TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………….. ஒரு நாட்டின் அரணன்று .
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
Answer:
ஆ) வயல்

 

Question 2.
மக்கள் அனைவரும் ………………. ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
Answer:
அ) பிறப்பால்

Question 3.
‘நாடென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …..
அ) நான் + என்ப
ஆ) நா + டென்ப
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டென்ப
Answer:
இ) நாடு + என்ப

 

Question 4.
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
Answer:
ஈ) கண்ணில்லது

பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
Answer:
வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

 

குறுவினா

Question 1.
ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
Answer:
ஒரு செயலைச் செய்ய ஆராய வேண்டுவன : வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

Question 2.
ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
Answer:
ஒரு நாட்டுக்கு அரண்களாக அமைவன் : தெளிந்த நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.

 

Question 3.
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
Answer:
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன :

  • மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே சிறந்த நாடாகும்.
  • பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடாகும்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.


Answer:

கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
‘பெருமை’ என்ற தலைப்பில் பாட நூலில் இடம்பெற்ற குறட்பாக்களின் கருத்துகளைக் கூறுக.
Answer:

  • பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
  • உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

 

Question 2.
எவ்வாறு வினை செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது?
Answer:

  • வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
  • ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அதுபோல ஒரு செயலைச் செய்யும் போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *