Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும்
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.2 வயலும் வாழ்வும்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உழவர் சேற்று வயலில் ………………………. நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
Answer:
ஈ) நாற்று
Question 2.
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை …………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
Answer:
அ) அறுவடை
Question 3.
தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
Answer:
ஈ) தேர்ந்து + எடுத்து
Question 4.
‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer:
ஆ) ஓடையெல்லாம்
பொருத்துக
வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை, எதுகைச் சொற்களை எழுதுக
Answer:
பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக
எ.கா. : போயி – போய்
குறுவினா
Question 1.
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:
- உழவர்கள், நாற்றுப் பறிக்கும் பொழுது அங்குள்ள நண்டுகளையும் சேர்த்துப் பிடித்தனர்.
- கதிரடித்த நெல்தாள்களை மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகளைப் பிரித்தெடுத்தனர்.
Question 2.
நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
Answer:
- அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.
- நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து பிரித்தெடுப்பர்.
சிறுவினா
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
உழவுத்தொழிலின் நிகழ்வுகள் :
- மாடுகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுது பண்படுத்துவர்.
- நாற்றங்காலில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட நாற்றை நடுவர். அவ்வாறு நடும்போது ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் என்று பெண்கள் நாற்றை நடுவர்.
- பயிருக்குத் தேவையான அளவு நீரைப் பாய்ச்சுவர்.
- பிறகு பயிர்களுக்கு இடையே வளர்ந்துள்ள களைகளைப் பறிப்பர்.
- பயிர்களுக்குத் தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பர். இயற்கை உரங்களையும் பயன்படுத்துவர்.
- நெற்பயிர் வளர்ந்து நெல் முற்றியதும் அறுவடை செய்வர்.
- அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டி நெற்களத்தில் சேர்ப்பர்.
- கதிரடித்து நெல்மணியைப் பிரித்து எடுப்பர். எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர்.
- பிறகு நெல்மணிகளை வெயிலில் காயவைத்து மூட்டைகளாகக் கட்டி வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பர்.
சிந்தனை வினா
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் :
(i) பண்டைத் தமிழர்கள் வேளாண்மைத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
(ii) குறிஞ்சி நில மக்கள் ஏர்கொண்டு உழாமல் வேளாண்மை செய்துள்ளனர்.
(iii) முல்லை நில மக்கள்தான் கலப்பையின் உதவியோடு பயிர் செய்துள்ளனர்.
(iv) ஆறு, குளம், ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சினர். பயிர் செய்தனர். வரகு, சாமை, நெல் எனப் பயிர் செய்தனர் தமிழர். அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தனர்.
(v) அதேபோல பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்குப் பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர்.
(vi) வானியல் பற்றி அறிந்ததால் கோள்களின் நிலை கண்டு மழை வரும் காலமறிந்து பயிர் செய்தனர். இயற்கை உரங்களான இலைதழைகளைப் பயன்படுத்தினர். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை எருவாக்கினர். கால்நடைகளை வண்டி இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுத்தினர்.
(vii) இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அதிக விளைச்சல் வேண்டி செயற்கை உரங்களைப் பயன்படுத்தினர். பலவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினர். இதனால் மண் வளம் பாதிப்புக்குள்ளாகி விட்டது. மனிதன் செய்த வேலைகளையெல்லாம் தற்பொழுது இயந்திரங்கள் செய்கின்றன.
(viii) உழவுக் கருவிகள், களைப்பறித்தல், அறுவடை செய்தல் என எல்லாவற்றிற்கும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வகை வேளாண்மையின் விளைவாக மக்களுக்குப் புதிய நோய்கள் வந்தன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இந்நிலையை மாற்ற வேண்டி தற்போது இயற்கை வேளாண்மை என்று கூறப்படும் அங்கக வேளாண்மைக்கு மாறியுள்ளனர் விவசாயிகள். இவ்வாறு உழவுத்தொழில் காலந்தோறும் மாற்றமடைந்து கொண்டே வந்துள்ளது.
கற்பவை கற்றபின்
Question 1.
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
Answer:
வேளாண்மை சார்ந்த கருவிகள் : ஏர்க்கலப்பை, மண்வெட்டி, அரிவாள், கத்தி, உழவு இயந்திரம், கடப்பாரை.
தெரிந்து தெளிவோம்
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை – நாட்டுப்புறப்பாடல்
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
2. ‘குழி’ என்பது நில அளவைப் பெயர்.
3. சாண் என்பது நீட்டல் அளவைப் பெயர்.
4. நெற்பயிர் நடுவதற்கான இடைவெளி ஒரு சாண்.
விடையணி:
Question 1.
வாய்மொழி இலக்கியம் – குறிப்பு வரைக.
Answer:
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
Question 2.
போரடித்தல் என்றால் என்ன?
Answer:
- அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.
- நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
Question 3.
போரடித்தல் பற்றிப் பாடும் நாட்டுப்புறப் பாடலை எழுதுக.
Answer:
“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை
என்ற பாடல் போரடித்தல் பற்றிக் குறிப்பிடுகிறது.
Question 4.
சும்மாடு என்றால் என்ன?
Answer:
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள் சும்மாடு எனப்படும்.
Question 5.
நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் என்ன செய்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.
பாடலின் பொருள்
உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக் கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்று பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.
அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன