Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்
மதிப்பீடு
குறுவினா
Question 1.
உருவக அணியை விளக்குக.
Answer:
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.
எ.கா.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
விளக்கம் : இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணிக்குச் சான்றாயிற்று.
Question 2.
உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:

கற்பவை கற்றபின்
உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.
Answer:
(எ.கா.) மலர் போன்ற முகம் – முகமலர்
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும்.
2. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
குறுவினா :
Question 1.
உருவக அணி என்றால் என்ன?
Answer:
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும். எ.கா. தமிழ்த்தேன், துன்பக்கடல்.
Question 2.
ஏகதேச உருவக அணி என்றால் என்ன?
Answer:
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
எ.கா. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
மொழியை ஆள்வோம்
கேட்க. நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ்க.
மாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.
பேசுக. நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
மாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூற வேண்டும்.
சொல்லக் கேட்டு எழுதுக
1. பொய்கையாழ்வார் திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
2. இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.
3. வாழ்க்கை குறிக்கோள் உடையது.
4. செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை
5. உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.
அறிந்து பயன்படுத்துவோம்
ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.
‘எது, என், எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை , எதற்கு, ஏன், யார், யாது, யாவை’ போன்றன வினாச்சொற்கள் ஆகும்.
சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
Question 1.
நெல்லையப்பர் கோவில்…………….. உள்ளது?
Answer:
எங்கு
Question 2.
முதல் ஆழ்வார்கள் ……………. பேர்?
Answer:
எத்தனை
Question 3.
…….. சொற்களைப் பேச வேண்டும்?
Answer:
எந்தச்
Question 4.
அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்………….?
Answer:
யார்
Question 5.
அறநெறிச்சாரம் என்பதன் பொருள் …………..?
Answer:
யாது
பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1. ……………………………………………………………………………………………………………
2. ……………………………………………………………………………………………………………
3. ……………………………………………………………………………………………………………
Answer:
1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்?
3. பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்குச் சென்றாள்?
தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.
(எ.கா) தலைப்புச் செய்தி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
Question 1.
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
Answer:
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
Question 2.
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – மக்கள் ஆர்வத்துடன் வருகை
Answer:
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியதால் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
Question 3.
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி
Answer:
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.
Question 4.
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.
Answer:
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றாள்.
Question 5.
மாநில அளவிலான பேச்சுப்போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்
Answer:
மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
கட்டுரை எழுதுக.
ஒற்றுமையே உயர்வு
முன்னுரை :
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே’ என்று பாரதியார் பாடியுள்ளார். அப்படிப்பட்ட ஒற்றுமையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வள்ளுவர் கூறும் ஒற்றுமை :
ஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர் ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் அதனை விளக்கியுள்ளார்.
“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”
என்ற குறளின் பொருள் ஒற்றுமையைப் போல் வேறொன்றைத் தேவருலகம் சென்றாலும் 6 பெற இயலாது என்பதாகும்.
இயற்கை காட்டும் ஒற்றுமை :
பல மரங்களும் செடிகளும் இணைந்தால்தான் இயற்கை உயிர்பெறுகிறது. மரங்களின் ஒற்றுமையால் சுற்றுச்சூழல் தூய்மை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக வரும் மழையினால் நீர்நிலை நிரம்புகிறது. பல மரங்களின் வேர்களின் ஒற்றுமை மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றது.
முடிவுரை :
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை – பலர் ஒன்று கூடி வாழ்ந்தால் நிறைய நன்மைகள் உண்டு. மகாகவி பாரதியார் வந்தே மாதரம்’ என்ற தம் கவிதையில், ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் ஒற்றுமையுடன் நாம் வாழ்ந்தால்தான் நம் நாடும் நாமும் முன்னேறலாம்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.
Answer:
கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக. (விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)
Answer:
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. எந்தச் சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்.
2. அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.
3. என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்.
4. திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்.
கலைச்சொல் அறிவோம்
இணையத்தில் காண்க
அறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுக்க.
அறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்கள் :