Samacheer Kalvi 9th Science Guide Chapter 11 அணு அமைப்பு
TN Board 9th Science Solutions Chapter 11 அணு அமைப்பு
9th Science Guide அணு அமைப்பு Text Book Back Questions and Answers
பகுதி – 1. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
தவறான ஒன்றைக் கண்டுபிடி.
அ) 8O18, 17Cl37
ஆ) 18Ar40, 7N14
இ) 14Si30, 15Pd31
ஈ) 24Cr54, 19K39
விடை:
இ) 14Si30, 15Pd31
Question 2.
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது
அ) ஒரு அயனி
ஆ) ஒரு ஐசோடோப்
இ) ஒரு ஐசோபார்
ஈ) வேறு தனிமம்
விடை:
ஆ) ஒரு ஐசோடோப்
Question 3.
நியூக்ளியான் குறிப்பது
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) நியூட்ரான் மட்டும்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) புரோட்டான் + நியூட்ரான்.
விடை:
ஈ) புரோட்டான் + நியூட்ரான்.

Question 5.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
அ) 2,8,9
ஆ) 2, 8, 1
இ) 2, 8, 8, 1
ஈ) 2, 8, 8, 3
விடை :
இ) 2, 8, 8, 1
II. சரியா, தவறா? தவறெனில் திருத்துக
Question 1.
அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன.
விடை:
சரி
Question 2.
ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது.
விடை:
தவறு. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது.
Question 3.
எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.
விடை:
சரி
Question 4.
ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.
விடை:
சரி
Question 5.
L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.
விடை:
தவறு. L- மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________________ க்கு எடுத்துக்காட்டு.
விடை:
ஐசோபார்
Question 2.
ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________________
விடை:
2n2
Question 3.
___________________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.
விடை:
யுரேனியம் – 235
Question 4.


VI. மிகச் சுருக்கமாக விடையளி
Question 1.
முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
விடை:
பெரிலியம் (2,2)
Question 2.
K மற்றும் C1 ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
விடை:
K+ ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)
Cl– ன் எலக்ட்ரான் அமைப்பு : (2,8,8)
Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள துகள்கள் குறிக்கும் குறியீட்டின் பெயரினை எழுதி அவற்றின் கீழ் மற்றும் மேலே உள்ள எண்கள் எதனைக் குறிக்கின்றன என்பதனை விளக்குக.
விடை:

Question 4.
X என்ற அணுவில் K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
விடை:
மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= K + L + M
= 2 + 8 + 18
= 28
Question 5.
எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை யாது?
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம்
ஆ. பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம்
விடை :
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் அணுக்களின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது. எனவே இவைகளின் இணைதிறன் 1 
VII. சுருக்கமாக விடையளி
Question 1.
அணுவில் வெற்றிடம் இருப்பது எவ்வாறு கண்டறியப்பட்டது?
விடை:
- ரூதர்போர்டு மெல்லிய தங்கத் தகட்டின் மீது மிகச்சிறிய நேர்மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச் செய்தார்.

Question 3.
ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
விடை:
ஆக்சிஜன் (2,6)
அணு எண் = 8
அணு எண் = 16
புரோட்டான் = 8
நியூட்ரான் = 8

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களை கொண்டு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
விடை:
i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
தீர்வு : அணு எண் = 3
நிறை எண் = 7
அணு எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை (or) எலக்ட்ரான் எண்ணிக்கை
ஃபுரோட்டான்களின் எண்ணிக்கை = 3
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 3
(ஃபுரோட்டான்களின் எண்ணிக்கை = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
நிறை எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் – புரோட்டான்களின் எண்ணிக்கை
= 7 – 3
நியூட்ரான்களின் எண்ணிக்கை = 4
வியல்
ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238
தீர்வு :
அணு எண் = 92
நிறை எண் = 238
அணு எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை (or) எலக்ட்ரான் எண்ணிக்கை
ஃபுரோட்டான்களின் எண்ணிக்கை = 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 92
நியூட்ரான்களின் எண்ணிக்கை = 238 – 92
= 146
Question 5.
நியூக்ளியான் என்றால் என்ன? பாஸ்பரசில் எத்தனை நியூக்ளியான்கள் உள்ளன? அதன் அணு அமைப்பை வரைக.
விடை:

- நியூக்ளியான் என்பது ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.
- பாஸ்பரஸ்சில் உள்ள நியூக்ளியான்கள்
புரோட்டான்கள் = 15
நியூட்ரான்கள் = 16
VIII. நெடு வினாக்கள்
Question 1.
தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
விடை:
- அணுவின் மையப்பகுதியில் மிக மிகச்சிறிய உட்கரு உள்ளது
- உட்கருவைச் சுற்றியுள்ள பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது.
- அணுவின் மொத்த நிறையும் உட்கரு எனப்படும் சிறிய நேர்மின்சுமை கொண்ட பகுதியில் பொதிந்துள்ளது.
- அணுக்கருவைச் சுற்றி உள்ள எலக்ட்ரான்கள் வட்டவடிவப் பாதையில் சுற்றி வருகின்றன.
Question 2.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களை பற்றி விளக்குக.
விடை:

- ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் ‘ஆர்பிட்’ எனப்படும் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன.
- சுற்றி வரும் எலக்ட்ரான்கள் ஆற்றலை இழப்பதோ, ஏற்பதோ இல்லை
- வட்டப்பாதைகள் 1,2,3,4 அல்லது K,L,M,N என பெயரிடப்பட்டுள்ளன.
- ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2N2
- எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது உயர் ஆற்றல் மட்டத்திற்கும், ஆற்றலை வெளியிடும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கும் இடம் பெயருகின்றன.
Question 3.
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்கு.
விடை:
”வாயுக்கள் வினைபுரியும் போது அவற்றின் பருமன்கள் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு எளிய முழு எண் விகிதத்தில் இருக்கும்”
(உ.ம்) H2 + Cl2 2HCl
(1 பருமன் + 1 பருமன் → 2 பருமன்)
1 : 1 : 2
9th Science Guide அணு அமைப்பு Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
Question 1.
விடைகள் ஹைட்ரஜன் அணு பெற்றிராத அடிப்படைத்துகள் …………………………..
விடை:
நியூட்ரான்
Question 2.
நான்காவது ஆற்றல் மட்டத்திலுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
விடை:
32
Question 3.
மூன்று அடிப்படைத்துகள்களையும், சமமான எண்ணிக்கையில் கொண்டுள்ள ஒரு ஐசோடோப்பு …………………………..
விடை:
6C12
Question 4.
கதிரியக்கப் பொருட்களிலிருந்து வெளியிடப் படும் மின்சுமையற்ற கதிர்கள்
விடை:
γ கதிர்கள்
Question 5.
மின் உற்பத்திக்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு 92U235 ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை …………………………..
விடை:
143
Question 6.
இணைதிறன் 3 கொண்ட உலோகம் (A) ம், இணைதிறன் 2 கொண்ட அலோகம் (B) ம் இணைந்து உருவாகும் மூலக்கூறின் அமைப்பு …………………………..
விடை:
A2, B3
Question 7.
சம எண்ணிக்கையிலான நியூக்ளியான்-களின் கூட்டுத்தொகை 40 எனில், அவ்வணு
விடை:
கால்சியம்
Question 8.
ஒரு அணுவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை n =
விடை:
A – Z
Question 9.
அணுக்களைப் பார்வையிடப் பயன்படுவது
விடை:
ஸ்கேனிங் எலக்ட்ரான்
Question 10.
உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
விடை:
முதன்மைக் குவாண்டம் எண்
Question 11.
கார்பன் மோனாக்சைடு (CO) மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிறை விகிதம் ……………………………
விடை:
1: 2
Question 12.
SO2 மற்றும் SO3 ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம்.
விடை:
2:3
Question 13.
ஜெர்மியல் ரிச்சர் என்பவர்………………………….. விதியைப் பற்றிக் கூறினார்
விடை:
தலைகீழ் விகித
Question 14.
ஹைட்ரஜனும் மற்றும் ஆக்ஸிஜனும் இணைந்து ………………………….. உருவாக்குகின்றன
விடை:
நீரை
Question 15.
CH4 ல் நிறைகளின் விகிதம் C : H …………………………..
விடை:
3 : 1
Question 16.
CO2 ல் நிறைகளின் விகிதம் C : 0 …………………………..
விடை:
3 : 8
Question 17.
நைட்ரஜன் ஹைட்ரஜனுடன் சேர்ந்து ………………………….. உருவாக்குகிறது
விடை:
அம்மோனியா (NH3)
Question 18.
ஒரு தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றும் முழு எண் விகிதத்தில் இணைந்து ………………………….. உருவாக்கும்
விடை:
சேர்ம அணுக்களை
Question 19.
ஆல்ஃபா துகள்கள் ………………………….. உட்கருவை ஒத்துள்ளது
விடை:
ஹீலியத்தின்
Question 20.
ஆல்ஃபா துகள்களை தன் கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தியவர் யார்?
விடை:
ரூதர்போர்டு
Question 21.
அணுக்கரு இயற்பியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை:
ரூதர்போர்டு
Question 22.
அணுவின் பெரும்பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி ………………………….. இடம் பெற்றுள்ளன.
விடை:
எலக்ட்ரான்கள்
Question 23.
………………………….. அணு மாதிரி அணுவின் நிலைப்புத் தன்மையை விளக்க இயலவில்லை.
விடை:
ரூதர்ஃபோர்டு
Question 24.
ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கியவர் யார்?
விடை:
நீல்ஸ் போர்
Question 25.
ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையானவட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவை ………………………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆற்றல் மட்டங்கள்
Question 26.
உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்களின் அளவும் …………………………..
விடை:
அதிகரிக்கிறது
Question 27.
ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ………………………….. ஆகும்
விடை:
2n2
Question 28.
………………………….. என்பது எலக்ட்ரான்கள் சுற்றிவரும் வட்டப்பாதை என வரையறுக்கப்படுகிறது.
விடை:
ஆர்பிட்
Question 29.
பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது புரோட்டான்களுக்கு, இணையான நிறை உள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஜேம்ஸ் சாட்விக்
Question 30.
ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளைக் கொண்டது. அவை ………………………….., ………………………….. ஆகும்.
விடை:
புரோட்டான்களும், நியூட்ரான்களும்
Question 31.
புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசையானது ………………………….. யைக் காட்டிலும் மிகவும் வலிமையானது.
விடை:
ஈர்ப்பு விசை
Question 32.
அணுவின் அடிப்படைத்துகள்களான புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து ………………………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:
நியூக்ளியான்கள்
Question 33.
………………………….. என்பது அத்தனிம அணுவின் உட்கருவினுள் இடம் பெற்றுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை ஆகும்.
விடை:
அணுவின் நிறை எண்
Question 34.
அணு எண் எந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது?
விடை:
z
Question 35.
ஒத்த அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ………………………….. எனப்படுகின்றன.
விடை:
ஐசோடோப்புகள்
Question 36.
………………………….. அவற்றின் ஆற்றல்களின் ஏறு வரிசையில் எலக்ட்ரான்களைக் படிப்படியாக நிரப்பப்படுகின்றன.
விடை:
கூடுகள்
Question 37.
அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள ………………………….. கூடு என்றழைக்கப்படுகிறது.
விடை:
வெளிக்கூடு இணைதிறன்
Question 38.
1 அல்லது 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் ………………………….. எனப்படுகின்ற ன.
விடை:
உலோகங்கள்
Question 39.
………………………….. எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்னூட்டங்களைக் கொண்ட அயனிகளை உருவாக்கும்.
விடை:
எதிர் அயனிகள்
Question 40.
வெளிக்கூட்டில் 4 முதல் 7 எலக்ட்ரான்கள் வரை கொண்ட தனிமங்கள் ………………………….. எனப்படுகின்றன.
விடை:
அலோகம்
Question 41.
………………………….. எலக்ட்ரான்களை ஏற்று எதிர்மின்னூட்டங்களைக் கொண்ட அயனிகளை உருவாக்கும்.
விடை:
நேர் அயனிகள்
Question 42.
அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டால் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் ………………………….. எனப்படும்.
விடை:
குவாண்டம்
Question 43.
………………………….. ஒரு எலக்ட்ரானின் குணாதிசயங்களைக் குறிப்பிடும்.
விடை:
குவாண்டம் எண்கள்
Question 44.
மெக்னீசியத்தின் இணைதிறன் …………………………..
விடை:
2
Question 45.
சல்ஃபரின் இணைதிறன்
விடை:
2
Question 46.
உட்கருவிலிருந்து எலக்ட்ரானின் தொலைவு …………………………..
விடை:
முதன்மைக் குவாண்டம் எண்
Question 47.
அணுவின் இணையும் திறனானது …………………………..
விடை:
இணைதிறன்
Question 48.
ஒரே நிறை எண்ணையும் வெவ்வெறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ………………………….. எனப்படும்.
விடை:
ஐசோபார்
Question 49.
அணுவின் வெளிக்கூடு முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டிருப்பின் அத்தனிமத்தின் இணைதிறன் ………………………….. ஆகும்.
விடை:
பூஜ்ஜியம்
Question 50.
எலக்ட்ரான்கள் ………………………….. எனப்படும் வட்டப்பாதையில் உட்கருவைச் சுற்றி வருகின்றன.
விடை:
ஆர்பிட்
II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை :
Question 1.
கூற்று (A) : அணுக்கள் மின் நடுநிலைத் தன்மையுடையன.
காரணம் (R) : ஒரு அணுவின் உட்கருவில், நடுநிலைத் தன்மையுடைய துகளான நியூட்ரான் உள்ளது.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி
விடை :
b) (A) மற்றும் (R) சரி (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
Question 2.
கூற்று (A) : ஒரு தனிமத்தின் எல்லா ஐசோடோப்புகளும், ஒரே மாதிரியான வேதிப் பண்புகளைக் காட்டுகின்றன.
காரணம் (R) : ஒரு அணுவின் வேதிப் பண்புகளைக் கட்டுப்படுத்துபவை, அவ்வணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே ஆகும்.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி.
விடை :
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
Question 3.
கூற்று (A) : ஒரு நிகழ்வின்போது வெளியேற்றப்படும் நி துகள்களின் நிறையானது, உருவாக்கப்படும் எலக்ட்ரான்களின் நிறையைவிட அதிகம்.
காரணம் (R) : நி துகள்களும், எலக்ட்ரான்களும் ஒரே மாதிரியான துகள்களே.
a) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம்.
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி; ஆனால் (R) தவறு.
d) (A) தவறு; ஆனால் (R) சரி.
விடை:
b) (A) மற்றும் (R) சரி; (A)க்கு (R) சரியான விளக்கம் அல்ல.
IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
தலைகீழ் விகித விதியைக் கூறுக.
விடை:
இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தனிமத்துடன் சேரும்போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும்.
Question 2.
பருப்பொருள்களின் மின்பண்பை எவ்வாறு விளக்குவாய்?
விடை:
- கண்ணாடித் தண்டை பட்டுத்துணியில் தேய்க்கும் போது நேர்மின்சுமை உருவாகிறது.
- முடியில் பயன்படுத்திய நைலான் சீப்பு சிறு காகிதத் துண்டுகளைக் கவருவதைக் கொண்டும் விளக்கலாம்.
Question 3.
நியூக்ளியான்கள் என்பது என்ன?
விடை:
ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களே நியூக்ளியான்கள் எனப்படுகின்றன.
Question 4.
ஐசோபார்கள் என்றால் என்ன? இரு உதாரணம் கொடு
விடை:
ஒத்த நிறை எண்ணையும், வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ‘ஐசோபார்கள்’ எனப்படும். (உ.ம்)
Question 5.
ஐசோடோப்புகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒத்த அணு எண்ணைக் கொண்டுள்ளன.
- ஒரே மாதிரியான வேதிப்பண்புகளைக் கொண்டுள்ளன.
- அடர்த்தி மற்றும் கொதிநிலை போன்ற இயற்பண்புகளில் வேறுபடுகின்றன.
- ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் பெற்றுள்ளதால், எலக்ட்ரான் அமைப்பில் ஒத்துள்ளன.
Question 6.
போர் அணுமாதிரியின் கோட்பாடுகள் யாவை?
விடை:
- அணுவில், எலக்ட்ரான்கள் சுற்றிவரும் நிலையான வட்டப்பாதைகள் ஆர்பிட்டுகள் (அ) கூடுகள் (அ) ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.
- இவ்வட்டப்பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N எனப் பெயரிடப்படுகின்றன.
- ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2n2
- எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது உயர் ஆற்றல் மட்டத்திற்கும், ஆற்றலை வெளியிடும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கும் தாவுகின்றன.
Question 7.
தாம்சன் அணுமாதிரியின் முக்கியப் பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:
- அணுவானது நேர்மின்னுட்டம் கொண்ட கோளம்.
- இக்கோளத்தில் எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் ‘கேக்கில் உலர் திராட்சை போலப் பொதிந்துள்ளன.
- அணுவின் உருவளவு ஏறக்குறைய 10-10 m அளவுடையது.
Question 8.
ஐசோடோப்புகள் மற்றும் ஐசோபார்களை வேறுபடுத்துக. ஐசோடோப்புகள்
விடை:
- ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள்
- ஒத்த அணு எண் கொண்டுள்ளன
- வெவ்வேறு நிறை எண் கொண்டுள்ளன.
ஐசோபார்கள்
- வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்
- வெவ்வேறு அணு எண் கொண்டவை.
- ஒத்த நிறை எண் கொண்டவை.
V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
ரூதர்போர்டு ஆல்ஃபா கதிர் சிதறல் சோதனையின் முடிவுகள் மற்றும் காரணங்களைக் குறிப்பிடுக. சோதனை முடிவுகள்
விடை:
- பெரும்பாலான ஆல்ஃபா கதிர்கள் மெல்லிய தங்கத் தகட்டின் வழியாக விலக்கமின்றி ஊடுருவிச் சென்றன.
- சில ஆல்ஃபா துகள்கள் சிறு கோணத்தில் விலகிச் சென்றன; சில அதிக கோணத்தில் விலகிச் சென்றன.
- சில துகள்கள் வந்த பாதையிலேயே திருப்பி அனுப்பப்பட்டன.
கருத்துகள்
- நிறைய அணுத்துகள்கள் தன் பாதையில் விலக்கமடையாமல் சென்றதால், அணுவின் ஒரு பகுதி வெற்றிடமாக இருப்பது தெரிகிறது.
- சில துகள்கள் விலகலடைவதற்கும், திருப்பி அனுப்பப்பட்டதற்கும் காரணம், நடுவில் நேர்மின்னூட்டத்துகள் உட்கரு இருப்பதே ஆகும்.
Question 2.
ரூதர்போர்டு அணுமாதிரியின் முக்கிய அம்சங்களை எழுதுக
விடை:

- அணுவின் மையப்பகுதியில் மிக மிகச் சிறிய உட்கரு உள்ளது.
- உட்கருவைச் சுற்றியுள்ள பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது.
- அணுவின் உட்கரு எனப்படும், சிறிய நேர்மின் சுமை கொண்ட பகுதியில் அணுவின் மொத்த நிறையும் பொதிந்துள்ளது.
- அணுவின் பெரும்பகுதி வெற்றிடத்தில் அணுக் கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் இடம் பெற்றுள்ளன.
- எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டவடிவப் பாதையில் சுற்றி வருகின்றன.