TN Board 9th Social Science Solutions Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ____ என்கிறோம்.
அ) சுற்றுச்சூழல்
ஆ) சூழலமைப்பு
இ) உயிர்க் காரணிகள்
ஈ) உயிரற்றக் காரணிகள்
விடை:
அ) சுற்றுச்சூழல்

Question 2.
ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ____ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அ) ஆகஸ்டு 11
ஆ) செப்டம்பர் 11
இ) ஜுலை 11
இ) ஜனவரி 11
விடை:
இ) ஜுலை 11

 

Question 3.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____ ஆகும்.
அ) மக்கள்தொகையியல்
ஆ) புறவடிவமைப்பியல்
இ) சொல்பிறப்பியல்
ஈ) நிலநடுக்கவரைவியல்
விடை:
அ) மக்கள் தொகையியல்

Question 4.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது
____ ஆகும்.
அ) மீன்பிடித்தல்
ஆ) மரம் வெட்டுதல்
இ) சுரங்கவியல்
ஈ) விவசாயம்
விடை:
இ) சுரங்கவியல்

Question 5.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _____
அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்
இ) பொருளாதார பொருள்கள்
ஈ) மூலப்பொருள்கள்
விடை:
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

II. பொருத்துக.

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக்கருத்தில்கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
அ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை:
அ) A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

 

Question 2.
கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
அ) A மற்றும் R இரண்டும் தவறு.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை.
இ) A சரி, ஆனால், R தவறு.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.
விடை:
இ) A சரி ஆனால் R தவறானது.

IV. சுருக்கமான விடையளி

Question 1.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
விடை:

  • ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.
  • மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம்.

Question 2.
கொள்ளை நோய் என்றால் என்ன?
விடை:

  • 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்ளை நோயினால் 30 – 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
  • பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒரு நோயினால் இறந்தால் அது கொள்ளை நோய் எனப்படும்

Question 3.
வரையறு
அ) மக்கள் தொகை வளர்ச்சி
விடை:

  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
    “மக்கள் தொகை வளர்ச்சி” ஆகும்.
  • மக்கள் தொகை வளர்ச்சி = (பிறப்பு விகிதம் + குடியிறக்கம்) – (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு
விடை:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும்
தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கிறது.

இ) வளம் குன்றா வளர்ச்சி
விடை:
எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

 

V. காரணம் கூறுக.

Question 1.
காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
விடை:

  • மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதன்
    மூலம்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்துவனவளம்குறையாமல்பாதுகாக்கலாம். சிலசமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன.
  • காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டதோ அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்த்து இருக்கின்ற காட்டு வளத்தைப் பாதுகாக்க மீள் காடாக்குதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

Question 2.
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
விடை:

  • அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடங்கியது.
  • அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தகடை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
  • எரிக்கப்பட்ட மாசுப்பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு அமிலமாக மாறி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.

Question 3.
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.
விடை:

  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கை,
  • இதில் ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சேவைகள் அடங்கும்.

Question 4.
மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.
விடை:
மக்கள் தொகை வளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

 

Question 5.
வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?
விடை:

  • வளங்களைப் பாதுகாத்துதல் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு, புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்க அவசியமானது.
  • வளம் குன்றா வளர்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு வள இருப்பை உறுதி செய்கிறது. நிகழ் காலத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
விடை:

VII. விரிவான விடையளி

Question 1.
மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.
  • உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.

அ. இயற்கை காரணிகள் :
வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ.வரலாற்றுக் காரணிகள் :
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.

இ. பொருளாதாரக காரணிகள் :
கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.

 

Question 2.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
விடை:
அ. கிராமக் குடியிருப்புகள் :
முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை
மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

கிராமக்குடியிருப்பு வகைகள் :
செவ்வக வடிவக் குடியிருப்புகள் :
சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றுங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிப்பு வகைகளை பற்றி எழுதுக.
(மாணவர்களுக்கானது)

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
Environ என்பதன் பொருள் …. என்பதாகும்
விடை:
சுற்றுப்புறம்

Question 2.
பாப்புலஸ் என்பதன் பொருள் …….
விடை:
மக்கள்

 

Question 3.
கிரேக்கத்தில் ‘Demos’ என்றால் ……. என்று பொருள்
விடை:
மக்கள்

Question 4.
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதல் நடத்தியநாடு ……
விடை:
டென்மார்க்

Question 5.
……… உலகிலேயே மிகப்பெரிய நகரமாகும்.
விடை:
டோக்கியோ

II. பொருத்துக.


Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 81

III. குறுகிய விடையளி.

Question 1.
சுற்றுச் சுழல் என்பதன் பொருள் யாது?
விடை:
சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்வீரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.

Question 2.
மக்கள் தொகை என்றால் என்ன?
விடை:

  • மக்கள் என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்ற பொருளாகும்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை என்கிறோம்.

Question 3.
காடுகளை அழித்தல் என்றால் என்ன?
விடை:
காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

Question 4.
மின்னணுக் கழிவுகள் குறிப்பு வரைக.
விடை:
மின்னணுக் கழிவுகள் (e-waste) என்பவை பயன்படுத்த இயலாத எல்லா மின்னணுக்கருவிகளாகும். (எ.கா) கணினிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் மற்றும் மின்னஞ்சல் கருவிகள்

Question 5.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
விடை:

  • அதிக மக்களடர்த்திப் பகுதிகள் : (50 பேர் /1 ச.மீ)
    கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி.
  • குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள் : (10 பேருக்கு குறைவு /1 ச.மீ)
    மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.

Question 6.
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக.
விடை:

  • பாக் வளைகுடா பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
  • மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்த்து இங்கு எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளை வரைபடமாக்குவதோடு அதைச் சுற்றிய நிலப்பகுதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கற்றறியப்படுகிறது.
  • மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

IV. வேறுபடுத்துக.

Question 1.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
விடை:

 

Question 2.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
விடை:

V. விரிவான விடையளி

Question 1.
நகரக் குடியிருப்புகளின் வகைப்பாடுகளை விவரி.
விடை:
நகரப்பகுதிகள், அதன்பரப்பு, கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும்செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
நகரம், பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் நகரங்களின் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நகரம் (Town) : நகரம் பொதுவாகக் கிராமத்தைவிடப் பெரியதாகவும் பெருநகரத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம்.

பெருநகரம் (City) : பெருநகரங்கள் நகரங்களை விடப் பெரியதாகவம் மிக அதிகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) கோயம்புத்தூர்.

மாதகரம் (Metropolitan City) : மாநகரம் பத்து லட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா.) மதுரை மாநகரம்

மீப்பெருநகரம் (Mega City) : மீப்பெருநகரம் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா) சென்னைப் பெருநகரம் (Greater Chennai)

நகரங்களின் தொகுதி (Conurbation) : நகரங்களின் தொகுதி (Conurbation) நகரங்களின் தொகுதி பல நகரங்களையும் பெருநகரங்களையும் பிற நகர்புறப் பகுதிகளையும் கொண்டிருக்கும் (எ.கா) டெல்லி நகரத் தொகுதி.

 

Question 2.
காடுகளைப் பாதுகாத்தல் குறித்து விவரி?
விடை:
(i) மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.
(ii) தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.
(iii) காடு வளர்ப்பு மற்றும் மீட்டுருவாக்கம் : மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன்மூலம் காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்து வனவளம் குறையாமல் பாதுகாக்கலாம். சில சமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன. பொதுவாகக் காடுகள் மீட்டுருவாக்கம் என்பது புதிய மரக்கன்றுகளை நடுதல் அல்லது தரிசு நிலங்களில் விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் காடுகள் வளர்க்கப்படுவதாகும்.
(iv) வனவளங்களின் பயன்பாடு : நாம் உயிர்வாழ்வதற்குப் தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள் வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நம் அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனவரைபடம்