TN Board 9th Social Science Solutions Economics Chapter 5 இடம்பெயர்தல்

9th Social Science Guide இடம்பெயர்தல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
அ) 121 கோடி
ஆ) 221 கோடி
இ) 102 கோடி
ஈ) 100 கோடி
விடை:
அ) 121 கோடி

Question 2.
வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
அ) இராமநாதபுரம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) வேலூர்
விடை:
இ) சென்னை

 

Question 3.
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
அ) 7%
ஆ) 75%
இ 23 %
ஈ) 9%
விடை:
அ) 7%

Question 4.
ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
அ) வாழ்வாதாரத்திற்காக
ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
இ சேவைக்காக
ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக
விடை:
அ) வாழ்வாதாரத்திற்காக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
____ மற்றும் _____ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
விடை:
பிறப்பிடம், வாழிடம்

Question 2.
மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____ காணப்படுகின்றன.
விடை:
அதிகமாக

 

Question 3.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் _____ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விடை:
37

Question 4.
பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் _____
விடை:
திருமணம்

Question 5.
இடம்பெயர்வு நகர்வு என்பது _____ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
விடை:
பல்வேறு வகைப்பட்ட

III. பொருத்துக.

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வியாபாரம்
  • வணிகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • திருமணம்

Question 2.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
விடை:

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • திருமணம்

 

Question 3.
மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கடலூர்
  • கரூர்
  • நாமக்கல்
  • சேலம்

Question 4.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்கின்றனர்.
  • வசதி வாய்ப்புடையவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இடம் பெயர்கின்றனர்.

Question 5.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
விடை:

Question 6.
இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?
விடை:

  • இடம் பெயர்ந்தோர் மூன்று விதமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • அவை
    • மிகவும் திறமை வாய்ந்த வேலைகள்
    • சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகள்
    • நடுத்தரமான வேலைகள்

V. விரிவான விடையளி

Question 1.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
விடை:

  1. இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல் :
    • கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப் புறங்களில் அதிக அளவிலான இடப் பெயர்தல் காணப்படுகிறது.
    • எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.
    • ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  2. இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் :
    • பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கவைகளாகும்.
    • குடிப் பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.

 

Question 2.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

  • கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.
  • குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்ட தூர இடப்பெயர்தல் நகர்வுகள்.
  • நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்

ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்தக் காரணங்கள் இருக்கும். இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன.

  • இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்.
  • இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்.
  • சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.
  • குடியேற்றச் செலவு.

Question 3.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.
விடை:

  • தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 35% பேர் நம்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
  • குடியேற்றப்பதிவில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
  • வெளிநாடுகளில் குடியேறியுள்ளவர்களில் 20%பேர் சிங்கப்பூரிலும், 18%பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% பேர் சவுதி அரேபியாவிலும், 13% பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • மேலும் மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • குடியேறுபவர்களில் 15% பெண்கள் மற்றும் 85% பேர் ஆண்களாவர்
  • கல்வித் தகுதியைப் பொருத்த வரையில் 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள், 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 10% பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 12% தொழிற்கல்வி முடித்தவர்கள் மற்றும் 11% பேர் முதுகலை பட்டதாரிகளும் ஆவார்கள்.

Question 4.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
விடை:

  • 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள்
  • 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 10% பேர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள்
  • 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்
  • 12% பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள்
  • 11% பேர் முதுகலை பட்டதாரிகள்

VI. சரியான தொடரை எழுதுக.

1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.
2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்புறங்களில் அதிகம்.
3. இடம்பெயர்வின் நகர்வானது, ஒரே மாதிரியான உள்நகர்வினைக் கொண்டதாகும்.
4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.
விடை:
1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.

VII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடி எத்தனை மாணவர்களின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் பற்றி ஒரு புள்ளி விவரத்தரவைத் தயார் செய்க
2. கிராமப்புறத்திலிருந்து கிராமம், கிராமப்புறத்திலிருந்து நகரம் நகரத்திலிருந்து கிராமம் மற்றும் நகரத்திலிருந்து நகரம் போன்ற இடப்பெயர்வு தொடர்பான படங்களைச் சேகரித்து படத்தொகுப்பைத் தயார் செய்க.

VIII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசும் பல மொழிகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து வட்ட விளக்கப்படம் தயார் செய்க.

9th Social Science Guide இடம்பெயர்தல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஆண்கள் இடம் பெயர்வதற்கான முக்கியக் காரணம்
அ) கல்வி
ஆ) வேலை
இ திருமணம்
ஈ) வணிகம்
விடை:
ஆ) வேலை

 

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து _____ பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
அ) 65%
ஆ) 35%
இ) 26%
ஈ) 53 %
விடை:
ஆ) 35 %

Question 3.
பின்வருவனவற்றுள் குறைந்த அளவிலான வெளி குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள மாவட்டம் ______
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ இராமநாதபுரம்
ஈ) நீலகிரி
விடை:
ஈ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்படுகிறது.
விடை:
பத்து

Question 2.
2011 கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து பேரில் _____ பேர் இடம் பெயர்ந்தவராக உள்ள னர்.
விடை:
இரண்டு

Question 3.
உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை ____ ஆகும்.
விடை:
ஆர்டிக் டெர்ன்

 

Question 4.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் மிக அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு ______
விடை:
சிங்கப்பூர்

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
ii) சர்வதேச குடியேறுபவர்களில் 15% ஆண்களாகவும், 85% பெண்களாகவும் உள்ளனர்.
iii) இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடை பெற்ற ஆண்டு 2015.
iv) மக்கள் ஒருபோதும் கிராமப் புறங்களுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில்லை .
விடை:
ii) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படக் காரணங்கள் யாவை?
விடை:

  • பிறப்பு
  • இறப்பு
  • இடப்பெயர்வு

Question 2.
இடப்பெயர்வு எந்த அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
விடை:

  • பிறப்பிடம் அடிப்படையில் கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் அது வாழ்நாள் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • வாழிடம் அடிப்படையில் : கணக் கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டிருந்தால் இது வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

மனவரைபடம்