TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் …
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்

Question 2.
கல்வியில்லாத நாடு ……………………… வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத

Question 3.
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………….
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
விடை:
இ) பாரதியார்

Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது … ……
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்

Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. செல்வம் – கல்விச் செல்வமே ஒருவன் பெற வேண்டிய சிறந்த செல்வம்.
2. இளமைப்பருவம் – கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் இளமைப்பருவம்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்திட வேண்டும்.

குறுவினா

Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
Answer:

  • உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனித்தன்மை உண்டு
  • ஏனெனில் எதிர்காலத்தைப் பற்றி அறிய இயலாத அருமையான பிறவியே மனிதப் பிறவி
  • மற்ற உயிரினங்கள் எதிர்காலத்தில் இவ்வாறுதான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் மனிதனின் நிலையோ மாற்றம் நிறைந்தது

Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:

  • கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
  • விலங்குகள் நல்ல செயல்களைத் தாமாகச் செய்வதில்லை.
  • அதுபோல கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லனவற்றைச் செய்வதில்லை என்கிறார்.

Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கூறும் கருத்தாகும்.

சிறுவினா

Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:
கல்வியே அழியாத செல்வம் :

  • இவ்வுலகில் உள்ள செல்வங்கள் அனைத்து அழியும் தன்மையுடையன்: என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும்.
  • அள்ள அள்ளக் குறையாதது, அழிக்கவே முடியாதது அழியாப்புகழைத் தருவது கல்விச் செல்வமே.
  • கல்விச் செல்வம் கற்கும் போது கசக்கும்; கற்ற பின் கரும்பாய் இனிக்கும். வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
  • இத்தகைய செல்வத்தை என்றும் போற்றிக் காத்திடக் கசடறக் கற்றிடுவோம்.

Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:

  • விளக்கானது தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் ஒளி வீசச் செய்கிறது.
  • அதுபோல கல்வி ஓர் ஒளி விளக்கு , அவ்விளக்கானது; தான் இருக்கும் இடத்தை ஒளிமயமாக மாற்றுகிறது. எனவே ஒருவன் கற்ற கல்வி பலருக்கும் பயன்தர வேண்டும்.
  • கல்வியில்லாத நாடு விளக்கில்லா வீடு போன்றது. விளக்கில்லா வீட்டில் குடியிருக்க யாரும் விரும்பாததைப் போலவே, கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிப்பதில்லை.
  • நன்மதிப்பைத் தந்து நல்வழியில் வாழச் செய்யும் கல்வியைக் கற்று, கலங்காமல் வாழ்வோம்

சிந்தனை வினா

Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நல்ல நூலின் இயல்புகள் :

  • கருத்துகளை எளிய நடையில் எடுத்துரைத்தல்.
  • கூற வந்த செய்தியைச் சுருக்கமாகக் கூறி விளங்க வைத்தல்.
  • படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ண ம் இனிய நடையில் இருத்தல்.
  • கருத்தாழம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  • பயனற்றதை விடுத்து பயனுள்ள கருத்தைத் தருதல்.
  • சிறு சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் அளித்தல்.
  • சான்றோர்களின் கருத்தை மேற்கோள் காட்டுதல்.
  • சமுதாயத்திற்கேற்றபடி இருத்தல்.
  • இன்றைய சூழலுக்குத் தக்கபடி கருத்தளித்தல்.

கற்பவை கற்றபின்

Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
– (எ.கா.) கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.
(i) மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. ………. – ஔவையார்

(ii) சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. …………….. – காரியாசான்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *