TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

மதிப்பீடு

Question 1.
டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கவிஞர்கள் தங்கள் கவித்திறத்தால் உலகையே ஆள்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து திருநெல்வேலியைப் புகழ்பெறச் செய்துள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கடிகைமுத்துப் புலவர் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பாடல்கள் பாடியுள்ளார். முக்கூடல் பள்ளு’ என்னும் சிற்றிலக்கியம் சீவலப்பேரி’ என்கிற முக்கூடல் பற்றியதாகும்.

 

மதுரையிலிருந்து நெல்லைக்கு வந்தவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இவர் நெல்லையில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்து உரிமையுடன் சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டுகிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சீவைகுண்டத்துப் பெருமாளைப் போற்றிப் பாடியவர் பிள்ளைப் பெருமாள் ஆவர். ஆற்றுக்குத் தென்கரையில் நம்மாழ்வார் பிறந்த ஊரான ஆழ்வார் திருநகரில் உள்ளது. இதன் பழைய பெயர் திருக்குருகூர் . அவர் தமது ஈடுபாட்டைத் தமது திருவாய்மொழியில் பாடியுள்ளார்.

கொற்கை நகர முத்து வணிகத்தைப் பற்றி முத்தொள்ளாயிர ஆசிரியர் அனுபவித்துப் பாடியுள்ளார். சீதக்காதி என்ற பெருவணிகர் காயல்பட்டணத்தைச் சார்ந்தவர். அவர் பல புலவர்களை ஆதரித்தவர். அவர் இறந்த போது நமச்சிவாயப் புலவர்,
“கோமன் அழகமர் மால் சீதக் காதி கொடைக்கரத்துச்
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்று தம் உணர்ச்சியைப் பாடலாக்கினார்.

அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழில் ஏரிநீர் நந்தவனங்களில் இருந்ததால் சேல்மீன்கள் துள்ளிக் குதித்தி பூஞ்செடிகொடிகளை அழித்தன எனப் பாடியுள்ளார்.
அண்ணாமலையார் கழுகுமலை முருகன் மேல் காவடிச் சிந்தைப் பாடியுள்ளார். சங்கரன் கோவிலில் உள்ள கோமதித் தாயைப் பற்றி அழகிய சொக்கநாதர் பக்தியோடு பாடியுள்ளார்.

கரிவலம் வந்த நல்லூர் என்னும் பெயர் கொண்ட ஸ்தலம் கருவை நல்லூர் ஆகும். இத்தலத்தைப் பற்றி திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி ஆகிய நூல்களில் புலவர் ஒருவர் பாடியுள்ளார்.
குற்றால மலையின் இயற்கையைக் கண்ட திருஞான சம்பந்தர் நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியுள்ளார். இத்தலத்தைப் பற்றி மாணிக்கவாசகரும் உற்றாரை யான் வேண்டேன் என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

 

திரிகூடராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில் இம்மலையின் வளத்தைக் குறி சொல்லுகின்ற பெண் கூறுவது போல் பாடியுள்ளார்.
இத்தகு பெருமைமிக்க திருநெல்வேலியைப் பற்றியும் அங்கு வாழ்ந்த புலவர்களின் புலமையையும் நினைவில் கொள்வோம்.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று நான் நூலகம் செல்லலாம் என்று புறப்பட்டேன். நல்ல மழை பெய்தததால் செல்லவில்லை.
மாணவன் 2 : எதற்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும்?
மாணவன் 1 : நான் எப்போதும் விடுமுறை என்றால் நூலகத்திற்குச் செல்வேன்.
எனக்குப் பிடித்த நூல்களைப் படித்து குறிப்பு எழுதிக் கொள்வேன்.
மாணவன் 2 : அப்படியா! நீ எழுதிய குறிப்பிலிருந்து எதைப் பற்றியாவது எனக்குக் கூறுகிறாயா?
மாணவன் 1 தாராளமாகக் கூறுகிறேன். உவமைக் கவிஞர் என்று போற்றப்படும்
சுரதாவின் கவிதை நூலில் ‘இன்பம்’ என்ற தலைப்பில் உள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்
எழுந்திடு புதுமை தன்னை
ஏற்றிடல் வாழ்வுக் கின்பம்.
…………….
…………….
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்.

மாணவன் 2 : பாடலின் மிகவும் எளிமையாக இருக்கிறதே.
மாணவன் 1 : ஆமாம் பாடல் மிகவும் எளிமையானது. பொருள் பொதிந்த பாடல்.
மாணவன் 2 : பாடலின் பொருளைக் கூறு.
மாணவன் 1 : இன்பம் தருவன என்று கவிஞர் சிலவற்றைக் கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பது மகிழ்ச்சி தரும். பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது மனத்திற்கு மகிழ்ச்சி தரும். புதுமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கற்றோர் நிறைந்த அவையில் தான் கற்ற கல்வியை எடுத்துரைப்பதும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுவதும் இன்பம் தரும். தீயோரின் நட்பை விலக்கி வாழ்தல், தாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து வாழும் சிறந்த குணம் பெறுதலும் இன்பம் தரும். இவையெல்லாவற்றையும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நாமும் இன்பமாக வாழலாம்.
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இனிமேல் நீ நூலகம் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்.
மாணவன் 1 : சரி! அழைத்துச் செல்கிறேன்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *