Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.8
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.8
TN Board 8th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.8
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) X- அச்சும் Y- அச்சும் சந்திக்கும் புள்ளி …………… ஆகும்
ii) மூன்றாவது கால்பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆயத்தொலைவுகள் எப்போதும் ……………….. ஆக இருக்கும்.
iii) (-5,0) புள்ளி ………………………… அச்சின் மீது அமைந்திருக்கும்.
iv) X அச்சின் மீது, Y – இன் ஆயத் தொலைவானது எப்போதும் …………………… ஆகும்
v) Y – அச்சுக்கு இணையாகச் செல்லும் நேர்க் கோட்டில் ………………….. ஆயத்தொலைவு சமம் ஆகும்.
விடைகள் :
i) ஆகும் ஆதிப்புள்ளி (0,0)
ii) குறை எண்கள்
iii) X- அச்சு
iv) பூச்சியம்
v) x- ஆயத்தொலைவு
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக
i) (-10, 20) என்ற புள்ளி இரண்டாவது கால்பகுதியில் அமைந்துள்ளது,
ii) (-9, 0) என்ற புள்ளி X அச்சின் மீது அமைந்துள்ளது.
iii) ஆதிப்புள்ளியின் ஆய அச்சுத் தொலைவுகள் (1,1) ஆகும்.
விடைகள்:
i) சரி
ii) சரி
iii) தவறு
கேள்வி 3.
வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.
(3, -4), (5,7), (2,0), (-3, -5), (4, -3), (-7,2), (-8,0), (0,10), (-9,50)
விடை:
(3,-4) – IV – கால்பகுதி
(5,7) – 1 – கால்பகுதி
(2, 0) – X – அச்சு
(-3, -5) – III – கால்பகுதி
(4,-3) – IV – கால்பகுதி
(-7,2) – II – கால்பகுதி
(-8, 0)- X – அச்சு
(0, 10) – Y -அச்சு
(-9, 50) – II – கால்பகுதி
கேள்வி 4.
கீழ்க்காணும் புள்ளிகளை ஒரு வரைபடத்தாளில் குறிக்கவும்.
A(5, 2), B(-7,-3) C(-2, 4), D(-1, -1), E(0, -5), F(2, 0), G(7, -4), H(-4, 0), I(2, 3), J(8, -4), K(0, 7)
விடை:
கேள்வி 5.
வரைபடத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் உருவமும் எந்தப்
புள்ளியில் அமைந்துள்ளது என எழுதுக.
அ) நட்சத்திரம் ……………..
விடை :
(3,2)
ஆ) பறவை ……………..
விடை :
(-2,0)
இ) சிவப்பு வட்டம் ……………..
விடை :
(-2,2)
ஈ) வைரம் ……………..
விடை :
(-2,1)
உ) முக்கோணம் ……………..
விடை :
(-2, -2)
ஊ) எறும்பு ……………..
விடை :
(3,-1)
எ) மாம்பழம் ……………..
விடை :
(0,2)
ஏ) ஈ ……………..
விடை :
(2,0)
ஐ) பதக்கம் ……………..
விடை :
(-2,3)
ஒ) சிலந்தி ……………..
விடை :
(0,-2)