TN 9 SST

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

TN Board 9th Social Science Solutions Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Question 1.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
(அ) காவலர்கள்
(ஆ) தீயணைப்புப் படையினர்
(இ) காப்பீட்டு முகவர்கள்
(ஈ) அவசர மருத்துவக் குழு
விடை:
(இ) காப்பீட்டு முகவர்கள்

Question 2.
‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?
(அ) தீ
(ஆ) நிலநடுக்கம்
(இ) சுனாமி
(ஈ) கலவரம்
விடை:
(ஆ) நிலநடுக்கம்

 

Question 3.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
(அ) 114
(ஆ) 112
(இ) 115
(ஈ) 118
விடை:
(ஆ) 112

Question 4.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
(அ) தீ விபத்திலிருந்து தப்பிக்க நில்! விழு! உருள்!
(ஆ) “விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!” என்பது நிலநடுக்க தயார் நிலை.
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.
(ஈ) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப்படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக் கொள்ளவும்.
விடை:
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.

Question 5.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
(அ) “காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
(ஆ) “கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
(ஈ) “கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்க வேண்டும்.
விடை:
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

II. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?
விடை:
பேரிடர் முதன்மை மீட்புக் குழு:

  • காவலர்கள்
  • தீயணைப்புத் துறையினர்
  • அவசர மருத்துவக் குழுக்கள்

 

Question 2.
ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?
விடை:
இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஐப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில்தான் உலகிலேயே அதிக நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?
விடை:
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 பெண்களும் 21 ஆண்களும் தீ விபத்தினால் இறக்கின்றனர்.

Question 4.
சுனாமிக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?
விடை:

  • ஆழிப்பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளுக்கு வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  • காயமடைந்தவர்களுக்கும் ஆழிப்பேரலையில் சிக்கிக்கொண்ட நபர்களுக்கும் உதவிசெய்யவும்.
  • ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்க வேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுனர்களை உதவிக்கு அழைக்கவும்.

III. விரிவான விடையளி

Question 1.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • ஆழிப் பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப் பேரலையாகும்.
  • ஆழிப் பேரலையானது 10-30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 – 800 கிலோமீட்டர் வேகத்தில்
    செல்லக்கூடியது.
  • இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.

 

Question 2.
நில நடுக்கத்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:

  1. மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒருகையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
  2. அறையின் மூலையில், மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கொள்ளவும்.
  3. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
  4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.

Question 3.
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிக்கொள்வாய்?
விடை:
ஆழிப்பேரலையை எதிர் கொள்ளல் :

  1. நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிந்து திட்டமிடவும்.
  2. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  3. ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடி மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,.

Question 4.
தீ விபத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • அமைதியாக இருக்கவும்.
  • அருகில் உள்ள தீ அபாயச்சங்குப் பொத்தானை அழுத்தவும் அல்லது 112 ஐ அழைக்கவும்.
  • கட்டடத்தைவிட்டு உடனடியாக வெளியேறவும்.
  • தீவிபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்லவும்.
  • மின் தூக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

செயல்பாடுகள்

1. தீ விபத்திற்கான ஒத்திகை பயிற்சி. (மாணவர்களுக்கானது)
2. நில நடுக்கத்திற்கான ஒத்திகை பயிற்சி (மாணவர்களுக்கானது)

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நிலநடுக்கம் ____ என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.
விடை:
சீஸ்மோக்ராப்

Question 2.
நிலநடுக்கம் ____ அளவையில் அளக்கப்படுகிறது.
விடை:
ரிக்டர்

 

Question 3.
ஆழிப்பேரலை மணிக்கு ____ வேகத்தில் செல்லக்கூடியது
விடை:
700-800 கிலோ மீட்டர்

Question 4.
ஆழிப்பேரலையானது _____ மீட்டர் உயரத்தில் செல்லக்கூடியது
விடை:
10-30

Question 5.
இந்தியாவில் தீமற்றும் தீசார்ந்த விபத்துகளால் சுமார் ____ பேர் இறக்கின்றனர்.
விடை:
25,000

II. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து.

Question 2.
நிலநடுக்கம் – சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒருபகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம்.
  • நிலநடுக்கம் புவித்தட்டுகளின் எல்லைகளில் ஏற்படுகிறது. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை நிலநடுக்க மையம் என்கிறோம்.
  • நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடத்திற்கு மையப்புள்ளி எனப் பெயராகும்.
  • நிலநடுக்க பாதிப்புகள் மையப்புள்ளிக்கு அருகில்தான் மிக அதிகம்.

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
விடை:
பேரிடர் மேலாண்மை :

  • தடுத்தல்
  • தணித்தல்
  • தயார்நிலை
  • எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல்

 

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை – யாது? விவரி.
விடை:
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை :

  • நீங்கள் இருக்கும் கட்டத்தின் வெளியேறும் வழி குறித்தத் திட்டத்தினைத் தெரிந்து கொள்ளவும்.
  • தீ அபாயச் சங்கு எச்சரிக்கை ஒலி கேட்டவுடன் அமைதியாகவும் வேகமாகவும் வெளியேற வேண்டும்.
  • கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேண்டாம்.
  • நீங்கள் வெளியேறும் வழியில் புகையிருந்தால் தரையில் தவழ்ந்து செல்லவும்.
  • கட்டத்திலிருந்து வெளியேறும் பகுதியைத் தெரிந்துகொள்ளவும்.
  • தீ அணைப்பான், தீ அபாயச்சங்கு இருக்குமிடம் மற்றும் வெளியேறும் வழி போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மனவரைபடம்

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *