Samacheer Kalvi 9th Science Guide Chapter 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
TN Board 9th Science Solutions Chapter 5 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
9th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Text Book Back Questions and Answers
1. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
அ) மோட்டார்
ஆ) மின்கலன்
இ) மின்னியற்றி
ஈ) சாவி
விடை:
அ) மோட்டார்
Question 2.
கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது.
அ) AC இல் மட்டும்
ஆ) DC இல் மட்டும்
இ) AC மற்றும் DC
விடை:
அ) AC இல் மட்டும்
Question 3.
மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிலிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி
அ) புலக் காந்தம்
ஆ) பிளவு வளையங்கள்
இ) தூரிகைகள்
ஈ) நழுவு வளையங்கள்
விடை :
இ) தூரிகைகள்
Question 4.
காந்தப் பாய அடர்த்தியின் அலகு.
அ) வெபர்
ஆ) வெபர் / மீட்டர்
இ) வெபர் / மீட்டர் 2
ஈ) வெபர் மீட்டர் 2
விடை:
இ) வெபர் / மீட்டர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
காந்தப் புலத் தூண்ட லின் SI அலகு ……………………………… ஆகும்.
விடை:
டெஸ்லா
Question 2.
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _ ஆகும்.
விடை:
மின்மாற்றி
Question 3.
மின் மோட்டார் ஐ மாற்றுகிறது.
விடை:
மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக
Question 4.
மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி – ஆகும்
விடை:
மின்னியற்றி
III. பொருத்துக.
IV. சரியா? தவறா? தவறு எனில் திருத்துக
Question 1.
ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
விடை:
சரி
Question 2.
காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன. வெட்டிக் கொள்வதில்லை.
விடை:
சரி
Question 3.
ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது. ஃப்ளெமிங்கின் வலது கை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு
Question 4.
சுருளின் பரப்பைக் குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம். சுருளின் பரப்பைக் அதிகரிப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.
விடை:
தவறு
Question 5.
ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது. ஒரு மின்மாற்றி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
விடை:
தவறு
Question 6.
ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கை துணைச் சுற்றில் உள்ள சுருள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
விடை:
சரி
V. சுருக்கமாக விடையளி
Question 1.
ஃப்ளெமிங்கின் இடக்கை விதியைக் கூறு.
விடை:
- இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டிவிரல், நடு விரல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது,
- மின்னோட்டத்தின் திசையை – நடுவிரலும், சுட்டுவிரல் – காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால், பெருவிரலானது – கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது.
Question 2.
காந்தப் பாய அடர்த்தி வரையறு.
விடை:
- காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி ஆகும்.
- அலகு Wb/m2 ஆகும்.
Question 3.
மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
- நிலைக்காந்தம்
- கம்பிச்சுருள்
- கார்பன் தூரிகை
- திசைமாற்றி.
Question 4.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
விடை:
NS – இரு துருவங்கள்
ABCD – செவ்வக வடிவ கம்பிச்சுருள்
S1, S2 – நழுவு வளையங்கள்
B1, B2 – தூரிகைகள்.
Question 5.
DC யை விட ACன் சிறப்பியல்புகளைக் கூறுக.
விடை:
- அதிக தொலைவுகளுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை ஏற்று மின்மாற்றிகளைக் கொண்டு எடுத்துச் செல்லாம். ஆற்றல் இழப்பு மிகக்குறைவு.
- நேர்திசை மின்னோட்டத்தை அவ்வாறு அனுப்ப இயலாது.
- மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற இயலும்.
- நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது.
- பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலை மாறுதிசை மின்னோட்டத்தினால் உருவாக்க முடியும்.
Question 6.
ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக.
விடை:
Question 7.
ஒருவானொலிப்பெட்டியில் அது வீட்டின் முதன்மைச்சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?
விடை:
- வானொலிப் பெட்டியில் இறக்கு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது திருத்தப்பட்ட மாறுதிசை மின்னோட்டம் மின்கல அடுக்கின் மின்னோட்டத்தை சமன் செய்கிறது.
- எனவே வானொலி வீட்டின் முதன்மைச் சுற்று மற்றும் மின்கல அடுக்கின் மூலம் இயங்குகிறது.
Question 8.
ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.
விடை:
- ஒரு மின்கடத்தியைச் சுற்றியுள்ள காந்தவிசைக் கோடுகள் மாறும்பொழுது மின்னியக்குவிசை உருவாகும்.
- காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒரு மூடிய மின் சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் ஆகும்.
VI. விரிவாக விடையளிக்கவும்.
Question 1.
DC மோட்டாரின் தத்துவம், அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.
விடை:
- மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி மின்மோட்டார் ஆகும்.
- தத்துவம் : காந்தப்புலத்தில் வைக்கப்படும் ஒரு கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியை இயங்கச் செய்கிறது.
அமைப்பு:
- ABCD என்ற கம்பிச்சுருள் நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.
- கம்பிச்சுருளின் முனைகள் பிளவு வளைய திசைமாற்றியில் பொருத்தப்பட்டுள்ளது.
- மின் கடத்தாப் பொருள்களாலான பிளவு வளையத் திசைமாற்றியின் உட்பகுதி அச்சில் இணைக்கப்பட்டுள்ளது.
- கார்பன் தூரிகைகள் X, Y-பிளவு வளைய திசைமாற்றியில் வெளிப்புறச் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- காந்தப்புலத்திலிருந்து பெறப்படும் மின்னோட்டம் தூரிகை X வழியாக கம்பிச்சுருள் A B C D க்குள் சென்று தூரிகை Y வழியாக மின்கல அடுக்கினை அடைகிறது. செயல்படும் விதம்:
- கடத்தி AB யிலுள்ள மின்னோட்டம் A யிலிருந்து நிக்குச் செல்கிறது.
- கடத்தி CD யில் உள்ள மின்னோட்டம் C யிலிருந்து D க்குச் செல்கிறது.
- இதற்கு எதிர் திசையில் கடத்திப்பிரிவின் AB மின்னோட்டம் செல்கிறது.
- ஃபிளெமிங் இடக்கை விதிப்படி ABCD என்ற பிரிவுகளில் மின்னோட்டம் எதிரெதிர் திசைகளில் செல்லும்போது அதன் இயக்கமும் எதிரெதில் திசையில் அமையும்.
- கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் விசை எதிரெதிர் திசையில் அமைவதால் அவை சுழல்கின்றன.
- மின்னோட்டம் ABCD வழியாக இருந்தால் கம்பிச்சுருள் முதலில் கடிகார திசையிலும், பின் எதிர் திசையிலும் சுழலும்.
- கம்பிச் சுருள் ஒரே திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது சுழற்சியின் முதல் பாதியில் ABCD யிலும் பின் பாதியில் DCBA வழியாகவும் பாய வேண்டும்.
- மின்னோட்டத்தின் திசையை மாற்ற பிளவு வளைய திசைமாற்றி பயன்படுத்தப்படுகிறது.
- பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X, Y உடன் இணைந்திருக்கும் போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை.
- ஆனால் சுருள் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் ஏதாவது ஒன்று கார்பன் தூரிகைகள் X மற்றும் Y உடன் தொடர்பு கொள்ளும்.
- இந்த மின்னோட்ட திருப்புதல் ஒவ்வொரு அரை சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.
Question 2.
மின் மாற்றியின் இரு வகைகளை விளக்கவும்.
விடை:
மின்மாற்றி: குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும், உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி.
ஏற்று மின்மாற்றி:
- ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி ஏற்று மின்மாற்றி. அதாவது (Vs>Vp).
- ஒரு ஏற்று மின்மாற்றியில், முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகம். (Ns > Np)
- மின்னழுத்தம் அதிகரிக்கிறது, மின்னோட்டமானது குறைகிறது. இறக்கு
மின்மாற்றி: - ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி இறக்கு மின்மாற்றி. அதாவது (Vs >Vp).
- ஒரு இறக்கு மின்மாற்றியில், முதன்மைச்சுருளில் உள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். (Ns < Np)
- மின்னோட்டமானது அதிகரிக்கிறது, மின்னழுத்தம் குறைகிறது.
Question 3.
ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.
விடை:
S1, S2 – நழுவு வளையங்கள்
B1, B2 – தூரிகைகள்
ABCD – செவ்வக வடிவ கம்பிச்சுருள்
NS – நிலைக்காந்தம்.
செயல்படும் விதம்:
- கம்பிச்சுருள் சுழற்றப்படும்போது, சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப்பாயமும் மாறுபடும். இந்த காந்தப்பாய மாற்றம் மின்னோட்டத்தைத் தூண்டுகிறது.
- ஃபிளெமிங்கின் வலது கை விதிப்படி தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையானது கம்பிச்சுருளில் ABCD வழியாகவும், வெளிப்புற வட்டத்தில் B2 லிருந்து B நோக்கியும் பாய்கிறது.
- சுழற்சியின் இரண்டாவது பாதியில், மின்னோட்டத்தின் திசையானது, கம்பிச் சுருளில் DCBA வழியாகவும் வெளிப்புறச் சுற்றுப்பாதையில் B2 லிருந்து B| நோக்கியும் பாய்கிறது.
- சுருளின் சுழற்சியைத் தொடர்ந்தால், வெளிப்புறச் சுற்றுகளில் தூண்டப்பட்ட மின்னோட்டம் ஒவ்வொரு அரை சுழற்சியிலும் மாறிக்கொண்டிருக்கும்.
9th Science Guide காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
Question 1.
கப்பலின் மாலுமிகள் கப்பலின் திசையை அறிய …………………………………. பயன்படுத்தினர்.
விடை:
காந்தங்களை
Question 2.
…………………………………. எனும் காந்தக்கல்லே மிகவும் வலிமையான இயற்கைக் காந்தமாகும்.
விடை:
மேக்னடைட்
Question 3.
காந்தத்தைச் சுற்றி உள்ள, காந்தத்தன்மையை உணரக்கூடிய இடம் …………………………………. ஆகும்.
விடை:
காந்தப்புலம்
Question 4.
…………………………………. அதன் காந்தப்புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது.
விடை:
புவி
Question 5.
லாஜெர்ஹெட் ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய …………………………………. என்னும் முறையைக் கையாளுகின்றன.
விடை:
புவிக்காந்த உருபதித்தல்
Question 6.
காந்தவிசைக் கோடுகள்_ துருவத்தில் ஆரம்பித்து …………………………………. துருவத்தில் முடிவடைகின்றன.
விடை:
வட, தென்
Question 7.
காந்தவிசைக் கோடுகள் என்பவை காந்தத்தினை ஊடுருவிச் செல்லும் …………………………………. ஆகும்.
விடை:
தொடர் வளைகோடு
Question 8.
காந்தவிசைக் கோடுகள் காந்தத்தின் நடுப் பகுதியை விட …………………………………. அதிகமாக இருக்கும்.
விடை:
துருவங்களில்
Question 9.
காந்தக்காப்பிடலில் பயன்படுத்தப்படும் உலோகக் கலவை ………………………………… .
விடை:
நிக்கல் – இரும்பு
Question 10.
மின்னோட்டம் பாயும் கடத்தியானது அதனைச் சுற்றி …………………………………. உருவாக்குகிறது.
விடை:
காந்தப்புலத்தை
Question 11.
காந்தப்புலமானது எப்போதும் மின்சாரம் பாயும் திசைக்கு …………………………………. இருக்கும்.
விடை:
செங்குத்தாக
Question 12.
மின்சாரம் மற்றும் காந்தவியல் ஒன்றுடன் ஒன்று ஐக்கியமாகி …………………………………. என உள்ளது.
விடை:
மின்காந்தவியல்
Question 13.
ஒரு கடத்தியில் மின்னோட்டம் பாயும் பொழுது, அதனைச் சுற்றி காந்தப்புலம் உருவாகி கடத்தியானது …………………………………. போல் செயல்படுகிறது.
விடை:
காந்தம்
Question 14.
ஒரே திசையில் மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்திகள் ஒன்றையொன்று …………………………………. .
விடை:
ஈர்க்கும்
Question 15.
…………………………………. திசையில் மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்திகள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை:
எதிரெதிர்
Question 16.
மின்னோட்டம் பாயும் கடத்தியில் உருவாகும் விசையானது …………………………………. விதியால் அறியப் படுகிறது.
விடை:
ஃ பிளெமிங்கின் வலக்கை
Question 17.
ஃபிளெமிங்கின் இடதுகை விதியில் கட்டை விரலானது …………………………………. ஐக் கடத்தி இயங்கும் குறிக்கிறது.
விடை:
திசையை
Question 18.
விசை என்பது …………………………………. அளவு ஆகும்.
விடை:
வெக்டர்
Question 19.
மின் மோட்டாரானது மின் ஆற்றலை …………………………………. ஆக மாற்றுகிறது.
விடை:
இயந்திர ஆற்றலாக
Question 20.
தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது …………………………………. என அழைக்கப்படுகிறது.
விடை:
ஃபிளெமிங்கின் வலது கை விதி
Question 21.
ஃபிளெமிங்கின் வலதுக்கை விதியை …………………………………. எனவும் அழைக்கலாம்.
விடை:
மின்னியற்றி விதி
Question 22.
மின் மாற்றியானது …………………………………. என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை:
மின்காந்தத் தூண்டல்
Question 23.
இயற்கைக்காந்தங்கள் …………………………………. மற்றும் …………………………………. காணப்படுகின்றன.
விடை:
பாறைகள், மணற்படிவுகளில்
Question 24.
இயற்கைக்காந்தங்களின் …………………………………. நிலையானவை.
விடை:
காந்தப்பண்புகள்
Question 25.
…………………………………. பயன்படுத்தி காந்தப்புலத்தின் திசையைக் கண்டறியலாம்.
விடை:
திசைக்காட்டியை
Question 26.
MRI ஸ்கேனரின் காந்தப்பாய அடர்த்தி ………………………………….
விடை:
2 டெஸ்லா (2T)
Question 27.
சென்னையில் புவியின் காந்தப்பாய அடத்தி (13° அட்சரேகை) ………………………………….
விடை:
42μT (42 மைக்ரோ டெஸ்லா)
Question 28.
காந்தப்புலமானது அனைத்து வகைப் பொருட்களிலும் …………………………………. செல்லும்.
விடை:
ஊடுருவிச்
Question 29
காந்தப்புலக்கோடு …………………………………. வரையப்பட்ட ஒரு வளைவான கோடு ஆகும்.
விடை:
காந்தப்புலத்தில்
Question 30
ஒவ்வொருப் புள்ளியிலும் காந்தப்புலமானது …………………………………. அமைந்திருக்கும்.
விடை:
தொடுகோட்டின் திசையிலேயே
Question 31
காந்தப்புலமானது ஒரு பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும் முறை …………………………………. ஆகும்.
விடை:
காந்தக்காப்பிடல்
Question 32.
…………………………………. விதியைப் பயன்படுத்தி மின்னோட்டம் பாயும் மின் கடத்தியைச் சுற்றியுள்ள காந்தக் கோடுகளின் திசையை அறியலாம்.
விடை:
வலக்கை பெருவிரல்
Question 33.
காந்தவிசைக் கோடுகள் மின் கம்பிக்கு …………………………………. அருகில்
விடை:
வலுவாக
Question 34
காந்தவிசைக் கோடுகள் மின்கம்பியை விட்டு விலகிச்செல்லும்போது …………………………………. இருக்கும்.
விடை:
குறைவாக
Question 35.
காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியில் உருவாகும் விசையானது …………………………………. ஆகும்
விடை:
F = ILB
Question 36.
மின்மோட்டாரில், மின்னோட்டத்தின் திசையை மாற்ற …………………………………. பயன்படுகிறது.
விடை:
பிளவு வளைய திசைமாற்றி
Question 37.
கம்பிச் சுருளிலுள்ள மின்னோட்டத்தின் வலிமை அதிகரிக்கும் போது, அதன் …………………………………. ம் அதிகரிக்கிறது.
விடை:
சுழற்சி வேகமும்
Question 38.
கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது …………………………………. உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
மின்னியக்கு விசை (e.m.f)
Question 39.
காந்தத்தூக்கல் முறையில் ஒரு பொருளானது …………………………………. உயர்த்தப்படுகிறது
விடை:
மின்காந் தப்புலத்தினால்
Question 40.
…………………………………. மின்திறனை ஒரு மின் சுற்றிலிருந்து மற்றொரு மிச்சுற்றிற்கு மாற்றுகிறது
விடை:
மின்மாற்றி
Question 41.
…………………………………. கிடைக்கக்கூடிய காந்தம் இயற்கைக் காந்தம் எனப்படும்
விடை:
இயற்கையாகவே
Question 42.
முற்காலத்தில் காந்தக்கற்கள் …………………………………. கப் பயன்படுத்தப்பட்டன.
விடை:
திசைகாட்டிகளா
Question 43.
காந்தப்புலம் எனும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அலகு …………………………………. ஆகும்.
விடை:
B, டெஸ்லா
Question 44.
காந்தப்பாயத்தின் அலகு
விடை:
வெபர்
Question 45.
கணினியின் வன்தட்டு …………………………………. பயன்படுத்தி தகவலைச் சேமித்து வைக்கிறது.
விடை:
காந்தத் தன்மையைப்
Question 46
மின்மோட்டார்என்பது மின்னாற்றலை …………………………………. மாற்றும்
விடை:
இயக்க ஆற்றலாக
Question 47
ஒலிப்பெருக்கியின் உள்ளே ஒரு நிலைக்காந்தத்தின் முன் …………………………………. வைக்கப்படுகிறது.
விடை:
மின் காந்தம்
Question 48.
உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்ற பயன்படுவது …………………………………. மாற்றி
விடை:
இறக்கு மின் மாற்றி
Question 49.
…………………………………. என்பது ஒரு வெக்டர் அளவு ஆகும்
விடை:
விசை
Question 50
மின்காந்தவியல் …………………………………. பயன்பாடுகளில் மிகப்பெரிய புரட்சியை ஏறப்படுத்தியுள்ளது
விடை:
பொறியியல்
II. பொருத்துக
III. கூற்று மற்றும் காரண வகை
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Question 1.
கூற்று (A): காந்தவிசைக்கோடுகள் மின் கம்பிக்கு அருகில் வலுவாகவும் அதைவிட்டு விலகிச்செல்லும் போது குறைவாகவும் உள்ளது.
காணரம் (R): இது கம்பியின் அருகில் நெருங்கிய காந்த விசைக் கோடுகளையும் விலகிச் செல்லச் செல்ல குறைவான காந்தவிசைக் கோடுகளையும் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது.
விடை :
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
Question 2.
கூற்று (A): மின் காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் மைக்கேல் ஃபாரடே ஆவார்.
காணரம் (R): காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட மின்னோட்டம் பாயும் கடத்தியானது விலக்கமடையும்.
விடை :
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
Question 3.
கூற்று (A): தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை லென்ஸின் விதியால் விளக்கப்படுகிறது.
காணரம் (R): காந்தப்பாய மாற்றமானது மின்னோட்டத்தைத் தூண்டுகிறது.
விடை :
அ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம் அல்ல.
IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக
Question 1.
விசை செயல்படும் திசை : ஃபிளெமிங்கின் இடது கை விதி : :
தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை : ______________
விடை :
ஃபிளெமிங்கின் வலது கை விதி
Question 2.
மின்னோட்டக் கடத்தி காந்தப்புலத்திற்கு செங்குத்தாக (1) : விசை பெருமம் : :
மின்னோட்டக் கடத்தி காந்தப்புலத்திற்கு இணையாக (II) : _______________
விடை :
விசை சுழி
Question 3.
ஸ்கேலார் அளவு : எண் மதிப்பு : :
வெக்டர் அளவு : _________________
விடை :
எண் மதிப்பு மற்றும் திசை இரண்டும்
Question 4.
மின்மோட்டார் : மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் ::
மின்னியற்றி : _________________
விடை :
இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும்
Question 5.
ஏற்று மின் மாற்றி : (Vs > VP) மற்றும் (Ns > Np) ::
இறக்கு மின்மாற்றி : _________________
விடை :
(Vs<Vp) மற்றும் (Ns < Np)
V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
விடை:
Question 2.
காந்தப்பாயம் வரையறு
விடை:
- காந்தப்பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாகக் கடந்து வரும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை ஆகும்
- அலகு வெபர் (Wb) ஆகும்.
Question 3.
காந்தப்புலம் என்றால் என்ன?
விடை:
காந்தத்தைச் சுற்றி அதன் ஈர்ப்பு விசை அல்லது விலக்கு விசை காணப்படும் இடம் காந்தப்புலம் எனப்படும்
Question 4.
காந்தப்புலக் கோடுகள் என்றால் என்ன?
விடை:
காந்தத்தைச் சுற்றி உள்ள புலத்திலுள்ள வளைந்த கோடுகள் காந்தப்புலக் கோடுகள் எனப்படுகின்றன.
Question 5.
மின் மோட்டாரின் தத்துவம் என்ன?
விடை:
காந்தப்புலத்தில் வைக்கப்படும் ஒரு கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியை இயங்க செய்கிறது எனும் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
Question 6.
மின் மோட்டாரின் பயன்பாடுகளைப் பட்டியலிடுக > தண்ணீ ர் பம்ப்
விடை:
- மின் விசிறி
- மாவரைக்கும் இயந்திரம்
- சலவை இயந்திரம் சாறுபிழியும் கருவி
Question 7.
மின்னோட்டம் பாயும் திசையை எவ்வாறு மாற்றி அமைப்பாய்?
விடை:
“பிளவு வளைய திசைமாற்றி” எனும் ஒரு சிறிய கருவி மூலம் மின்னோட்டம் பாயும் திசையினை மாற்றி அமைக்கலாம்.
Question 8.
லென்ஸ் விதியை விவரி?
விடை:
கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டமானது அது உருவாக காரணமாயிருந்த காந்தபாய மாற்றத்தை எதிர்க்கும்.
Question 9.
MRI என்றால் என்ன?
விடை:
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் MRI ஆகும்.
- இது உடலின் உட்புறங்களின் பிம்பங்களை காண உதவும் கருவி ஆகும்.
Question 10.
காந்தக்காப்பிடல் என்றால் என்ன?
விடை:
காந்தப்புலமானது ஒரு பகுதிக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும் முறை காந்தக்காப்பிடல் என்று அழைக்கப்படுகிறது.
VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
காந்த விசைக் கோடுகளின் பண்புகள் யாவை?
விடை:
- காந்தவிசைக் கோடுகள் என்பவை காந்தத்தின் உட்புறம் வழியாக ஊடுருவிச் செல்லும் தொடர் வளைகோடுகளாகும்.
- காந்தவிசைக் கோடுகள் காந்தத்தின் வடதுருவத்தில் துவங்கி தென் துருவத்தில் முடிவடையும்.
- காந்தவிசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாது.
- இவை காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் அதிகமாக இருக்கும்.
- வளைகோட்டின் எந்தவொரு புள்ளியிலும் வரையப்படும் தொடுகோடானது காந்தப்புலத்தின் திசையைக் காட்டுகிறது.
Question 2.
மின்னோட்டம் பாயும் இரு இணையான கடத்திகளுக்கு இடையேயான விசையைக் கண்டறிக?
விடை:
- ஃப்ளெமிங்கின் இடது கை விதிப்படி, இரண்டு கடத்திகளிலும் ஒரே திசையில் மின்னோட்டம் பாயுமானால், இரண்டு கடத்திகளின் மீது செயல்படும் விசைகளும் ஒன்றையொன்று நோக்கிச் செயல்படும்.
- அவற்றிற்கிடையே உருவாகும் விசை கவர்ச்சி விசையாகும்
- ஆனால் இரண்டு கடத்திகளிலும் எதிரெதிர் திசையில் மின்னோட்டம் பாயுமானால், இரண்டு கடத்திகளின் மீது செயல்படும் விசைகளும் ஒன்றையொன்று விலக்கிச் செயல்படும்.
- இக்கடத்திகளுக்கிடையே உருவாகும் விசையானது “விலக்குவிசை” ஆகும்.
Question 3.
AC மின்னியற்றியின் செயல்பாட்டைப் படத்துடன் விவரி.
விடை:
அமைப்பு.
- ஒரு மாறுதிசை மின்னோட்ட AC மின்னியற்றியில், ஒரு நிலைக் காந்தத்தின் இரு துருவங்களுக்கிடையில் அமைக்கப்பட்ட சூழல் வகையிலான செவ்வக வடிவ கம்பிச்சுருள் மின் சட்டம் ABCD வைக்கப்பட்டுள்ளது.
- இந்த சுருளின் இரண்டு முனைகளும் இரண்டு நழுவு வளையங்களான S மற்றும் S, உடன் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த நழுவு வளையங்களின் உட்புறம் மின்காப்பு செய்யப் பட்டுள்ளது.
- கடத்தும் தூரிகைகளான B, மற்றும் B, ஆகிய இரண்டு தூரிகைகள் முறையே, மற்றும் S, ஆகியவற்றைத் தொடும்படி வைக்கப்பட்டுள்ளன.
- S, மற்றும் S, இரு வளையங்களும் ஒரு உட்பக்க அச்சின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
- அச்சானது காந்தப்புலத்தில் உள்ள கம்பிச்சுருளை சுழற்றும் வகையில் வெளியிலிருந்து சுழற்றப்படுகிறது.
- இரண்டு தூரிகைகளின் வெளி முனைகள் வெளிப்புறச் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.