TN 8 Maths

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

TN Board 8th Maths Solutions Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1

கேள்வி 1.
நீங்கள் பனிக்கூழ் (ice cream) அல்லது இனிப்பு ரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடை யில் பனிக்கூழில் (ice cream), சாக்லேட், ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகைகளும், இனிப்பு ரொட்டியில் ( c a k e ) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில் நீங்கள் 1 பனிக்கூழோ(ice cream) அல்லது 1 இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
தீர்வு:


A என்பது பனிக்கூழ் என்க
Bஎன்பது இனிப்புரொட்டி என்க
A = 3 வகைகள், B = 2 வகைகள்.
மொத்த வாய்ப்புகள் = பனிக்கூழ் + இனிப்புரொட்டி = 3 + 2 = 5.

 

கேள்வி 2.
சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?
தீர்வு:
சுடிதாருக்காக = 5
கவுன்களுக்காக = 4.
அணிவதற்கான வாய்ப்புகள்
= 5 + 4
= 9.

கேள்வி 3.
ஒரு மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் கீழ்வரும் 3 பிரிவுகள் உள்ளன.
I. அறிவியல் பிரிவு:
(i) இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்
(ii) இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணிணி அறிவியல்
(iii) இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனையியல்

II. கலைப்பிரிவு:
(i) கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம்
(ii) கணக்குபதிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணிணி அறிவியல்
(iii) வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகவியல்

II. தொழில்கல்வி பிரிவு:
(i) உயிரியல், செவிலியம் கருத்தியல், செவிலியம் செய்முறை I மற்றும் செவிலியம் செய்முறை II
(ii) மனையியல், ஆடை அலங்காரம், கருத்தியல், ஆடை அலங்காரம் செய்முறை I மற்றும் ஆடை அலங்காரம் செய்முறை ! உள்ளது எனில், ஒரு மாணவர் தனக்கு வேண்டியப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
தீர்வு:
1. அறிவியல் பிரிவு = 3
2. கலைப்பிரிவு = 3
3. தொழில்கல்வி பிரிவு = 2
தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள்
= 3 + 3 + 2. = 8.

 

கேள்வி 4.
உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும் (water bottles) உள்ளது எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பை மற்றும் 1 வண்ண BNGQUGOGTTGOW (water bottles) கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
தீர்வு:

(B) கைப்பைகள் = 2 வகை
(W) நீர் குவளைகள் = 3 வகை
கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள்
= 2 × 3
= 6 வழிகள்

கேள்வி 5.
பள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A,B,C,D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களைக் கொண்டும் அமைந் துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது? (A000, B000, C000, D000 மற்றும் E000 தவிர
தீர்வு:

ஆங்கில எழுத்துக்கள் = 5
3 இலக்கங்கள் = 10 × 10 × 10 அமைப்பதற்கான வழிகள்
= 5 × 1000
= 5000

 

கேள்வி 6.
ஒரு நகைக் கடையில் உள்ள
பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவு கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில் ஒரு தனித்துவமானத் திறவுகோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

இலக்கங்களின் எண்ணிக்கை = 4
தனித்துவமான எண் அமைக்க
= 10 × 10 × 10 × 10
எண் அமைப்பதற்கான வழிகள்
=10 × 10 × 10 × 10
= 10000.

கேள்வி 7.
ஒரு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் வீதம் 3 பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
தீர்வு:
பிரிவுகள் = 3.
வினாக்கள் = 5.
வழிகள் = 3 × 5
= 15.

 

கேள்வி 8.
கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?
(இலக்கங்களை மறுமுறையும் பயன்படுத்த இயலாது)

சுழலும் நேரம் = 2
இரண்டிலக்க எண்ணிக்கை = 2
மொத்த எண் = 5
இரண்டிலக்க எண்களை அமைக்கும் வழிகள்
= 2 × 2 × 5 = 20.

கேள்வி 9.
ரம்யா தனது வீட்டின் முகப்பறை சுவற்றில் உள்ள அமைப்பில் மிகக் குறைந்த செலவில் வண்ணமிட விரும்புகிறாள். அவள் இரண்டு வண்ணங்களை மட்டுமே பயன் படுத்தி அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ண த்தில் அமையாதவாறு அந்த அமைப்பை வண்ண மிட உதவுங்கள்.
தீர்வு:

 

கேள்வி 10.
கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில் மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு வண்ண மிடுக.
தீர்வு:

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.1 10

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 11.
பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு, பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க, 26 மாணவர்கள் மற்றும் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது.?
(அ) 41
(ஆ) 26
(இ) 15
(ஈ) 390
விடை:
(அ) 4

கேள்வி 12.
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
(அ) 6
(ஆ) 8
(இ) 3
(ஈ) 2
விடை:
(ஆ) 8

(ஆ) 8

கேள்வி 13.
மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன?
(அ) 4
(ஆ) 3
(இ) 12
(ஈ) 64
விடை:
(ஈ) 64

கேள்வி 14.
7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன?
(அ) 10
(ஆ) 18
(இ) 19
(ஈ) 20
விடை:
(இ) 19

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *