TN 9 Tamil

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 1.2 தமிழோவியம்

கற்பவை கற்றபின்

Question 1
பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:
Answer:
அவையோர் அனைவருக்கும் வணக்கம்! என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா! அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

 

நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ்” என்பதுதான்.

நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்தும் நாம்……. எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி …… என தமிழில் சொற்கள் உண்டு.

எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

 

Question 2.
கவிதையைத் தொடர்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம் - 3
Answer:

 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.
ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
இ) எதுகை, மோனை, இயைபு.
ஈ) மோனை, முரண், அந்தாதி.
Answer:
இ) எதுகை, மோனை, இயைபு.

 

குறுவினா

Question 1.
தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
Answer:
“மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதி நட”
மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய குறள் மட்டுமே போதும் அதைப் படித்து நடக்க வேண்டும்.

Question 2.
“அகமாய் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்”
இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
Answer:
பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும் போர் வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன.

 

சிறுவினா

Question 1.
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
Answer:

  • தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.
  • தமிழ் மொழி ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  • பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவு.
  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.
  • இந்தியாவில் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழில் அமைந்துள்ளன.
  • எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி அறிவியல்,
  • சமூகம், பண்பாட்டுத் துறைகளில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்.

Question 2.
புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
Answer:
முன்னுரை :
தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்று செழித்தோங்கி இருக்கிறது. தமிழானது தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலம் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்ற வேண்டும். சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான பங்கினை இக்கட்டுரையில் காண்போம்.

 

அறிவியல் தமிழ் :
தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகக் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலை நாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர் தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். எதிர்வரும் காலங்களில் என்பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.

ஊடகத்துறை :
நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத்துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் வழி என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணைய வலைத் தொலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதி கண்டுபிடிப்புக்கு முயற்சி செய்வேன்.

கணிப்பொறி :
இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் ஒன்று கணினித்துறை. ஆனால் இதில் இன்று வரை ஆங்கிலமே ஆட்சிசெய்து வருகிறது. மின்னணு அஞ்சல், பல்நோக்கு ஊடகம், மக்களை ஆட்சி செய்கிறது. வளர்ந்து வந்துள்ள உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Vidio Pictures), வரைகலை (Graphies), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகியவற்றை எடுத்துச் சொல்ல தமிழ்ச் சொற்களைப் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.

நிறைவுரை :
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்; தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் எண்ணங்களுக்குப் புதுமை வடிவம் தருவேன்.

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..
அ) இலங்கை, சிங்கப்பூர்
ஆ) அமெரிக்கா, கனடா
இ) பிரான்சு, இங்கிலாந்து
ஈ) நார்வே, சுவீடன்
Answer:
அ) இலங்கை, சிங்கப்பூர்

Question 2.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் …..
அ) பாரதிதாசன்
ஆ) நாமக்கல் கவிஞர்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

 

Question 3.
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
அ) கதை
ஆ) சிறுகதை
இ) கவிதை
ஈ) உரைநடை
Answer:
இ) கவிதை

நிரப்புக

4. ‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……………
Answer:
ஈரோடு தமிழன்பன்

5. 2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல் ………….
Answer:
வணக்கம் வள்ளுவ

 

6. புதுக்கவிதை, சிறுகதை என பல படைப்புகளை வெளியிட்டவர் …………
Answer:
தமிழன்பன்

7. புதுப்புது வடிவங்களில் கவிதை நூல் இயற்றியவர் ………..
Answer:
தமிழன்பன்

8. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
Answer:
பிங்கல நிகண்டு

9. உலகத் தாய்மொழி நாள்
Answer:
பிப்ரவரி 21

10. ‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்ற வர் …………
Answer:
தமிழன்பன்

தெளிவுரை :

தமிழ், காலம் தோன்றும் முன் பிறந்தது. எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! அகமும் புறமும் அமைந்த இலக்கியங்களும் அவற்றை விளக்கிச் சொல்லும் இலக்கண நூல்களும் எம்மொழிக்கும் நிகரில்லாக் காப்பியங்களும் அமைந்திருக்கின்றன. அதை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியில் ஊர்வலம் நடத்தட்டும்.

இலக்கிய காலப்பகுதியில் ஏன் இவ்விருண்ட காலம் எனக்கேட்டு நீதியை ஏந்திய தீபமாய் பாட்டுக்கள் இடம் பெறும். இன்னும் மானிட மேன்மையைச் சாதித்துக் காட்டத்

திருக்குறள் மட்டுமே போதும். அதைப் படித்து அதற்குத்தக நிற்க வேண்டும்.தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சமயங்களை வளர்த்து வந்தது. சமயங்களும் தமிழை வளர்க்கத் தவறியதில்லை . தாயும் சேயும் போல தமிழும் சமயமும் இருந்தன.

 

சித்தர் வழித்தோன்றியவர்கள் பகுத்தறிவு ஒளியை நிலத்தில் பாய்ச்சினர்.

விரலை மடக்கிக் கொண்டவன் எழில் வீணையில் இசை தோன்றவில்லை எனச் சொல்வது போல் குறைகளைக் களைந்து விட்டுப் புதுக்கோலம் தழுவட்டும் தமிழ். நாளும் வளர்ப்போம் நற்றமிழை.

அருஞ்சொற்பொருள் :

அகமாய் – அக இலக்கியங்கள்
(நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, அகநானூறு, கலித்தொகை)
புறமாய் – புற இலக்கியம் (பதிற்றுப்பத்து, புறநானூறு)
அகமாய் புறமாய் – பரிபாடல்
இருட்டு – அறியாமை
சித்தர் – ஞான சித்தி பெற்றவர்
நிகரிலா – ஈடு இணையில்லா
ஓதி – கற்று

 

இலக்கணக் குறிப்பு :

எத்தனை எத்தனை – அடுக்குத் தொடர்
ஏந்தி – வினையெச்சம்
நிகரிலாக் காப்பியம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விட்டு விட்டு – அடுக்குத் தொடர்
காலமும் – முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *