TN 9 SST

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

TN Board 9th Social Science Solutions Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
அ) பல்வந்ராய் மேத்தா குழு
ஆ) அசோக் மேத்தா குழு
இ) GVK ராவ் மேத்தா குழு
ஈ) LM சிங்வி மேத்தா குழு
விடை:
இ) GVK ராவ் மேத்தா குழு

Question 2.
_____ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்
விடை:
அ) சோழர்

 

Question 3.
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
அ) 1992
ஆ) 1995
இ) 1997
ஈ) 1990
விடை:
அ) 1992

Question 4.
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____ ஆவார்.
அ) ஆணையர்
ஆ) மாவட்ட ஆட்சியர்
இ) பகுதி உறுப்பினர்
ஈ) மாநகரத் தலைவர்
விடை:
ஆ) மாவட்ட ஆட்சியர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர் _____
விடை:
ரிப்பன் பிரபு

Question 2.
நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது ____ ஆக விளங்கியது.
விடை:
நம்பிக்கை

Question 3.
சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ____ என்றழைக்கப்பட்டது.
விடை:
குடவோலை முறை

 

Question 4.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ____ ஆகும்.
விடை:
கிராம ஊராட்சி

Question 5.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் ____ ஆவார்.
விடை:
செயல் அலுவலர்

III. பொருத்துக

IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி எழுதவும்.

1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப்பணிகள் அலுவலர் ஆவார்.
4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
1. ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைந்துள்ளது.
3. தவறு இல்லை.
4. உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

V. சுருக்கமான விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • நில வரி
  • வீட்டு வரி
  • தொழில் வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

 

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

Question 3.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்குதல்
  • வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
  • சாலைகளைப் பராமரித்தல்
  • தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
  • சிறிய பாலங்களைப் பராமரித்தல்
  • இடுகாடுகளைப் பராமரித்தல்
  • வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
  • தெருக்களைச் சுத்தம் செய்தல்
  • பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
  • தெருவிளக்குகளைப் பராமரித்தல்
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்

Question 4.
உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?
விடை:

  • கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்.
  • சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
  • மரங்களை நடுதல்.
  • விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
  • வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.
  • பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

 

Question 5.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:

  • பேரூராட்சி
  • நகராட்சி
  • மாநகராட்சி

VI. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • ஊராட்சி மற்றும் நகராட்சியின் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
  • குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
  • கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
  • நேரடித் தேர்தல் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • அனைத்து நிலைகளிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • பெண்களுக்கு 1/3 பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தலைவர் பதவிக்கும் 1/3 பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துதல், ஆட்சிகலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Question 2.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
விடை:

  • உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறை யின்மை.
  • நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
  • உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கிய பங்காற்றுகின்றன. > மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. உன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரி.

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்
அ) பல்லவர்கள்
ஆ) ஆங்கிலேயர்
இ) குப்தர்கள்
ஈ) சோழர்கள்
விடை:
ஈ) சோழர்கள்

 

Question 2.
மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது
அ) 1909 மிண்டோ – மார்லி சீர்திருத்தச்சட்டம்
ஆ)1919 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம்
இ) 1773 ஒழுங்குபடுத்தும் சட்டம்
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்
விடை:
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்

Question 3.
இந்திய நிர்வாகம் பிராந்திய மொழியிலேயே நடைபெற வேண்டும் என விரும்பியவர்
அ) டல்ஹௌசி
ஆ) வெல்லெஸ்லி
இ) மன்றோ
ஈ) ரிப்பன்
விடை:
இ) மன்றோ

Question 4.
இந்தியாவில் வாக்களிக்கத் தேவையான குறைந்தபட்ச வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 16
விடை:
அ) 18

Question 5.
மேயரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ____ ஆண்டுகள்.
விடை:
ஐந்து

 

Question 2.
தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தெரிவிப்பது ____ கல்வெட்டுக்கள் ஆகும்.
விடை:
உத்திரமேரூர்

Question 3.
கிராம ஊராட்சிக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்
விடை:
ஊராட்சி மன்ற தலைவர்

Question 4.
பெரியார் ____ நகராட்சியின் பெருந்தலைவராகப் பணியாற்றினார்.
விடை:
ஈரோடு

Question 5.
மாநில அளவில் தேர்தல்களை நடத்துவது _____
விடை:
மாநிலத் தேர்தல் ஆணையம்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்கல்
  • கிராம சுகாதார நிலையங்கள் பராமரிப்பு
  • சாலைகள் பராமரிப்பு
  • மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
  • பொதுக் கண்காட்சிகள் நடத்துதல்
  • கால்நடை மருத்துவமனைகளை நிறுவுதல்
  • சமூகக் காடுகளை பராமரித்தல்
  • துவக்கப்பள்ளி கட்டடங்களை சீர் செய்தல்

Question 2.
பிற நகர்புற பஞ்சாயத்துக்கள் யாவை?
விடை:

  • அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள்
  • நகர் பகுதி குழுக்கள்
  • இராணுவ குடியிருப்பு வாரியம்
  • குடியிருப்புகள்
  • துறைமுகப் பொறுப்பு கழகம்
  • சிறப்பு நோக்க நிறுவனம்

 

Question 3.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • திருச்சி
  • திருநெல்வேலி
  • சேலம்
  • ஈரோடு
  • வேலூர்
  • தூத்துக்குடி
  • திருப்பூர்
  • தஞ்சாவூர்
  • திண்டுக்கல்

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • தொழில் வரி
  • வீட்டு வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • நில வரி
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *