Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.2
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.2
TN Board 8th Maths Solutions Chapter 6 புள்ளியியல் Ex 6.2
கேள்வி 1.
கீழ்க்காணும் எந்தத் தரவுகளை நிகழ்வுச் செவ்வகத்தில் குறித்துக் காட்ட முடியும்?
i) 20 முதல் 60 வயதுப் பிரிவிலுள்ள மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை
விடை :
ஆம்
ii) வெவ்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளின் எண்ணிக்கை.
விடை :
இல்லை
iii) ஒரு பள்ளியிலுள்ள ஒவ்வொரு பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை.
விடை :
இல்லை
iv) ஒரு பொதுத் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை
விடை :
ஆம்
v) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலிருந்து 50 வது ஓவர் வரை வெளியேறிய வீரர்களின் எண்ணிக்கை.
விடை :
ஆம்
கேள்வி 2.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
i) நிகழ்வுச் செவ்வகத்தின் மொத்தப் பரப்பளவானது கொடுக்கப்பட்ட மொத்த நிகழ்வெண்களின் கூடுதலுக்கு ……………………………. இருக்கும்.
விடை :
விகிதச் சமத்தில்
ii) ……………………………. என்பது ஒரு வரைபடம். அது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் மதிப்புகளின் இடப்பெயர்ச்சி ஆகும்.
விடை :
நிகழ்வுச் செவ்வகம்
iii) நிகழ்வுச் செவ்வகம் என்பது ……………………………. விவரங்களின் வரைபட விளக்க முறை ஆகும்
விடை :
தொகுக்கப்பட்ட
கேள்வி 3.
ஒரு கிராமத்தில் 570 பேர் அலைபேசி வைத்துள்ளார்கள் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவர்களின் அலைபேசிப் பயன்பாட்டை ஆய்வு செய்தது அந்த ஆய்வின்படி ஒரு நிகழ்வுச் செவ்வகம் வரைந்துள்ளனர் அதைக்கொண்டு கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
i) 3 மணிநேரத்திற்குக் குறைவாக அலைபேசிப் பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர்?
ii) 5 மணிநேரத்திற்கு அதிகமாக அலைபேசிப் பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர்?
iii) 1 மணிநேரத்திற்கும் குறைவாக அலைபேசியைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்களா?
தீர்வு :
i) 3 மணி நேரத்திற்குக் குறைவாக அலைபேசிப் பயன்படுத்துபவர்கள் 330 பேர்
ii) 5 மணி நேரத்திற்கு அதிகமாக அலைபேசிப் பயன்படுத்துபவர்கள் 150 பேர்
iii) இல்லை 1 மணி நேரத்திற்கும் குறைவாக யாரும் பயன்படுத்தவில்லை.
கேள்வி 4.
கீழ்க்காணும் விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகம் வரைக.
தீர்வு :
கேள்வி 5.
ஒரு வகுப்பிலுள்ள 40 மாவணர்களின் மொத்த மதிப்பெண் பரவல் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நிகழ்வுச் செவ்வகம் வரைக.
தீர்வு :
கேள்வி 6.
100 பேரின் உயரங்களின் பரவல் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. எனில் நிகழ்வுச் செவ்வகத்தின் மீதுள்ளவாறு நிகழ்வுப் பலகோணம் வரைக
தீர்வு :
கேள்வி 7.
பல் பிரச்சனைகளுக்கான ஆய்வில் கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.
மேற்காணும் விவரங்களுக்கு நிகழ்வுப் பலகோணம் வரைக.
தீர்வு :
கேள்வி 8.
50 மாணவர்களின் கணித மதிப்பெண்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
(i) பிரிவு அளவு 10 மதிப்பெண்கள் என எடுத்துக்கொண்டு நிகழ்வெண் பரவல் அட்டவணையைத் தயார் செய்க.
(ii) நிகழ்வுச் செவ்வகம் மற்றும் நிகழ்வுப் பல கோணம் வரைக.
தீர்வு :
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 9.
தரவு என்பது ………………………….. இன் தொகுப்பு
அ) எண்கள்
ஆ) எழுத்துகள்
இ) அளவுகள்
ஈ) இவை அனைத்தும்
விடை :
ஈ) இவை அனைத்தும்
கேள்வி 10.
கொடுக்கப்பட்டத் தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின் …………………………..
அ) நேர்க் கோட்டுக் குறிகள்
ஆ) தரவு
இ) நிகழ்வெண்
ஈ) எதுவுமில்லை
விடை :
இ) நிகழ்வெண்
கேள்வி 11.
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அளவுகளின் வித்தியாசம் …………………………..
அ) வீச்சு
ஆ) நிகழ்வெண்
இ) மாறி
ஈ) ஏதுமில்லை
விடை :
அ) வீச்சு
கேள்வி 12.
கொடுக்கப்பட்டத் தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது …………………………..
அ) தொகுக்கப்படாத
ஆ) தொகுக்கப்பட்டது
இ) நிகழ்வெண்
ஈ) ஏதுமில்லை
விடை :
ஆ) தொகுக்கப்பட்டது
கேள்வி 13.
உள்ளடக்கியத் தொடர் ஒரு …………………………. தொடர்
அ) தொடர்ச்சியான
ஆ) தொடர்ச்சியற்ற
இ) இரண்டும்
ஈ) ஏதுமில்லை
விடை :
ஆ) தொடர்ச்சியற்ற
கேள்வி 14.
பிரிவு இடைவெளிகளில், ஒரு பிரிவு இடைவெளியின் மேல் எல்லையானது
அடுத்தப் பிரிவு இடைவெளியின் கீழ் எல்லையாக இருந்தால் அது …………………………. தொடர்.
அ) உள்ளடக்கிய
ஆ) விலக்கிய
இ) தொகுக்கப்படாத
ஈ) ஏதுமில்லை
விடை :
ஆ) விலக்கிய
கேள்வி 15.
தொகுக்கப்படாத விவரங்களின் வரைபட விளக்கமுறை ………………………….
அ) நிகழ்வுச் செவ்வகம்
ஆ) கிகழ்வுப் பலகோணம்
இ) வட்ட விளக்கப்படம்
ஈ) இவை அனைத்தும்
விடை :
இ) வட்ட விளக்கப்படம்
கேள்வி 16.
நிகழ்வுச் செவ்வகம் என்பது ஒரு …………………………. நிகழ்வெண் பரவல்.
அ) தொடர்ச்சியான
ஆ) தொடர்ச்சியற்ற
இ) தனித்த
ஈ) ஏதுமில்லை
விடை :
அ) தொடர்ச்சியான
கேள்வி 17.
…………………………. என்பது வரைபட முறையில் தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலுக்கான நேர்கோட்டு வரைபடம் ஆகும்.
அ) நிகழ்வுப் பலகோணம்
ஆ) நிகழ்வுச் செவ்வகம்
இ) வட்ட விளக்கப்படம்
ஈ) பட்டை விளக்கப்படம்
விடை :
அ) நிகழ்வுப் பலகோணம்
கேள்வி 18.
தொகுக்கப்பட்ட விவரங்களுக்கான வரைபட விளக்கப்படம் ………………………….
அ) பட்டை விளக்கப்படம்
ஆ) பட விளக்க முறை
இ) வட்ட விளக்கப் படம்
ஈ) நிகழ்வுச் செவ்வகம்
விடை :
ஈ) நிகழ்வுச் செவ்வகம்