Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.2 மணிமேகலை
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.2 மணிமேகலை
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 3.2 மணிமேகலை
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.
Answer:
அன்பார்ந்த கோட்டை மாரியம்மன் பக்தகோடிகளே!
இந்தாண்டு ஸ்ரீஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 11ஆம் நாள் திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் மாசிப் பெருவிழா நடைபெறும். அப்பொழுது கீழ்க்குறித்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தகோடிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகக் குழுவினர்,
ஸ்ரீ அ/மி கோட்டை மாரியம்மன்
மாசிப் பெருவிழாக் குழுவினர்
திண்டுக்கல்.
Question 2.
குறிப்புகளைக் கொண்டு ஓர் இயற்கைக் காட்சியை விரித்தெழுதுக.
Answer:
பூஞ்சோலை – சிரிக்கும் மலர்கள் – பசுமையான புல்வெளி – கூவும் குயில் – வீசும் தென்றல் -விளையாடும் குழந்தைகள் – அழகிய காட்சிகள்.
அந்திவானம் செம்மை படர்ந்து செக்கச் செவேல் எனத் தோன்றியது. பச்சை மரங்களடர்ந்த சோலை, சோலைகளில் பூச்செடிகள், செடிகள் தோறும் மலர்கள், அம்மலர்கள் சிரிப்பை உதிர்க்கும். எங்கும் மணம் பரப்பும் மகரந்தங்கள்! வண்டினங்கள் வந்து அமரும்.
பச்சைப் போர்வை போர்த்தியது போல் பசும்புல் தரை, புல் நுனி முழுவதும் வரகரசி ஒட்டிக் கொண்டது போல் சிறுசிறு விதைகள், தனிமையில் அமர்ந்து கூவும் குயில், சோகத்தைக் கீதமாக இசைக்கும் மாங்குயில்கள்!
தெற்குப் பகுதியில் சில்லென்று வீசும் தென்றல் பொதிகைச் சந்தனத் தாது பொங்கும் வாசனை! பசும்புல் தரையில் எங்கும் சிரித்திடும் பூக்கள்! அழகிய குழந்தைகள் வண்ண உடையில்! இத்தகைய இயற்கைக் காட்சிகள்! “கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பு இயற்கை” என்னே அழகு! வண்ணத் தியல்பு!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள்
ஈ) தொகைச்சொற்கள்
Answer:
ஈ) தொகைச்சொற்கள்
குறுவினா
Question 1.
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.
பொருள் : விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
விளக்கம் : மணிமேகலைக் காப்பியத்தில் முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.
Question 2.
பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
Asnwer:
பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
“மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்”
பகைப் புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் எனச் சிலப்பதிகாரத்திலும்,
“பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என மணிமேகலையிலும்
“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
எட்டினோடு இரண்டும் அறியனையே” என்று திருவாசகத்திலும்
“பன்னரும் கலை தெரி பட்டிமண்டபம்” எனக் கம்பராமாயணத்திலும்
இச்சொல் பயின்றுவருதலை அறியலாம்.
சிறுவினா
Question 1.
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
Answer:
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………
அ) சீவகசிந்தாமணி
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
Asnwer:
இ) மணிமேகலை
Question 2.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) வசி – மழை
ஆ) கோட்டி – மன்றம்
இ) தாமம் – மாலை
ஈ) செற்றம் – இன்பம்
Asnwer:
ஈ) செற்றம் – இன்பம்
Question 3.
பொருந்தாதனைத் தேர்ந்தெடு. அ) தூதர்
ஆ) சாரணர்
இ) படைத்தலைவர்
ஈ) புலவர்
Asnwer:
ஈ) புலவர்
Question 4.
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து ……….
அ) அன்பே சிவம்
ஆ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
இ) பசியும் நோயும் பகையும் நீங்குக
ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்
Asnwer:
இ) பசியும் நோயும் பகையும் நீங்குக
நிரப்புக
5. இந்திரவிழாவைக் குறிப்பிடும் காதை
Asnwer:
விழாவறைகாதை
6. மணிமேகலையின் காதைகள்
Asnwer:
30
7. கூலம் என்பதன் பொருள் …………
Asnwer:
தானியம்
8. இளங்கோவடிகள் சாத்தனாரை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
Asnwer:
தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்
சிறுவினா
Question 1.
‘மணிமேகலை’ – நூல் குறிப்புத் தருக.
Answer:
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் மணிமேகலைத் துறவு என்ற பெயரும் மணிமேகலை நூலுக்கு உண்டு. பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளைக் கொண்ட நூல்.
Question 2.
‘சீத்தலைச் சாத்தனார்’ – குறிப்புத் தருக.
Answer:
- மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை
- என்ற ஊரில் பிறந்தவர் என்பர்.
- கூலம் எனப்படும் தானிய வணிகம் செய்தவர்.
- தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என்ற பெயர்களும் உண்டு.
- சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும், சாத்தனாரும் சமகாலத்தவர்.
Question 3.
ஐம்பெருங்குழு, எண்பேராயத்தை விவரி.
ஐம்பெருங்குழு
- அமைச்சர்
- தூதர்
- சடங்கு செய்விப்போர்
- சாரணர் (ஒற்றர்)
- படைத்தலைவர்
எண்பேராயம்
- கரணத்தியலவர்
- நகரமாந்தர்
- கரும விதிகள்
- படைத்தலைவர்
- கனகச்சுற்றம்
- யானை வீரர்
- கடைக்காப்பாளர்
- இவுளி மறவர்
நெடுவினா
Question 1.
மணிமேகலை நூலின் விழாவறை காதையில் சொல்லப்படும் கருத்துகளைக் கூறுக.
Answer:
இந்திர விழாவைக் காண வந்தோர்:
- புகார் நகரில் உலகியல், தத்துவம், வீடுபேறு ஆகிய பொருள்களை விளக்குபவராகிய சமயவாதிகள் கூடி உள்ளனர்.
- காலக்கணிதர், கடவுனர், பல மொழி பேசும் அயர்நாட்டினர், ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டு உள்ளனர்.
விழா முன்னேற்பாடுகள்:
- தோரணம் கட்டிய தெருக்களிலும், மன்றங்களிலும் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு போன்ற மங்கலப் பொருள்களை அழகுபடுத்தி வையுங்கள்.
- குலை முற்றிய பாக்கு மரத்தையும், வாழை மரத்தையும், வஞ்சிக் கொடியையும், பூங்கொடிகளையும், கரும்பையும் நட்டு வையுங்கள். வீடுகளின் முன் தெருத் திண்ணையின் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்க விடுங்கள்.
- தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள். துகில் கொடிகளை மாடங்களின் வாயில்களில் சேர்த்துக் கட்டுங்கள்.
பட்டிமண்டபம் ஏறுக:
பந்தல்களிலும், ஊர்மன்றங்களிலும் நல்லவை பற்றிச் சொற்பொழிவாற்றுங்கள். சமயத்திற்கு உரிய உட்பொருள் அறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காணுங்கள்.
சினமும் பூசலும் கைவிடுக:
- பகைவரிடம் கோபமும், பூசலும் கொள்ளாது விலகி நில்லுங்கள்.
- மணல் குன்று, பூஞ்சோலை, ஆற்றிடைக் குறை, நிழல் தரும் தண்ணீர்த் துறைகளில் நடைபெறும் இருபத்தெட்டு நாள் விழா நிகழ்வுகளில் தேவரும் மக்களும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் உலாவி வருவர் என்பதனை நன்கு அறியுங்கள்.
வாழ்த்து:
காலாட் படையினரும், தேர்ப் படையினரும், குதிரைப் படையினரும், யானைப் படையினரும் சூழ்ந்து வர அகன்ற முரசினை முரசறைவோன் அறைந்தான். “பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாக” என்று வாழ்த்தி முரசறைந்தான்.