Samacheer Kalvi 9th Maths Guide Chapter 4 வடிவியல் Ex 4.7
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 4 வடிவியல் Ex 4.7
TN Board 9th Maths Solutions Chapter 4 வடிவியல் Ex 4.7
பலவுள் தெரிவு வினாக்கள்
கேள்வி 1.
முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?
(1) வெளிக்கோணங்கள்
(2) உள்ளெதிர்க்கோணங்கள்
(3) ஒன்றுவிட்ட கோணங்கள்
(4) உள் கோணங்கள்
விடை:
(2) உள்ளெதிர்க்கோணங்கள்
கேள்வி 2.
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு
(1) 150°
(2) 30°
(3) 105°
(4) 72°
விடை:
(3) 105°
கேள்வி 3.
சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், O வை
முனையாக கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை
(1) 6
(2) 8
(3) 4
(4) 12
விடை:
(1) 6
கேள்வி 4.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE||DB எனில், x ° இன் மதிப்பு
(1) 45°
(2) 30°
(3) 75°
(4) 85°
விடை:
(4) 85°
கேள்வி 5.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
(1) ΔABC ≅ ΔDEF
(2) ΔABC ≅ ΔDEF
(3) ΔABC≅ ΔFDE
(4) ΔABC ≅ ΔFED
விடை:
(4) ΔABC ≅ ΔFED
கேள்வி 6.
சாய் சதுரத்தின் மூலை விட்டங்கள் சமமெனில் அந்தச் சாய் சதுரம் ஒரு
(1) இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல
(2) செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல
(3) சதுரம்
(4) இணைகரம் ஆனால் சதுரம் அல்ல
விடை:
(3) சதுரம்
கேள்வி 9.
பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?
(1) இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல.
(2) இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்.
(3) இணைகரத்தின் மூலை விட்டங்கள் எப்பொழுதும் சமம்.
(4) இணைகரத்தின் இரு சோடி எதிர்ப் பக்கங்கள் எப்பொழுதும் சமம்.
விடை :
(4)இணைகரத்தின் இரு சோடி எதிர்ப் பக்கங்கள் எப்பொழுதும் சமம்.
கேள்வி 10.
முக்கோணத்தின் கோணங்கள் (3x – 40°), ( x + 20°) மற்றும் (2x -10°) எனில் x இன் மதிப்பு
(1) 40°
(2) 35°
(3) 50°
(4) 45°
விடை:
(2) 35°
கேள்வி 11.
O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS மேலும்,
∠POQ = 70° எனில் ∠ORS …………..
(1) 60°
(2) 70°
(3) 55°
(4) 80°
விடை:
(3) 55°
கேள்வி 12.
ஆரம் 25 செ.மீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செ.மீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் ……………
(1) 25 செ.மீ
(2) 20 செ.மீ
(3) 40 செ.மீ
(4) 18 செ.மீ
விடை :
(3) 40 செ.மீ
கேள்வி 13.
படத்தில் வட்ட மையம் O மற்றும் ∠ACB = 40° எனில் ∠AOB = …………………
(1) 80°
(2) 85°
(3) 70°
(4) 65°
விடை :
(1) 80°
கேள்வி 14.
வட்ட நாற்கரம் ABCD யில் ∠A = 4x, ∠C = 2x எனில், x இன் மதிப்பு
(1) 30°
(2) 20°
(3) 15°
(4) 25°
விடை:
(1) 30°
கேள்வி 15.
படத்தில் வட்டமையம் 0 மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன.
மேலும் CE = ED= 8செ.மீ மற்றும் EB = 4 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் …………………..
(1) 80°
(2) 100°
(3) 70°
(4) 90°
விடை :
(4) 100°
கேள்வி 16.
படத்தில் PQ RS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ∠QRS = 80 எனில், ∠TVS = ……………….
(1) 80°
(2) 100
(3) 70
(4) 90°
விடை:
(2) 100°
கேள்வி 17.
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 75° எனில், எதிர்கோணத்தின் அளவு …………………..
(1) 100°
(2) 105°
(3) 85°
(4) 90°
விடை :
(2) 105°
கேள்வி 18.
படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC பக்கம் ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு ∠ADC = 80° மற்றும் ∠ECF = 20°எனில், ∠BAD=?
(1) 100°
(2) 20°
(3) 120°
(4) 110°
விடை:
(3) 120°
கேள்வி 19.
AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு AD = 30 செ.மீ மற்றும் AB = 24
செ.மீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ……………………..
(1) 10 செ.மீ
(2) 9 செ.மீ
(3) 8 செ.மீ
(4) 6 செ.மீ
விடை :
(2) 9 செ.மீ
கேள்வி 20.
படத்தில் OP = 17 செ.மீ, PQ = 30 செ.மீ மற்றும் OS ஆனது PQ இக்குச் செங்குத்து எனில்,
(1) 10 செ.மீ
(3) 7 செ.மீ
(2) 6 செ.மீ
(4) 9 செ.மீ
விடை :
(4) 9 செ.மீ