Samacheer Kalvi 9th Science Guide Chapter 26 கணினியின் பாகங்கள்
TN Board 9th Science Solutions Chapter 26 கணினியின் பாகங்கள்
9th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers
பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலி பெருக்கி
ஈ) விரலி
விடை:
(இ) ஒலிப்பெருக்கி
Question 2.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.
அ) ஈதர்நெட்
ஆ) வி.ஜி.ஏ.
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) யு.எஸ்.பி
விடை:
(ஆ) வி.ஜி.ஏ.
Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
(ஆ) சுட்டி
Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ
ஈ) யு.எஸ்.பி
விடை:
(அ) ஊடலை
Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கம்பி
விடை:
இ) சேமிப்புக்கருவி
II. சுருக்கமாக விடையளி
Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:
கணினியில் மூன்று கூறுகள் உள்ளன. அவை,
- உள்ளீட்டகம்
- மையச்செயலகம்
- வெளியீட்டகம்
Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:

Question 3.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
கணினியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள்
- வி.ஜி.ஏ. – (Video Graphics Array) VGA
- எச்.டி.எம்.ஐ. – (High Definition Multimedia Interface) HDMI
- யு.எஸ்.பி. – (Universal Serial Bus) USB
- தரவுக்கம்பி – (Data Cable)
- ஒலிவடம் – (Audio Cable)
- மின் இணைப்புக்கம்பி – (Power Cord)
- ஒலி வாங்கி இணைப்புக்கம்பி – (Mic Cable)
- ஈதர்நெட் இணைப்புக்கம்பி – (Ethernet Cable)
யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.
தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க
தரவுக்கம்பி பயன்படுகிறது.
மின் இணைப்பு வடம் (Power cord):
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.
III. பொருத்துக I II

செயல்பாடு (மாணவர்களுக்கானது)
4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. இச்செயல்பாட்டை செய்வதற்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தின் அடிப்படையில் கணினியை இணைக்க வேண்டும். அதாவது 4 கருவிகளான மத்தியச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மத்தியச் செயலகம் கணினித்திரை ஆகிய
2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.

9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி
Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை
Question 3.
ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்.
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்புவடம்
இ) எச்.டி.எம்.ஐ.
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை
Question 5.
நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
____, ______ கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும், எழுத்தையும்
Question 2.
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது ____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்
Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
விடை:
இரண்டாக
Question 4.
தரவுகளை _____ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்
Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் _____
விடை:
யு.எஸ்.பி
III. பொருத்துக.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
கணிதத் தருக்கச் செயலகம் என்றால் என்ன?
விடை:
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன. எனவே இதை கணித தருக்கச் செயலகம் என அழைக்கிறோம்.
Question 2.
கணினியை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம், செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.
Question 3.
நினைவகம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்.
விடை:
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம். இவை இரண்டு வகைப்படும்.
- முதன்மை நினைவகம்
- இரண்டாம் நினைவகம்
V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
மையச் செயலகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மனிதனின் உடலை இயங்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இம்மையச் செயலகமானது,
1. கட்டுப்பாட்டகம் (control Unit)
2. கணிதத் தருக்கச் செயலகம் (Alu)
3. நினைவகம் (Memory Unit)
![]()
அ. கட்டுப்பாட்டகம் :
கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இதன் பணி.
ஆ. கணிதத் தருக்கச் செயலகம் :
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்து எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
இ. நினைவகம்.
கணினி தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது.