TN Board 9th Social Science Solutions History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________ என்கிறோம்.
அ) அழகெழுத்து
ஆ) சித்திர எழுத்து
இ) கருத்து எழுத்து
ஈ) மண்ணடுக்காய்வு
விடை:
ஆ) சித்திர எழுத்து

Question 2.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________
அ) சர்கோபகஸ்
ஆ) ஹைக்சோஸ்
இ) மம்மியாக்கம்
ஈ) பல கடவுளர்களை வணங்குதல்
விடை:
இ) மம்மியாக்கம்

Question 3.
சுமேரியரின் எழுத்துமுறை _____ ஆகும்
அ) பிக்டோகிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனோகிராம்
ஈ) க்யூனிபார்ம்
விடை:
ஈ) க்யூனிபார்ம்

 

Question 4.
ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை
அ) தங்கம் மற்றும் யானை
ஆ) குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
விடை:
ஆ) குதிரை மற்றும் இரும்பு

Question 5.
சிந்துவெளி மக்கள் இழந்த மெழுகு செயல் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _____ ஆகும்
அ) ஜாடி
ஆ) மதகுரு அல்லது அரசன்
இ) பறவை
ஈ) நடனமாடும் பெண்
விடை: ஈ) நடனமாடும் பெண்

Question 6.
i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்
iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்
அ) (i) சரி
ஆ) (i) மற்றும்
(ii) சரி
இ) (iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) – சரி

Question 7.
i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்
iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (iii) சரி

 

Question 8.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
அ) சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
ஆ) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்
ஈ) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
விடை:
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்

Question 9.
கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ)கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் கரரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
விடை:
ஸ்பிங்க்ஸின்

Question 2.
எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ______ ஆகும்.
விடை:
ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)

 

Question 3.
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைவிளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
விடை:
ஹமுராபியின் சட்டத் தொகுப்பு

Question 4.
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ______ ஆவார்.
விடை:
லாவோ ட் சு

Question 5.
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
விடை:
சுடுமண்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
ஆ)க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.
விடை:
ஆ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

 

Question 2.
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்
ஆ)அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.
இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.
ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும் .
விடை:
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்

IV. பொருத்துக.

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக
விடை:

  • பாரோக்கிகளின் சாதிகளான பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. எ.கா: கெய்சோ அருகிலுள்ள கிஸா பிரமிடுகள்.
  • பிரமிடுகள் எகிப்தியரின் பொறியியல், கட்டுமானம், மனித ஆற்றல் மேலாண்மை திறன்களை
    வெளிப்படுத்துகின்றன.
  • 73 மீட்டர் நீள 20 மீட்டர் உயர சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக் படிமம் ஸ்பிங்க்ஸ், உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று.

Question 2.
சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.
விடை:

  • சுமேரிய நாகரிகத்தில் மெஸபடோமியா) நகரின் மத்தியில் கட்டப்பட்ட செங்குத்தான பிரமிடுகள் வடிவ கோவில்கள் ‘சிகுராட்’ எனப்படும். உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு.
  • சிகுராட்டைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், விருந்து அரங்குகள், தொழிற்கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள், கல்லறைகள் அடங்கிய வளாகங்கள் இருந்தன. (புகழ்பெற்ற சிகுராட் இருக்குமிடம் உர்).

Question 3.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி
விடை:

  • சுமேரியர்களின் குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி குறித்த 282 குற்றப்பிரிவுகளுக்கான சட்டங்களைக கூறும் முக்கியமான சட்ட ஆவணம்.
  • “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப்பல்” என்ற பழிக்குப்பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பழைய சட்டங்களின் தொகுப்பு

 

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.
ஹைரோகிளிபிக்ஸ் – எகிப்திய எழுத்து முறை :

  • நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் இந்த சித்திர எழுத்து முறை பயன்பட்டது.
  • இந்த எழுத்துக்கள் எகிப்தியரின் குறியீகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன.
    கியூனிபார்ம் – சுமேரிய எழுத்து முறை:
  • சுமேரியர்கள் கில்காமெஷ் என்ற காவியம் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கு இந்த ஆய்வு வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.
  • இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

Question 2.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.
விடை:
தத்துவம்:
லாவோட்சு – தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்.

கன்பூசியஸ்:
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார்.

மென்சியஸ்:
சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி.

இலக்கியம்:
இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ – போர்க்கலை
அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் – திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்)
ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் – மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)

 

Question 3.
சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுது.
விடை:
சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:

  • “சிந்துவெளி நாகரிகம்” பண்டைய நாகரிகங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
  • ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.
  • அவர்கள் சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் கற்களையும் கட்டமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களில் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்க கூடும்.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள நன்கு தளமிடப்பட்ட பல அறைகள் கொண்ட மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
  • தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன.
  • அவர்கள் உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேலும் பருத்தி மற்றும் பட்டாடைகளைப் பயன்படுத்தினார்கள். செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டார்கள். காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது.
  • ஹரப்பர்களின் எழுத்துக்களுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வெண்கலக் கால நாகரிகம் நிலவிய இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்
2. பிரமிடுகள் மற்றும் எகிப்தியர்களின் எழுத்துமுறை குறித்து ஒரு விளக்கப்படம் தயாரிக்கவும்.
3. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த முத்திரைகள், பானைகள் உள்ள படங்களைச் சேகரிக்கவும்.

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
எகிப்தின் நைல் நதியின் நன்கொடை என்றவர் ______
அ) கன்பூசியஸ்
ஆ) ஹெரோடெட்டஸ்
இ) ஹோவாங்ஹோ
ஈ) லாவோட்சே
விடை:
ஆ) ஹெரோடெட்டஸ்

 

Question 2.
கடல் வழியாக சங்க காலத்தில் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்
அ) பாரசீகர்கள்
ஆ) கிரேக்கர்
இ) எகிப்தியர்
ஈ) சீனர்கள்
விடை:
இ) எகிப்தியர்

Question 3.
எகிப்தின் பாரோ என்பது _____ ஆகும்
அ) மாய சக்தி
ஆ) தெய்வீக சக்தி
இ) கடவுள் நம்பிக்கை
ஈ)மனித சக்தி
விடை:
ஆ) தெய்வீக சக்தி

Question 4.
நீர் கடிகாரம் மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 12 மாத நாட்காட்டியை _______ உருவாக்கினார்
அ) சுமேரியர்
ஆ) எகிப்தியர்
இ) சீனர்
ஈ) இந்தியர்
விடை:
அ) சுமேரியர்

Question 5.
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு _____
அ) மஞ்சள் ஆறு
ஆ) சிவப்பு ஆறு
இ) வெள்ளை ஆறு
ஈ) சிந்து ஆறு
விடை:
அ) மஞ்சள் ஆறு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
குவின் வம்சத்தை தோற்றுவித்தவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 2.
சீனப்பெருஞ்சுவரைக் கட்டியவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 3.
உலகின் முதல் இராணுவ அரசு _______
விடை:
அஸிரிய பேரரசு இரும்பு தொழில் நுட்பம்

Question 4.
பல கடவுள் கோட்பாடு கொண்ட நாகரீகம் _______
விடை:
சுமேரிய நாகரீகம்

Question 5.
காற்று, ஆகாயம் கடவுளாக வணங்கியவர் _______
விடை:
சுமேரியர்

III. பொருத்துக.

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

அ) எகிப்திய அரசர் பாரோ என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர்.
ஆ)எகிப்தியர் மரணத்திற்கு பிறகு வாழ்வு இல்லை என்றனர்.
இ) அடிமை முறை இல்லை, சிறை பிடிக்கப்பட்டோர் அடிமைகளாக
ஈ) பதப்படுத்தப்பட்ட இறந்த உடலை மம்மி என்று அழைத்தனர்.
1) அ, ஆ, இ (சரி)
2) ஆ (சரி)
3) இ, ஈ, (சரி)
4) அ, ஈ (சரி)
விடை:
4) அ, ஈ (சரி)

Question 2.
அ) பாரோக்களின் சமாதிகளாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ஆ)ஸ்பிங்ஸின் பிரம்மாண்டமான சிலை மனித உடலும் சிங்க முகமும் கொண்ட சுண்ணாம்பு கல் படிமம்
இ) அனுபிஸ் இறப்பின் கடவுள்
ஈ) மரணத்திலிருந்து காப்பாற்றும் கடவுள் அனுபிஸ்
1) அ, ஆ, இ (சரி)
2) ஈ (தவறு)
3) ஆ (தவறு)
4) அ, இ, ஈ (சரி)
விடை:
4) அ, இ, ஈ (சரி)

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்திய மம்மிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக?
விடை:
இறந்த உடலை நாட்ரன் உப்பை கொண்டு 40 நாட்களுக்கு பாதுகாத்து உடலின் ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சிய பிறகு உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள். இவையே மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன.

 

Question 2.
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பருவநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான. வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு, அந்நியர் படையெடுப்பு முதலியன சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியுறக் காரணங்கள் ஆகும்.
  • சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

Question 3.
மெசபடோமியா நாகரிகம் உலகிற்கு அளித்த பங்களிப்பு பற்றி எழுதுக
விடை:

  • சுமேரியர்கள், குயவர்கள் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தனர். 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியை தயாரித்து 360 பாகைகளாக பிரித்தனர்.
  • கியுனிபார்ம் எழுத்துமுறை அவர்கள் பங்களிப்பு. ஹமுராபியின் சட்டத் தொகுப்பு மெசபடோமியர்களின் மற்றொரு சாதனை ஆகும்.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
தொடக்க கால நாகரிகம் அ) நாகரிகம் என்றால் என்ன?
விடை:
முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை.

ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக, எகிப்திய,
விடை:
மெசபடோமிய, சிந்துவெளி, சீன நாகரிகங்கள்.

இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வதாரமாக இருந்தவை எவை?
விடை:
செழிப்பான பகுதிகளின் விவசாயிகள் உற்பத்தி செய்த உபரி உணவு, பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது.

ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
விடை:
பெரிய கட்டடங்கள், எழுத்துக்கலை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் சமூக மேம்பாட்டை உருவாக்கியது.

 

Question 2.
எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
எகிப்திய நாகரிகம் நைல் நதியின் செழிப்பை நம்பி இருந்தது. எனவே எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என அழைக்கப்பட்டது.

ஆ) பாரோ மற்றும் விசியர்கள் என்போர் யார்?
விடை:
பாரோக்கள்: எகிப்திய அரசர்கள்
விசியர்கள்: பாரோக்களின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகிகள்.

இ) பிரமிடுகள் என்றால் என்ன? அதனை ஏன் கட்டினார்கள்?
Answer:
பிரமிடு என்பது பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஆகும்.
அது இறந்துபோன பாரோவின் சமாதியாக கட்டப்பட்டது.

ஈ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
விடை:
எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தார்கள். இவ்வாறு உடல்களை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
எகிப்தியர்களின் தத்துவம், அறிவியல், இலக்கியம் பற்றி விவரி?
விடை:
தத்துவம்:

  • பண்டைய எகிப்திய தத்துவமாக கிட்டத்தட்ட எதுவும் அறியப்படவில்லை.
  • பண்டைய கிரேக்க தத்துவம் எகிப்தில் ஊன்றியிருப்பதாக சிறிய எண்ணிக்கையிலான அறிஞர்கள் கருதுகின்றனர்.

அறிவியல்:

  • சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி ஆகியவை எகிப்தியர்களால் கண்டுடிக்கப்பட்டவை.
  • அவர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். அதில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் இருந்தன. ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இலக்கியம்:
→ இலக்கியப் படைப்புகளில் கணிதம், வானவியல், மருத்துவம், மாந்திரீகம், மதம் குறித்து எழுதப்பட்டவையும் உண்டு.

மனவரைபடம்

பண்டைய நாகரிகங்கள்


Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 12

The Complete Educational Website