TN 9 SST

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

TN Board 9th Social Science Solutions Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

9th Social Science Guide தமிழகத்தில் வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
அ) 27%
ஆ) 57%
இ) 28 %
ஈ) 49%
விடை:
ஆ) 57 %

Question 2.
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
அ) கம்பு
ஆ) கேழ்வரகு
இ) சோளம்
ஈ) தென்னை
விடை:
ஈ) தென்னை

 

Question 3.
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித்திறன்
அ) 3,039 கி.கி
ஆ) 4,429 கி.கி
இ) 2,775 கி.கி
ஈ) 3,519 கி.கி
விடை:
ஆ) 4,429 கி.கி

Question 4.
தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
அ) குறைந்துள்ளது
ஆ) எதிர்மறையாக உள்ளது
இ) நிலையாக உள்ளது
ஈ) அதிகரித்துள்ளது
விடை:
ஈ) அதிகரித்துள்ளது

Question 5.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
அ) ஆகஸ்டு – அக்டோபர்
ஆ) செப்டம்பர் – நவம்பர்
இ அக்டோபர் – டிசம்பர்
ஈ) நவம்பர் – ஜனவரி
விடை:
இ) அக்டோபர் – டிசம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழக மக்களில் பெரும்பான்மையினர் ____ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்
விடை:
வேளாண்

Question 2.
தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ____ பருவ மழையாகும்.
விடை:
வடகிழக்குப்

 

Question 3.
தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ____ ஹெக்டேர்கள் ஆகும்.
விடை:
ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம்

III. பொருத்துக.

IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.

Question 1.
உணவுப் பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.
விடை:

  • உணவுப் பயிர்கள் : 1. நெல், 2. சோளம்
  • உணவல்லாத பயிர்கள் : 1. தென்னை , 2. பருத்தி

Question 2.
பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
விடை:

  • தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 4544000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
  • மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
  • மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கியக் காரணி மழைப் பொழிவு ஆகும்.

 

Question 3.
நிலத்தடி நீரின் அளவையும், தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?
விடை:
நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்காணிக்கிறது.

Question 4.
பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
விடை:

  • பயிரிடப்படும் நிலப்பரப்பு
  • நிலத்தடி நீர்
  • மழைப்பொழிவு
  • நீர் இருப்பு
  • காலநிலை
  • சந்தைவிலை
  • உற்பத்தித்திறன்

Question 5.
சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக.
விடை:

V. விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.
  • தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.
  • வடகிழக்குப் பருவமழைநீரை நீர்த் தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
  • வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
  • தமிழகத்தில் லட்சக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் பல இன்னல்களும் ஏற்படுகின்றன.

 

Question 2.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்க வல்லது.
  • நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவை விட நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவு கூடப் பிரச்சனை ஏற்படும்
  • அதாவது நீர் மட்டம் கீழே செல்லும். இதனால் நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறிவிடலாம்.
  • தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கதிகமாக நீரைப் பயன்படுத்துவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Question 3.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க
விடை:

  • தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.
  • தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.
  • இப்பருவமழையின் நீரை நீர்த்தேக்கங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தேக்கி வேளாண்மையை
    மேற்கொள்கின்றனர்.
  • இந்நீர் வாய்க்கால்கள் மூலமாக நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் 2239 வாய்க்கால்கள் உள்ளன.
  • ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும்.
  • தமிழகத்தில் ஆழ்த்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகளும் உள்ளன.
  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.

VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. கிராமம் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் விளையும் உணவுப் பயிர்களையும், உணவல்லாத பயிர்களையும் ஆராய்க.
2. தஞ்சாவூர் எந்தப் பயிருக்குப் பெயர் பெற்றது? ஏன்? ஆராய்க.
3. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாட்டத்தின் நெல் விளைச்சல் குறித்துத் தரவுகளை சேகரிக்கவும்.

9th Social Science Guide தமிழகத்தில் வேளாண்மை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
தமிழகத்தில் தரிசாகக் கிடக்கும் நிலத்தின் பகுதி
அ) 13
ஆ) 23
இ) 15
ஈ) 110
விடை:
ஈ) ஈ) 110

 

Question 2.
2011 ஆம் ஆண்டில் ஏறத்தாழ _____ விழுக்காடு பெண்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
அ) 25%
ஆ) 35%
இ 45%)
ஈ) 55%
விடை:
ஈ) 55%

Question 3.
தென்மேற்குப் பருவக் காற்று வீசும் காலம்
அ) ஜுன் – செப்டம்பர்
ஆ) அக்டோபர் – டிசம்பர்
இ ஜனவரி – மார்ச்
ஈ) ஏப்ரல் மற்றும் மே
விடை:
அ) ஜுன் – செப்டம்பர்

Question 4.
தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு
அ) நர்மதை
ஆ) தப்தி
இ) காவிரி
ஈ) கோதாவரி
விடை:
இ) காவிரி

Question 5.
உலக அளவில் மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ள நாடு
அ) ஸ்ரீலங்கா
ஆ) இந்தியா
இ) தென்ஆப்பிரிக்கா
ஈ) மலேசியா
விடை:
ஆ) இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மேட்டூர் அணை ____ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,
விடை:
காவிரி

Question 2.
கல்லணையைக் கட்டியவர் _____
விடை:
கரிகாலன்

 

Question 3.
மறைநீர் எனும் பதத்தை அறிமுகப்படுத்தியவர் _____
விடை:
டோனி ஆலன்

Question 4.
மேட்டூர் அணை அமைந்துள்ள மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 5.
தமிழகத்தில் விவசாயத்திற்கான மிகப் பெரிய நீர் கொள்ளளவு கொண்ட அணை _____
விடை:
மேட்டூர் அணை

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i) தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகள் ஆவர்.
ii) சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.
iii) இந்தியாவில் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
iv)தமிழகத்தில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
விடை:
ii) சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது

Question 2.
i) இந்தியாவில் வற்றாத நதிகள் இல்லை .
ii) தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது தென்மேற்குப் பருவக்காற்று ஆகும்.
iii) ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானது.
iv) தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு ஆறுகளையே நம்பி இருக்கிறது.
விடை:
iii) ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானது

Question 3.
i) காவிரி நதி மதுரையின் வழியாகப் பாய்கிறது.
ii) கல்லணை காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
iii) உலக அளவில் மறைநீர் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
iv) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 10% மட்டுமே விவசாயத்திற்குப் பயன்படுகிறது.
விடை:
ii) கல்லணை காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
இந்தியாவில் வீசும் பருவக்காற்றுகள் யாவை?
விடை:

  • தென்மேற்குப் பருவக்காற்று
  • வடகிழக்குப் பருவக்காற்று

Question 2.
மறைநீர் என்றால் என்ன?
விடை:
விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் மறைநீர் என அழைக்கப்படுகிறது.

 

Question 3.
நுண்ணீ ர் பாசனத் தொழில் நுட்பம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:

  • நுண்ணீர் பாசனத் தொழில்நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது.
  • இம்முறையில் சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுகிறது.
  • இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
  • பணி ஆட்களின் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது.
  • களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
  • நீர் வழி உரமிடுவதால் உரப் பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பதோடு தரமான விளை பொருளும் கிடைக்கிறது.

Question 4.
நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.
விடை:

  • தமிழகத்தில் பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பில் நெல் 30 விழுக்காடு பரப்பில் பயிரிடப்படுகிறது.
  • மொத்த உணவு தானிய உற்பத்தியை நெல்லின் பங்கு 62 விழுக்காடு ஆகும்.
  • நெல் உற்பத்தித் திறனை கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.

V. விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.
விடை:

  • தமிழகத்தில் விளையும் பயிர்களை உணவுப்பயிர்கள் மற்றும் உணவல்லாத பயிர்கள் வகைப்படுத்தலாம்.
  • தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பளவில் ஏறத்தாழ 76 விழுக்க பரப்பளவில் உணவுப்பயிர்களும் மற்ற இடங்களில் உண்பல்லாத பயிர்களும் பயிரிடப்பட்டன.
  • நெல், சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு போன்றவை உணவுப் பயிர்களாகும்.
  • தென்னை, பருத்தி, நிலக்கடலை போன்றவை உணவல்லாத பயிர்களாகும்.
  • தமிழகத்தில் நெல் சாகுபடி 30 விழுக்காடு நிலத்திலும், பிற தானியங்கள் 12 விழுக்காடு பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றன.
  • சிறுதானிய வகைகள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் காண்க. பயிர்கள்

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *