Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
TN Board 9th Science Solutions Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
9th Science Guide கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது?
அ) மாற்றியம்
ஆ) புறவேற்றுமை வடிவம்
இ) சங்கிலித் தொடராக்கம்
‘ஈ) படிகமாக்கல்
விடை:
அ) மாற்றியம்
Question 2.
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.
அ) புறவேற்றுமை வடிவம்
ஆ) மாற்றியம்
இ) நான்கு இணைதிறன்
ஈ) சங்கிலித் தொடராக்கம்
விடை:
ஈ) சங்கிலித் தொடராக்கம்
Question 3.
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
அ) பாலிஸ்டைரீன்
ஆ) பி.வி.சி
இ) பாலிபுரொப்பலீன்
ஈ) எல்.டி.பி.இ
விடை:
இ) பாலிபுரொப்பலீன்
Question 4.
பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடைஈன் ஸ்டைரின் (AB) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?
அ) 2
ஆ) 5
ஈ) 7
விடை :
ஈ) 7
Question 5.
ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?
அ) வைரம்
ஆ) ஃபுல்லரின்
இ) கிராஃபைட்
ஈ) வாயு கார்பன்
விடை:
இ) கிராஃபைட்
Question 6.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடை முறைகள் பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் வருகின்றன.
அ) வனத்துறை
ஆ) வனவிலங்கு
இ) சுற்றுச்சூழல்
ஈ) மனித உரிமைகள்
விடை:
இ) சுற்றுச் சூழல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
III. பொருத்துக.
IV. சுருக்கமான விடையளி
Question 1.
வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்
விடை :
Question 2.
C2H6O ன் மாற்றியங்களை எழுதுக.
விடை :
Question 3.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை. ஏன்?
விடை :
- கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு 2,4.
- இதன் வெளிக்கூட்டில் நான்கு எலக்ரான்கள் உள்ளன. எண்ம விதிப்படி கார்பன் அருகிலுள்ள மந்தவாயு நியானின் எலக்ரான் அமைப்பை அடைவதற்கு நான்கு எலக்ரான் தேவை.
- எண்ம நிலையை அடைய கார்பன் தன்னுடைய நான்கு எலக்ரான்களையும் மற்ற தனிமங்களின் எலக்ரான்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது.
- எனவே கார்பன் சகப்பிணைப்பு சேர்மங்களையே உருவாக்குகிறது. அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
Question 4.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை, ஏனெனில்,
விடை :
- இவை குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, நீர் நிலைகளைப் பாதிக்கின்றன.
- இவை தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேடை உண்டு பண்ணுகின்றன,
V. விரிவாக விடையளி
Question 1.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
விடை :
- சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும்.
- சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன்.
- கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளைச்சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.
Question 2.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
விடை :
i) ஆக்சிஜனேற்றம் : (ஆக்சிஜனோடு வினைபுரிதல்)
உயர் வெப்பநிலையில் கார்பன் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றது.
2C(s) +O2(g) – 2Co(g) + வெப்பம்
C(s) + O2(s) – CO2(s) + வெப்பம்
ii) நீராவியுடன் வினை:
கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜனைத் தருகிறது. இக் கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) → CO(g) + H2(g)
iii) கந்தகத்துடன் வினை:
உயர் வெப்ப நிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன்டை சல்ஃபைடை உருவாக்கும்.
C(s) +S(g) → CS2(g)
iv) உலோகத்துடன் வினை:
உயர்வெப்பநிலையில் கார்பன்உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளைத் தருகிறது.
C(s) + S(g) → CS2(g)
Question 3.
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை? அவற்றின் தன்மையை விவரி.
ரெசின் குறியீடுகள்
1 # 3 PVC.
2 # 6PS
3 # 7 ABS/PC
விடை :
1. PVC – பாலிவினைல் குளோரைடு
- இதில் காட்மியம் மற்றும் காரியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன.
- இதில் உள்ள தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோனைப் பாதிக்கிறது.
- PVC யை எரிப்பதால் உண்டாகும் டை ஆக்ஸின்கள் மனிதர்களுக்கு தீமையை உண்டாக்குகிறது.
2. PS – பாலிஸ்டைரீன் நெகிழிகள்
- ஸ்டைரின் – இதில் உள்ள முக்கிய பொருளாகும். இது புற்று நோயை உண்டாக்கும்.
- இது சிதைய 100 – 10 லட்சம் ஆண்டுகள் ஆகும்.
- உணவுப்பொருள்கள் மற்றும் பானங்கள் சூடாக இருக்கும் போது ஸ்டைரின் அப்பொருள்களுக்குள் கலக்கிறது
3. PC – பாலி கார்பனேட் நெகிழிகள்
- PC நெகிழியில் பிஸ் பீனால் A (BPA) பொருள் உள்ளது
- உணவு மற்றும் பானங்களில் இதை பயன்படுத்தும் போது வெளிவருகிறது.
- இது மனித உடலில் ஹார்மோன் அளவை குறைத்து அல்லது அதிகரிக்கச்செய்து, உடல் செயல்படும் வீதத்தை மாற்றுகிறது.
VI. உயர் சிந்தனை வினாக்கள்
Question 1.
கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?
விடை :
சங்கிலித் தொடராக்கம் என்ற பண்பினால் கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.
Question 2.
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும் போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?
விடை :
- குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, எரிபொருள் பகுதியளவு எரிக்கப்பட்டு நச்சுத்தன்மையுடைய கார்பன் மோனாக்சைடு வாயு உருவாகிறது.
- மனிதர்கள் இதை சுவாசிக்கும் போது இது மனித உடலுக்குள் நுழைந்து ஹீமோகுளோபினைத் தாக்குகிறது.
- இது ஹீமோகுளோபினில் காணப்படும் ஆக்சிஜனை இடப்பெயர்ச்சி செய்கிறது.
- இதன் மூலம் மனித உடலின் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
Question 3.
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?
விடை :
- டையாக்ஸின் PVC நெகிழியை எரிப்பதால் உருவாகிறது.
- டையாக்ஸினோடு தொர்புடைய நெகிழி வகை ரெசின் குறியீடு #3 PVC
- டையாக்ஸின்கள் மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள்கள்.
Question 4.
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
விடை :
- யோகா ரெசின் குறியீடு #2 HDPE கொண்ட நெகிழியாலான தண்ணீர் புட்டியை வாங்க வேண்டும்.
- ஏனெனில், ரெசின் குறியீடு #2 HDPE நெகிழியானது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
9th Science Guide அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
கார்பன் என்ற பெயரினை வழங்கியவர் யார்
விடை :
ஆண்டனி லவாய்சியர்
Question 2.
இலத்தீன் மொழியில் “கார்போ” எனும் வார்த்தையின் பொருள் யாது
விடை :
|நிலக்கரி
Question 3.
பூமியின் மேலடுக்கில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :
0.032%
Question 4.
மனித எடையில் கார்பனின் சதவீதம் என்ன
விடை :
18%
Question 5.
கரிம வேதியியல் …………………………….. என்றும் அழைக்கப்படுகிறது.
விடை :
உயிரி வேதியியல்
Question 6.
வைரம் அல்லது கிராஃபைட்டை ஆக்சிஜனில் எரிக்கும் போது உருவாகும் வாயு ……………………………..
கார்பன் டை ஆக்சைடு
Question 7.
வைரம் மற்றும் கிராஃபைட்டில் காணப்படும் தனிமம் ……………………………..
விடை :
வைரம்
Question 8.
தூய கார்பன் தான் என நிறுவியவர் யார்?
விடை :
ஸ்மித்ஸன் டென்னன்ட்
Question 9.
சமீபத்தில் கண்டறிந்த கார்பனின் புற வேற்றுமை வடிவம் எது?
விடை :
கிராஃபீன்
Question 10.
கிராஃபீன் அடுக்குகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாவது கார்பன் ……………………………..
விடை :
கிராஃபைட்
Question 11.
கிராஃபீன் என்பது …………………………….. தடிமனை மட்டுமே கொண்டது.
விடை :
ஒரு கார்பன் அணுவின்
Question 12.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கரிம கார்பன் சேர்மங்கள் ……………………………..
விடை :
கார்பனின் சேர்மங்கள்
Question 13.
உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் ……………………………..
விடை :
கனிம கார்பன் சேர்மங்கள்
Question 14.
முதன்முறையாக ஒருகரிமச்சேர்மத்தைசெயற்கை முறையில்தயாரித்தவர்யார்?
விடை :
ஃபிரடெரிக் ஹோலர்
Question 15.
முதன் முறையாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மம் எது?
விடை :
(யூரியா
Question 16.
உலர் பனிக்கட்டி என அழைக்கப்படுவது எது?
விடை :
CO2
Question 17.
சமையல் சோடா என அழைக்கப்படுவது எது?
விடை :
NaHCO3
Question 18.
50 இலட்சத்திற்கும் அதிகமான கார்பன் சேர்மங்கள் உருவாக காரணமான கார்பனின் சிறப்பியல்பு அதன் ……………………………..
விடை :
சங்கிலி தொடராக்கம்
Question 19.
கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியன …………………………….. புறவேற்றுமை வடிவங்கள்
விடை :
கார்பனின்
Question 20.
கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவற்றில் மிகக் கடினமானது ……………………………..
விடை :
வைரம்
Question 21.
வைரத்தில் கார்பன் அணுக்கள் யாவும் …………………………….. பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன
விடை :
நான்முகப்
Question 22.
பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனின் வாய்பாடு ……………………………..
விடை :
C60
Question 23.
C20 முதல் C வரை வாய்ப்பாடுடைய கார்பன் சேர்மங்கள் பல மனமங்கள …………………………….. என அழைக்கப்படுகிறது.
விடை :
ஃபுல்லரீன்கள்
Question 24.
ஒரு தனிமம் அல்லது சேர்மம் ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும் வினை …………………………….. எனப்படும்
விடை :
ஆக்சிஜனேற்றம்
Question 25.
கார்பன் மோனாக்சைடு மற்றம் ஹைட்ரஜன் சேர்ந்த கலவைக்கு …………………………….. என்று பெயர்.
விடை :
நீர் வாயு
Question 26.
சிகரெட் புகையும் …………………………….. ஒரு மூலமாகும்.
விடை :
கார்பன் மோனாக்சைடின்
Question 27.
PVC என்பது ……………………………..
விடை :
பாலி வினைல் குளோரைடு
Question 28.
…………………………….. நெகிழியானது, பீஸ்பீனால் A (BPA) என்ற பொருளைக் கொண்டுள்ளது
விடை :
PC
Question 29.
PVC நெகிழியை எரிப்பதால் …………………………….. வெளியிடப்படுகின்றன.
விடை :
டையாக்சின்கள்
Question 30.
பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீனில் 60 கார்பன் அணுக்களும் …………………………….. ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
5 அல்லது 6 உறுப்புகளைக் கொண்ட வளையத்தினால்
Question 31.
வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :
நான்கு கார்பன்
Question 32.
கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் …………………………….. அணுக்களால் சூழப்பட்டுள்ளன.
விடை :
மூன்று
Question 33.
எரிபொருள்கள் பகுதியளவு எரிதலால் …………………………….. உருவாகிறது.
விடை :
கார்பன் மோனாக்சைடு
Question 34.
நெகிழிகளின் ரெசின் குறியீடுகள் வரையிலான …………………………….. எண்களால் குறிக்கப்பட்டிருக்கும்.
விடை :
1 முதல் 7
Question 35.
PVC,PS,PC மற்றும் ABC ஆகியன …………………………….. நெகிழிகள்.
விடை :
பாதுகாப்பற்ற
Question 36.
கார்பனின் இணைதிறன் ……………………………..
விடை :
நான்கு
Question 37.
ஒரே மூலக்கூறு வாய்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட கரிமச் சேர்மங்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை :
மாற்றியங்கள்
Question 38.
வைரம் மற்றும் கிராஃபைட் ஆகிய இரண்டிலும் கார்பன் அணுக்கள் …………………………….. பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
சகப்பிணைப்பினால்
Question 39.
கிராஃபைட்டில் கார்பன் அணுக்கள் …………………………….. அடுக்கை உருவாக்குகிறது.
விடை :
அறுங்கோண
Question 40.
உயர் வெப்பநிலையில் கந்தகத்துடன் இணைந்து கார்பன் …………………………….. உருவாக்குகிறது
விடை :
கார்பன்டைசல்ஃபைடை
Question 41.
கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர் யார்?
விடை :
ஃப்ரான்சிஸ் பண்டி மற்றும் அவரது உடன் ஆராய்ச்சியாளர்கள்
Question 42.
ஃபுல்லரீன்களை கண்டுபிடித்தவர் யார் ……………………………..
விடை :
இராபர்ட் கார்ல், ஹார்ரி க்ரோடா மற்றும் சிச்சர்ட்
Question 43.
ஒட்டும் காகிதத்தை உபயோகித்து கிராஃபைட்டிலிருந்து ஒரு வரிசை அணுக்களைப் பிரித்தெடுத்து கண்டறியப்பட்ட கார்பனின் புதிய புறவேற்றுமை
வடிவம் ……………………………..
விடை :
கிராஃபீன்
Question 44.
CH3 – CH2 – OH ன் மாற்றியம்
விடை :
CH3 – O – CH3
Question 45.
ஒரு நெகிழி புட்டியின் மீது காணப்படும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கம் மூன்று அம்புக்குறிகளைக் கொண்ட ஒரு முக்கோணம், அந்த
நெகிழியின் …………………………….. ஆகும்.
விடை :
ரெசின் குறியீடு
Question 46.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் செய்யப் பயன்படும் நெகிழி ……………………………..
விடை :
பாலி ஸ்டைரீன்
Question 47.
கிராஃபைட்டில் தனிமடகளுடனோ அடுத்தடுத்த கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று …………………………….. மூலம் பிணைக்கப்படுகிறது.
விடை :
வலிமை குறைந்த வாண்டர் லால்ஸ் விசை
Question 48.
…………………………….. என்பது ஒரு தனிமம். அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
விடை :
சங்கிலித் தொடராக்கம்
Question 49.
…………………………….. நச்சுத்தன்மை வாய்ந்த கார்பனின் ஆக்ஸைடு வாயுவாகும்
விடை :
கார்பன் மோனாக்ஸைடு
Question 50.
…………………………….. என்பவை சங்கிலித் தொடராக்கத்தினாலான கரிமச் சேர்மங்களின் ஒரு வகை ஆகும்
விடை :
நெகிழிகள்
II. பொருத்துக.
III. கூற்று மற்றும் காரண வகை
கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.
Question 1.
கூற்று (A) : கார்பன் இல்லாமல் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களும் கூட உலகில் இருப்பது மிகக் கடினம் ,
காரணம் (R) : தாவரங்களில் நடைபெறும் மிக முக்கியமான ஒளி வேதியியல் வினையாகிய ஒளிச்சேர்க்கையில் கார்பன் சேர்மங்களின் பங்களிப்பு அதிகம் விடை :
அ) அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
Question 2.
கூற்று (A) : கிராஃபைட் மிகக் கடினமான பொருள்
காரணம் (R) : கிராஃபைட்டில் அறுங்கோண கார்பன் அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
விடை :
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.
Question 3.
கூற்று (A) : நம் அன்றாட வாழ்வில் நெகிழியின் பங்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும்.
காரணம் (R) : நெகிழியில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதி பொருட்கள் மற்றம் சில வேதிச்சேர்க்கைகள் சிதைவடைவதற்கு நீண்ட நெடு நாள்களாகும். விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
கரிம வேதியியல் அல்லது உயிரி வேதியியல் என்றால் என்ன?
விடை :
தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் பற்றிய அறிவியலின் பிரிவு.
Question 2.
கிராஃபீன் என்றால் என்ன?
விடை :
- அண்மையில் கண்டறியப்பட்ட கார்பனின் புறவேற்றுமை வடிவம்.
- அறுங்கோண வளைய வடிவில் ஒற்றை கார்பன் அணு அடுக்கினை கொண்டது.
Question 3.
கார்பனின் இணைதிறன் நான்கு ஏன்?
விடை :
- கார்பனின் வெளிக்கூட்டில் நான்கு எலக்ட்ரான்கள் உள்ளன,
- கார்பன் வெளிக்கூட்டில் எண்ம நிலையை அடைவதற்கு அதன் நான்கு எலக்ட்ரான்களை பிற அணுக்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
Question 4.
மாற்றியம் என்றால் என்ன?
விடை :
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கரிமச் சேர்மங்கள் கொண்டிருக்கும் நிகழ்வு மாற்றியம் எனப்படும்.
Question 5.
புறவேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன?
விடை :
- புறவேற்றுமை வடிவத்துவம் என்பது ஒரே தனிமம் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை கொண்டிருப்பது.
- அவ்வடிவங்கள் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும்.
Question 6.
வைரம் மிகவும் கடினமான பொருள். ஏன்?
விடை :
- வைரத்தில் கார்பன் அணுக்கள் யாவும் நான்முகப்பிணைப்பில் மீண்டும் மீண்டும் முப்பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
- இதுவே இதன் கடினத்தன்மை மற்றம் திடத்தன்மைக்கு காரணமாகும்.
Question 7.
நெகிழிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
விடை :
பலபடிரெசின்கள் எனப்படும் நீண்ட நெடிய சங்கிலித் தொடர் கரிமச் சேர்மங்களுடன் வேறுபட்ட பண்புகளைத் தரும் சில வேதிச் சேர்க்கைகளைச் சேர்த்து நெகிழிகள் தயாரிக்கப்படுகின்றன.
Question 8.
பாதுகாப்பற்ற நெகிழிகள் மூன்றினை தருக.
விடை :
- PVC (#3)
- PS (#6)
- PC/ABS (#7)
Question 9.
C4H10 ன் மாற்றியங்களை எழுதுக.
விடை :
Question 10.
புற வேற்றுமை வடிவத்துவம் – வரையறு.
விடை :
ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின், இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மை
V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
கனிம கார்பன் சேர்மங்கள் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றின் பயன்களை தருக.
விடை :
Question 2.
படிக வடிவமுடைய கார்பன்களை பற்றி விவரி.
விடை :
1. வைரம்
- இதில் ஒவ்வொரு கார்பன் அணுவும் அதன் இணைதிறன் எலக்ட்ரான்கள் மூலம் நான்கு கார்பன் அணுக்களுடன் இணைந்து நான்கு சகப்பிணைப்புகளை உருவாக்குகின்றன.
- கார்பன் அணுக்கள் யாவும் நான்முகப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் முப்பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
- இதுவே இதன் கடினத் தன்மை மற்றும் திடத்தன்மைக்கு காரணமாகும்.
2. கிராஃபைட்
- இதில் கிராஃபைட் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் பிணைந்துள்ளது.
- இந்த அமைப்பில் அறுங்கோண அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப் பட்டுள்ளன.
- எனவே கிராஃபைட் வைரத்தைவிட மென்மையானவை
3. ஃபுல்லரீன்
- மிகவும் நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மின்ஸ்ட ர் ஃபுல்லரீன் ஆகும்
- இதன் வாய்பாடு C60 இதில் 60 கார்பன் அணுக்கள் 5 மற்றும் 6 உறுப்புகளைக் கொண்ட வளையங்களாக ஒரு கால்பந்து போன்ற அமைப்பினை பெற்றுள்ளது.
- அமெரிக்க கட்டட வடிவமைப்பாளர் பக்மின்ஸ்டர் ஃபுல்லர் பன்னாட்டு கண்காட்சிகளுக்காக வடிவமைத்த குவிந்த மாடம் போன்ற குமிழ் கட்டடங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளதால் இது பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுகிறது. > இது பக்கி பந்து எனவும் அழைக்கப்படுகிறது.
- மிகப் பெரிய ஃபுல்லரீன் குடும்பங்கள் C, முதல் CS4 வரை காணப்படுகின்றன.
Question 3.
நெகிழி மாசுபாட்டை நீங்கள் எவ்வாறு ஒழிப்பீர்கள்?
விடை :
- நெகிழிகளை வீசி எறியாமல் இருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் இருக்கலாம்.
- பள்ளி செயல் திட்டங்களுக்கு தெர்மகோலைப் (ரெசின் குறியீடு பயன்படுத்தாமல் இருக்கலாம்.
- நெகிழிப் பைகள், குவளைகள், தெர்மகோலால் ஆன தட்டுகள், குவளைகள் மற்றம் உறிஞ்சு குழாய்கள் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
- நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்காற்றை வெளிவிடுவதோடு, பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதால் நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
- மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிக்கும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளை வெளிவிடுவதால் PVC நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
- நெகிழிப்பைகளில் அடைக்கப்பட்ட சூடான உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்கலாம்.
- நெகிழிப் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்றவாறு தனித்தனியே பிரித்து சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் வழங்கலாம்.
- ஒரு நாளைக்கு ஒரு நபருக்காவது ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பது மற்றும் பாதுகாப்பற்ற நெகிழிகள் (ரெசின் #3 PVC, #6 PS, #7 ABS/PC குறியீடு) பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.