Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3
TN Board 9th Maths Solutions Chapter 9 நிகழ்தகவு Ex 9.3
பலவுள் தெரிவு வினாக்கள்
கேள்வி 1.
0 மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
(1) சமவாய்ப்பு மாறி
(2) முயற்சி
(3) எளிய நிகழ்ச்சி
(4) நிகழ்தகவு
விடை:
(4) நிகழ்தகவு
கேள்வி 2.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
(1) -1 மற்றும் +1
(2) 0 மற்றும் 1
(3) 0 மற்றும் n
(4) 0 மற்றும் ∞
விடை:
(2) 0 மற்றும் 1
கேள்வி 3.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
(1) பட்டறி நிகழ்தகவு
(2) தொன்மை நிகழ்தகவு
(3) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
(4) (1) வும் அல்ல (2) வும் அல்ல
விடை:
(1) பட்டறிவு நிகழ்தகவு
கேள்வி 4.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
(1) பூச்சியத்திற்குச் சமம்
(2) பூச்சியத்தை விடப் பெரியது
(3) 1 இக்குச் சமம்
(4) பூச்சியத்தை விடச் சிறியது.
விடை:
(4) பூச்சியத்தை விடச் சிறியது
கேள்வி 5.
ஒரு சம வாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் இதற்குச் சமம்.
(1) ஒன்று
(2) பூச்சியம்
(3) முடிவிலி
(4) மேற்கண்ட அனைத்தும்
விடை:
(1) ஒன்று
கேள்வி 6.
A என்பது S இன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A’ என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P(A|) இன் மதிப்பு
(1) 1
(2) 0
(3) 1 – A
(4) 1 – P(A)
விடை:
(4) 1 – P(A)
கேள்வி 7.
பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது.
(1) 0
(2) 0.5
(3) 1
(4) -1
விடை:
(4) -1
கேள்வி 8.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(1) முயற்சி
(2) எளிய நிகழ்ச்சி
(3) கூட்டு நிகழ்ச்சி
(4) விளைவு
விடை:
(4) விளைவு
கேள்வி 9.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு ………… என அழைக்கப்படுகிறது.
(1) நிகழ்ச்சி
(2) விளைவு
(3) கூறுபுள்ளி
(4) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
(1) நிகழ்ச்சி
கேள்வி 10.
ஒரு பகடையானது ………. இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
(1) சிறியதாக
(2) சீரானதாக
(3) ஆறு முகம் கொண்டதாக
(4) வட்டமாக
விடை:
(2) சீரானதாக