TN 9 Science

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

TN Board 9th Science Solutions Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:
இ) தொடு சார்பசைவு

Question 2.
ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது

 

Question 3.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:
இ) நீர்சார்பசைவு

Question 4.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:
இ) ஒளி சார்பசைவு

Question 5.
தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:
ஆ) II மற்றும் III

Question 6.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:
ஆ) வெப்பமுறு வளைதல்

 

Question 7.
இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:
அ) ஒளிச்சேர்க்கை

Question 8.
நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:
ஈ) இலைத்துளை

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:
ஒளிச்சார்பசைவு

Question 2.
_____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:
வேர்

Question 3.
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:
பச்சையம்

Question 4.
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:
ஒளியுறு வளைதல்

Question 5.
புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:
புவிசார்பசைவு

 

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:
ஆக்ஸிஜன்

III. பொருத்துக

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை:
தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.

Question 2.
தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை:
சரி

Question 3.
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை:
தவறு
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை:
தவறு
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும்.

Question 5.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
சரி

 

Question 6.
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை:
தவறு
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.

V. மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
விடை:
அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.

Question 2.
பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
விடை:
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
வேர்

ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
தண்டு

Question 3.
ஒளிசார்பசைவு (phototroism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
விடை:

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது
அ) X மற்றும் Y என்றால் என்ன?
ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை கொண்டவை? ஏன்?
விடை:
அ) X-சூரிய ஒளி Y-வேதியாற்றல்
ஆ) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.

 

Question 5.
நீராவிப் போக்கு – வரையறு.
விடை:
நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.

Question 6.
இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
விடை:
காப்பு செல்கள் இலைத்துளை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள் ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
விடை:
அ. திசைசார் அசைவு,
ஆ. திசை சாரா அசைவு

Question 2.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
விடை:

  • எதிர் புவி சார்பசைவு ஆகும்.
  • எதிர்புவி சார்பசைவு உடைய வேர்களை உருவாக்குகின்றன.
  • இவை 180° கோணத்தில் செங்குத்தான சுவாச வேர்களைக் கொண்டவை.

Question 3.

விடை:
6H2O, C6H12O6

Question 4.
பச்சையம் என்றால் என்ன?
விடை:
தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் – பச்சையம் எனப்படும்.

 

Question 5.
நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?
விடை:
வேர் :
வேர்கள் பூமியில் நிலையாக நிற்ப்பதற்காக புவியை நோக்கி வளர்கிறது. எனவே வேர்கள் நேர் புவிசார் பசைவை கொண்டுள்ளது.

Question 6.
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:

Question 7.
ஒரு வேளை ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்
விடை:

  • ஒரு தொட்டி ரோஜா செடியின் மண்பரப்பு மற்றும் கிளை பகுதியை ஒரு பாலித்தின் பையினால் மூடவும்.
  • இந்த அமைப்பை ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப்பின் பாலித்தின் பையில் நீர் துளிகள் ஒட்டியுள்ளது
  • இந்த நிகழ்வு இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடப்பதை நிரூபிக்கிறது.

Question 8.
இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.
விடை:

Question 9.
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?
விடை:
வேர் – புவியீர்ப்பு விசை
தண்டு – சூரிய ஒளி

VII. விரிவாக விடையளி.

Question 1.
திசை சார்பசைவு மற்றும் திசை சாரா அசைவு வேறுபடுத்துக.
விடை:

Question 2.
நீராவிப்போக்கின் வகைகளை விவரி.
விடை:

  • இலைத்துளை நீராவிப்போக்கு : – பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.
  • கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு : – புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூடிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.
  • பட்டைத்துளை நீராவிப்போக்கு: இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகை தாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில்
பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒருதாவரத்தின் பெயரினை எழுதுக.
விடை:
அ) தாவரம் A – ஒளியுறு வளைதல்
தாவரம் B – இருளுறு வளைதல் கொண்டுள்ளது
ஆ) A – டான்டலியன்
B – நிலவுமலர்
இ) C – நடுக்கமுறு அசைவு
ஈ) மைமூசா பியூடிகா

 

Question 2.
கற்பனை செய்து பாருங்கள் மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் என்ன?
விடை:
அ) ஒளிச்சேர்க்கைக்கு ‘சூரிய ஒளி’ அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆ) இலையில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க,
இ) அயோடின் கரைசலைக் கொண்டு ஸ்டார்ச் சோதனை செய்தல்.
ஈ) கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் சூரிய ஒளி, பச்சையம்.

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஹீலியோடிராபிசம் ஒரு வகை _____ ஆகும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 2.
முதல் நிலை தண்டு என்பது _____ ஆகும்.
விடை:
முளைக்குருத்து

Question 3.
தாவரங்கள் மண்ணிலிருந்து பிற பொருட்களை உறிஞ்சி எவ்வளவு ஜான் பாப்டிஸ்ட் வான் எடையானது அதிகரித்தது என்பதைக் கண்டறியும் சோதனையைச் செய்தவர் _____
விடை:
ஹெல்மான்ட்

Question 4.
தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
விடை:
பிரிஸ்டிலி

Question 5.
உலகில் முதன் முதலாக உருவாகிய தாவரங்கள் _______
விடை:
மாஸ்கள் மற்றும் லிவர்
வோர்ட்ஸ்

Question 6.
பூமியில் காணப்படும் மிக உயரமான புல் வகை _____
விடை:
மூங்கில்

Question 7.
25 – 200cm மழையளவு பொதுவாகக் காணப்படுவது ______
விடை:
காடுகள் வாழிடம்

 

Question 8.
ஆகாய தாமரையின் பருத்த இலைக் காம்பு எதில் உதவுகிறது?
விடை:
மிதத்தல்

Question 9.
பட்டாணி தாவரத்தின் இரு சொல் பெயர் என்ன?
விடை:
பைசம் சாட்டைவம்

Question 10.
எந்த தாவரத்தில் விலங்கு போல் இயக்கம் காணப்படுகிறது?
விடை:
கிளாமைடோமோனாஸ்

Question 11.
டாராக்சம் அஃபிசினேல் தாவரத்தின் வட்டாரப் பெயர் ______
விடை:
சாதாரண டான்டிலியான்

Question 12.
ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
விடை:
999 மில்லி லிட்டர்கள்

Question 13.
தாவரத்தில் ஒரு நாளில் சுவாசித்தல், ஒளிச்சேர்க்கை, நீராவிப் போக்கு நடைபெறும் நேரங்கள் மணி சராசரியாக முறையே ______
விடை:
24, 12, 10

Question 14.
______ தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவ்விலைகள் தொட்டால்
விடை:
சிணுங்கி (அ) மூடிக்கொள்கின்றன.
மைமோசா பியூடிகா

Question 15.
_______ தாவரத்தின் தண்டின் முனையானது சூரியன் திசையை நோக்கி நகர்கின்றன. இரவு நேரங்களில் எதிர்திசையில் நகர்கின்றன
விடை:
ஹீலியாந்தல்

Question 16.
_____ இலைகள் காற்றினால் நடனம் ஆடுவது போன்ற அழகியத் தோற்றத்தை உருவாக்குகின்றன
விடை:
இந்திய தந்தித் தாவரத்தின்

Question 17.
____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது
விடை:
மைமோசா புடிகா

 

Question 18.
ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப ஒருதிசை சார்ந்த தாவர பாகத்தில் ஏற்படும் அசைவு ____ எனப்படும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 19.
புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்.
விடை:
புவி சார்பசைவு

Question 20.
தொடுதல் தூண்டலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்
விடை:
தொடு உணர்வு சார்பசைவு

Question 21.
வேதிப்பொருளின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு அசைதல் _____ எனப்படும்.
விடை:
வேதி சார்பசைவு

Question 22.
______ தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலை மூடிய நிலையிலும் காணப்படும்.
விடை:
டாராக்சம் அஃபிசினே

Question 24.
ஒளிச்சேர்க்கையின் முடிவில் ______ ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
விடை:
குளுக்கோஸ்

Question 25.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் _____ வாயுவை உள்ளெடுத்து செல்கிறது.
விடை:
கார்பன்டை ஆக்ஸைடு

Question 26.
தாவரத்தின் சிறுகிளை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது என்று கூறியவர் யார்?
விடை:
ப்ரீஸ்ட்லீ

Question 27.
பச்சையம் _____ மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
விடை:
ஹீமோகுளோபின்

Question 28.
தாவரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நீரையும், இலைகளில் _____ வழியாக காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொள்கிறது,
விடை:
இலைத்துளைகள்

Question 29.
_____ என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்
விடை:
எலிசா குளோரோட்டிகா

Question 30.
இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் _____ எனப்படும்.
விடை:
இலைத்துளைகள்

Question 31.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் நீராவிப்போக்கு மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது ____ எனப்படும்.
விடை:
நீராவிப்போக்கு

Question 32.
____ நீராவிப்போக்கின் போது பெருமளவு நீர், இலைத்துளை வழியாக நடைபெறுகிறது.
விடை:
இலைத்துளை

Question 33.
புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கு ____ எனப்படும்.
விடை:
கியூட்டிக்கிள் நீராவி

Question 34.
_____ நீர் இழப்பு பட்டைத்துளை வழியாக நடைபெறும்
விடை:
பட்டைத்துளை

 

Question 35.
இலைத்துளைகளில் உள்ள _____ செல்களில் பச்சையம் உள்ளது
விடை:
காப்பு

Question 36.
உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கு _____ காரணமாகும்.
விடை:
உலக வெப்பமயமாதல்

Question 37.
_____ தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது
விடை:
மக்காச்சோள

Question 38.
_____ முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தாவரங்கள்

Question 39.
உயிரினங்கள் உணவிற்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பது ____ என அழைக்கப்படுகிறது.
விடை:
உணவுச் சங்கிலி

Question 40.
_____ தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறது
விடை:
ஊசியிலைத்

Question 41.
____ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த் தன்மையுடைய நில அமேசான் அமைப்பை பெற்ற இடமாகும்.
விடை:
சாந்தோப்டெரின்

Question 42.
வெஸ்பா ஓரியன்டாலிஸ் மேல்தோல் பகுதியில் _____ என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
விடை:
சாந்தோப்டெரின்

Question 43.
நீரின் தூண்டுதலுக்கு எற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு நீர் சார்பசைவு ____ எனப்படும்
விடை:
நீர் சார்பசைவு

 

Question 44.
ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ______ எனப்படும்
விடை:
ஒளியுறு வளைதல்

Question 45.
_____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
விடை:
டெஸ்மோடியம் கைரன்ஸ்

II. பொருத்துக.

III. கூற்று மற்றும் காரண வகை

பின்வருவனவற்றில் கூற்று A காரணம் R – என்னவென்று கண்டறி.

Question 1.
கூற்று A- ஒளிச்சேர்க்கை பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் நடைபெறவில்லை
R- மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் பெருங்கடலில் 2400 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறு துளையின் அருகில் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்கின்றன
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
b – A தவறானது ஆனால் R சரியானது.

Question 2.
கூற்று A- ஒளிச்சேர்க்கையினால் உருவாக்கப்படும் ஓசோன் பூமியைப் பாதுகாக்கிறது.
விளக்கம் R- பிற பல வாயுக்களோடு சேர்ந்து CFC ஓசோன் இழப்பிற்குக் காரணமாகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
C. A சரியானது R தவறானது

Question 3.
கூற்று A- நீராவிப் போக்கு ஒரு அவசியமான கேடு.
விளக்கம் R- நீராவிப் போக்கினால் அதிக நீர் உறிஞ்சப்பட்டு தொடர்ந்து கனிமங்களை அளிக்க இவை உதவுகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
d. A சரியானது R சரியானது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
பூச்சியுண்ணும் தாவரம் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
சில தாவரங்கள் சதுப்பு நிலங்களில் வாழும். அவை நைட்ரஜன் சத்து குறைபாட்டை சரி செய்ய சிறு சிறு பூச்சிகளை (சில சமயம் தவளை போன்றவற்றை பிடித்து உணவாகக் கொள்கின்றன. இவை பூச்சியுண்ணும் தாவரம் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா : வீனஸ் பூச்சி பிடிப்பான் நெபந்தஸ்

 

Question 2.
வேதிச்சார்பசைவு – என்றால் என்ன?
விடை:
வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் வளர்தல் அல்லது அசைதல் வேதி நாட்டம் (அ) வேதிச் சார்பசைவு எனப்படுகிறது. (எ.கா) கருவுறுதல் நிகழ்ச்சியில் மகந்தரக்குழல் சூல் தண்டிலுள்ள சர்க்கரைப் பொருட்களை நோக்கி வளர்தல் ஆகும்.

Question 3.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினங்களின் தொடர் ஒன்றை ஒன்று உணவுக்கு சார்ந்து வாழ்வதற்கு ‘உணவுச்சங்கிலி’ என்று பெயர்.

Question 4.
ஊசியிலைக் காட்டு மரங்கள் (அ) கோனிஃபெரஸ் தாவரங்கள் முக்கியத்துவம் யாது?
விடை:
கோனிஃபெரஸ் தாவரங்கள் பிரமிடு வடிவத்தில் காணப்படுவதால், எல்லா இலைகளும் முழுமையாக சூரிய ஒளி பெறுவதால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

Question 5.
தாவரங்களை ஏன் முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம்?
விடை:
தாவரங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு தமக்கு வேண்டிய உணவை தயாரித்துக் கொள்கின்றன. மற்ற விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளதால், அவை முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
திசைசாரா அசைவுகள் விவரி.
விடை:
1. தாவரங்களில் காணப்படும் சில அசைவுகள் திசைசாரா அசைவுகள். தூண்டுதலுக்கேற்ப ஒரு திசையில் அவை நடைபெறுவதில்லை. இவை திசைசாரா (Nastic) அசைவுகளாகும்.
வகைகள்:
1. ஒளியுறு வளைதல்
சில தாவர மலர்கள் காலையில் திறந்தும், மாலையில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) டான்டிலியான்

2. இருளுறு வளைதல்
சில தாவர மலர்கள் இரவில் திறந்தும், பகலில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) நிலவுமலர் -(ஐபோமியா ஆல்பா )

3. நடுக்கமுறு வளைதல்
சில தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக் கொள்ளுதல். (எ.கா) தொட்டாச் சிணுங்கி

4. வெப்பமுறு வளைதல்
தாவரத்தின் ஒரு பகுதி வெப்ப நிலைக்கு ஏற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது. (எ.கா) டூலிப் மலர்கள்.

Question 5.
இலைத்துளையின் முக்கியப் பணிகள் யாவை?
விடை:

  • சுவாச மற்றும் ஒளிச்சேர்க்கைக்கான வாயு பரிமாற்றம் இலைத்துளை வழியாக நடைபெறுகிறது
  • ஆக்ஸிஜன் உள் எடுக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் – சுவாசமும்,
  • கார்பன்-டை-ஆக்ஸைடு உள் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் வெளியேற்றப்படும் ஒளிச்சேர்க்கையும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
  • உறிஞ்சப்பட்ட அதிகபட்ச நீரானது நீராவியாகத் தாவரங்களின் மேற்பகுதியான இலை தண்டுகள் மூலமாக வெளியேற்றப்படும். நீராவிப் போக்கு நிகழ்ச்சியும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *