Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.1 விருந்தோம்பல்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மரம் வளர்த்தால் …………………………….. பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
Answer:
ஆ) மாரி
Question 2.
‘நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
Answer:
இ) நீர் + உலையில்
Question 3.
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
Answer:
அ) மாரியொன்று
குறுவினா
Question 1.
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
Answer:
அங்கவை, சங்கவை என்போர் பாரியின் மகள்களாவர்.
Question 2.
பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
Answer:
பாரி மகளிர் உலை நீரில் பொன் இட்டுத் தந்ததால் பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை என்பது புலனாகிறது.
சிந்தனை வினா
தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் : (பண்பாடு – நம்மைப் பண்படுத்துதல்)
(i) ஒழுக்க ம்
(ii) சிறந்த கல்வியைப் பெறுதல்
(iii) பெரியோரை மதித்தல்
(iv) நன்றியுணர்வுடன் இருத்தல்
(V) ஈகைக் குணம்
(vi) விருந்தோம்பல்
(vii) முன்னோர் கூறியவற்றைப் பின்பற்றுதல்
(viii) மேலைநாட்டு உணவைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவை உண்ணுதல்.
(ix) உடலை மறைக்கும் ஆடை அணிதல்.
(x) உறவினர்களைப் பேணி பாதுகாத்தல்
(xi) நாட்டுப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும் இருத்தல்.
கற்பவை கற்றபின்
Question 1.
வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
Question 2.
விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
விருந்தோம்பல் பண்பு – கதை : மாறனார் என்ற சிவனடியார் பற்றிய கதை :
மாறனார் தம் முயற்சியினாலும் உழைப்பினாலும் உழவுத்தொழில் செய்து அதில் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும் நலிந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்வார். இவர் இளையான்குடி என்ற ஊரில் வாழ்ந்தவர். தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து இத்திருத்தொண்டை செய்தார்.
மாறனாரும், புனிதவதியும் சிவனடியார்களுக்குத் தினமும் அன்னமிட்டு அவர்களுக்குப் பாத பூஜை செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இவருடைய சிவத்தொண்டை உலகறியச் செய்ய எண்ணினார் சிவபெருமான். தன் திருவிளையாடலால் மாறனாரின் வீட்டில் வறுமை சூழச் செய்தார். ஆனாலும், மாறனார் கடன் வாங்கியும் நிலங்களை விற்றும் அன்னமிட்டார்.
ஒருநாள் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. மாறனாரும் அவரது மனைவியும் பசியில் வாடிக் கொண்டிருந்தனர். அன்று நள்ளிரவில் சிவபெருமான், அடியவர் கோலத்தில் மாறனார் வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் இருவரும் அகமகிழ்ந்தனர். ஆனால் அன்னமிடுவதற்கு என்ன செய்வது என்று வருந்தினர்.
புனிதவதி, மாறனாரிடம், “நாம் இன்று காலையில் வயலில் விதைத்து வந்த விதை நெல்லினைச் சேகரித்து எடுத்து வந்து தந்தால், நான் அதனை சமைத்து அடியவருக்கு நீ அன்னம் பரிமாறுவேன்” என்றாள்.
அடியவரைக் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படிக் கூறிவிட்டு, வயலுக்குச் சென்றார் – மாறனார். புனிதவதி மிச்சமிருந்த விறகை வைத்து தோட்டத்தில் இருந்த கீரையைச் சமைத்தாள். மாறனார் வருகைக்குக் காத்திருந்தாள். அடியவர் கண்ணயர்ந்து விட்டார்.
மாறனார் ஒரு வழியாக நீரில் மிதந்த விதைநெல்லை எடுத்து வந்தார். விறகு இல்லாததால் வீட்டின் கூரையில் இருந்த குச்சிகளை எடுத்துக் கொடுத்தார். புனிதவதி நெல்லை உரலில் இட்டுக் குத்தி அரிசியை எடுத்து உலையிலிட்டுச் சோறாக்கினாள்.
பிறகு உறங்கிக் கொண்டிருந்த அடியவரை உணவு உண்பதற்காக மாறனார் எழுப்பினார். அப்போது சோதி வடிவாக இறைவன் தோன்றினார். “மாறனாரே, உங்கள் இருவரின் விருந்தோம்பல் பண்பினை உலகிற்கு உணர்த்தவே நான் இவ்வாறு செய்தேன். ” இனி நீங்கள் செல்வங்கள் அனைத்தையும் பெற்று பல காலம் தொண்டு செய்து என்னை வந்து அடைவீர்களாக,” என்று கூறிவிட்டு மறைந்தார்.
இப்புராணக்கதை நமக்கு விருந்தோம்பல் பற்றி உணர்த்துகிறது.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார்.
2. முன்றுறை அரையனாரின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு.
3. முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
4. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
5. நமது பாடப்பகுதியில் உள்ள பழமொழி நானூறு பாடலில் உள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல்
விடையளி :
Question 1.
பழமொழி நானூறு குறிப்பு வரைக.
Answer:
- பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது நானூறு பாடல்களைக் கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.
Question 2.
முன்றுறை அரையனார் – குறிப்பு வரைக.
Answer:
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார் ஆவார்.
- இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.