்டாவாம்: …………………….- நீதிநெறி விளக்கம்
  • நெஞ்சத்து நல்லம் யாம் என்னும்
    கல்வியழகே அழகு : …………………….- நாலடியார்
  • கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக. …………….- திருக்குறள்

Question 2.
கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
கல்வி தந்த உயர்வு : சிறுவர் கல்வி சிறுகதைகள்
ஒரு குக்கிராமத்தில் அன்னம்மாள் என்னும் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அப்பெண்மணி ஓர் அந்தணனின் மனைவி : அன்னம்மாளின் நல்வினைப் பயனால், அவளுக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்கு, கபிலன் – என்னும் பெயர் சூட்டி, அருமைமிகு வளர்ந்து வந்தனர். அதன் பின்னர் பிறந்த ஓர் ஆண் குழந்தைக்குக் கோவிந்தா என்னும் பெயரையும், பெண் குழந்தைக்குக் அம்பிகை என்னும் ! பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள்.

கபிலன், கோவிந்தா, அம்பிகை ஆகிய மூவரும் சிறுவர்களாக இருந்தபோதே, அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டனர்: தாய்ப் பறவையை இழந்த, சிறகு முளைக்காத குஞ்சுகள் போலப் பிள்ளைகள் மூவரும் அல்லலுற்றனர்.

அவர்களுக்கு உண்ண உணவில்லை உடுத்த உடை இல்லை : அவர்கள் மிகவும் வறுமையில் வாடினர். உடன்பிறந்தாரைப் பாதுகாக்கும் பொறுப்பு கபிலனுக்கு உரியதாயிற்று. அவன் என்ன செய்வான் பாவம் !
கபிலன் வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி வந்து; தம்முடன் பிறந்தவர்களுக்குக் கொடுத்து, தாமும் உண்டு ஒருவாறு காலத்தைக் கழித்து வந்தான். கபிலன் பிச்சை வாங்க செல்லும் போது, அவனது உள்ளம் உருகும்; உடல் நடுங்கும், மென்மையான முகத்தில் துன்பம் தோன்றும் கண்களில் நீர் நிறைந்து வழியும் பிச்சை இடாதவரின் கடுஞ்சொல்லும் சுடுமுகமும், அவனது துன்பத்தை மேலும் மேலும் வளர்த்த வண்ணம் இருந்தன.

அந்நிலையில், கபிலனின் பிஞ்சு உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றி; அவனை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது. “எப்படியாவது நாம் படித்துவிட்டால் இத்தொழிலை விட்டு விடலாம்!” என்று நினைத்தான்.

அந்த வருத்தத்தினிடையே கபிலன், ”படித்தேயாக வேண்டும்’ என்னும் முடிவைக் கொண்டான். உடனே அந்த ஊரில் இருந்த ஆசிரியரை அடைந்து, வணங்கி நின்று, “ஐயா! படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகிறது. நான் எடுப்பதோ பிச்சை, உடுப்பதோ கந்தல் ஆடை நீங்கள் அருள்கூர்ந்து அடியேனுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளில் அடியேனும் ஒருவன்!” என்று கூறினான்.

அதைக் கேட்ட ஆசிரியர், தம் கையில் இருந்த பிரம்பைக் கீழே வைத்தார்; சிறுவனாகிய கபிலனை நோக்கினார். “சிறுவனே! உன் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. அது எல்லாருடைய உள்ளத்திலும் உண்டாகிற அழுக்கில்லாத ஆசை. இங்குக் கிடக்கும் பனையோலைகளே உனக்குப் பெருவாழ்வளிக்கும் பொன்னேடுகள். இப்பனையோலையில் எழுதி தருகிறேன். நீ படித்துக்கொள்!” என்று கூறினார். கபிலனின் உள்ளம் குளிர்ந்தது; முகம் மலர்ந்தது.

அன்றே கபிலன் படிக்கத் தொடங்கினான். “இன்ன நேரத்தில் இன்ன வேலை செய்ய வேண்டும்” என்று ஒரு திட்டம் வகுத்துக் கொண்டான்; முறைப்படி கடமை புரிந்தான். கபிலன் தெலுங்கில் ஓரளவு அறிவு பெற்ற பின், வடமொழியையும் பயின்றான்.

Question 3.
பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.
Answer:
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிக எளிது கல்வி யென்னும்
உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே. -தனிப்பாடல் திரட்டு

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
2. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்
4. விச்சை – கல்வி

நிரப்புக.

Question 1.
வைப்புழி என்பதன் பொருள் …………
Answer:
பொருள் சேமித்து வைக்கும் இடம்

Question 2.
விச்சை என்பதன் பொருள் ….
Answer:
கல்வி

Question 3.
…………….. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
Answer:
நாலடியார்

பாடலின் பொருள்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *