Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 2.4 புறநானூறு
கற்பவை கற்றபின்
Question 1.
பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று அறிந்து எழுதுக. அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18)
Answer:
பாடியவர் : குடபுலவியனார்
பாடப்பட்ட அரசன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை : பொதுவியல்
துறை : முதுமொழிக்காஞ்சி
பொருள் : உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர்.
ஆ) உண்பது நாழி, உடுப்பது இரண்டே ! (புறம் – 189)
Answer:
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக்காஞ்சி
பொருள் : உண்ணப்படும்பொருள்நாழி(உழக்கு) அளவாகும். உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும் இடையிலே ஒன்றுமாக இரண்டேயாகும்.
இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192)
Answer:
பாடியவர் – கனியன் பூங்குன்றனார்
திணை – பொதுவியல்
துறை : பொருண்மொழிக் காஞ்சி
பொருள் – எங்களுக்கு எல்லாஊர்களும் எம்ஊர்களாகும்.எல்லாரும்உறவினர்களே ஆவர்.
ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! (புறம் – 312)
Answer:
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
பாடியவர் : பொன் முடியார்
திணை : வாகை
துறை : மூதின் முல்லை
பொருள் : பெற்ற வளர்த்த மகனை நற்பண்புகள் நிறைந்தவனாக ஆக்குவது தந்தையின் கடமை. நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமை
உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், (புறம் – 183)
Answer:
பிற்றைநிலை : முனியாது கற்றல் நன்றே!
பாடியவர் : பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
திணை : பொதுவியல்
துறை : பொருண்மொழிக் காஞ்சி
பொருள் : ஒருவன் தன் ஆசிரியர்க்குத் துன்பம் நேர்ந்த விடத்து அவர்க்கு உதவி செய்தும், மிக்க பொருளைத் தந்தும் அவர்க்கு வழிபாடு செய்யும் தன்மையை வெறுக்காமலும் கற்பது நலம்.
Question 2.
“உணவாகும் மழை” என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை
ஆ) பூவரசுமரம்
இ) வளம்
ஈ) பெரிய
Answer:
இ) வளம்
குறுவினா
Question 1.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.
Answer:
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். இதைக்குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புறநானூற்றுப் பாடலில் இதைத் தெரிவிக்கிறார்.
சிறுவினா
Question 1.
நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
Answer:
நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே
ஆ) உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
இ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
Answer:
ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
Question 2.
பொருத்துக.
அ) யாக்கை – i) பழைமை
ஆ) தாட்கு – ii) உடம்பு
இ) வளமை – iii) முயற்சி
Answer:
அ) ii ஆ) iii இ)
Question 3.
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..
அ) நற்றிணை
ஆ) ஐங்குறுநூறு
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
Answer:
ஈ) புறநானூறு
நிரப்புக
4. நீர் இன்றி அமையாதது …………
Answer:
உடல்
5. உணவு எனப்படுவது நிலத்துடன் ………… ஆகும்.
விடை:
நீரும்
6. உணவைத் தந்தவர் ……….. தந்தவர் ஆவர்.
Answer:
உயிர்
7. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பண்பாட்டு கருவூலமாகத் திகழும் நூல் …………
Answer:
புறநானூறு
8. தாட்கு என்ற சொல்லின் பொருள்
Answer:
முயற்சி
குறுவினா
Question 1.
‘புறநானூறு’ குறிப்புத் தருக.
Answer:
- எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.
- பண்டைய வேந்தர்களின் வெற்றி, வீரம், கொடை, குறித்தும் குறுநில
- மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளைக் கூறும் நூல்.
- பண்டைய கால மக்களின் புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நூல்.
- பண்டைய தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுக் கருவூலம் .
- மன்னர்கள், பெண்பாற் புலவர்கள் போன்றவர்களாலும் பாடப்பெற்றது.
Question 2.
“பொதுவியல் திணை’ – விளக்குக.
Answer:
வெட்சி முதலான புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
Question 3.
முதுமொழிக் காஞ்சித் துறையை விளக்குக.
Answer:
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சித் துறையாகும்.
Question 4.
மூவகை இன்பங்களாக குடபுலவியனார் கூறுவன யாவை?
Answer:
- இம்மைக்கு மட்டு மின்றி மறுமை இன்பம்
- உலகையே வெல்லும் ஒரு தனி ஆட்சி
- வாடாத புகழ்மாலை இவையே மூவகை இன்பங்கள் ஆகும்.
பாடலின் பொருள் :
விண்ணை முட்டும் திண்ணென்ற உறுதியுடைய உயர்ந்த மதிலைக் கொண்ட வளம் பொருந்திய பழமையான ஊரின் தலைவனே! வலிமை மிக கொண்ட வேந்தனே! நீ இம்மையில் மட்டுமல்ல, மறுமை இன்பத்தை அடையவும், உலகம் வெல்லும் விருப்பம் நிறைவேறவும், நிலையான புகழைப் பெறவும் ஆகிய மூவகை இன்பங்களையும் பெறவிரும்பினால், என்னவெல்லாம் நீ செயலாற்ற வேண்டும் என கூறுகிறேன் கேட்பாயாக.
உலகில் உள்ள அனைத்து ஆற்றல், செல்வம், நல்லாட்சி, புகழ் என யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டியன் நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது ஆகும். உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும், நீரையும் ஒன்று சேர்த்தவர். இவ்வுலகில் உடலையும், உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார்.
நெல் முதலிய தானியங்களை விதைத்து விட்டு, அத்தானியங்களை விளையச் செய்ய வான் இறங்கி மழை தரவில்லையென்றால் அந்நில உலகை ஆளும் அரசனின் முயற்சியும், செயலும் சிறிதும் உதவாது. யார் ஆண்டாலும் பேரும், புகழும், மக்கள் இன்பமும் பெறல் ஆகாது. அதனால் நான் கூறும் மொழிகளை இகழாது கடைபிடிப்பாயாக. நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலைகளைப் பெருகச் செய்வாயாக. அவ்வாறு நிலத்துடன் நீரை நீ கூட்டினால்,
- மறுமை இன்பத்தை அடைதல்.
- உலகு முழுவதையும் வென்று தனி ஆட்சி அமைத்தல்.
- வாடாத நிலையான புகழ் மாலை பெறுதல்.
ஆகிய மூவகை இன்பங்களையும் பெற்று இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற தத்துவத்தை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் குடபுலவியனார் கூறுகிறார்.
சொல்லும் – பொருளும் :
யாக்கை – உடம்பு
புணரியோர் – தந்தவர்
புன்புலம் – புல்லியநிலம்
தாட்கு – தாள் – முயற்சி ஆளுமை
(தாள் ஆற்றித் தந்த பொருள், குறள் ஒப்புநோக்கு)
‘தள்ளாதோர் இவண் தள்ளா தோரே’ தள்ளாதோர் – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாத புகழுடையவர்களாக விளங்குவார்கள்
இலக்கணக் குறிப்பு :
மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள்
நிறுத்தல் – தொழிற்பெயர்
அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள்
அடுபோர் – வினைத்தொகை
கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம் அறிக :
1. நிறுத்தல் = நிறு + த் + தல்
நிறு – பகுதி
த் – இறந்தகால இடைநிலை
தல் – தொழிற்பெயர் விகுதி
2. கொடுத்தோர் = கொடு + த் + த் + ஓர்
கொடு – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி