Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.2 இராவண காவியம்
கற்பவை கற்றபின்
Question 1.
ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.
Answer:
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.
கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்
தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப் பெருமைப்படுத்தும் மாவட்டம்.
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில் எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.
Question 2.
இப்பாடப் பகுதியில் உங்களை ஈர்த்த கவிதைக் காட்சியினை ஓவியமாகத் தீட்டுக.
Answer:
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்
Question 3.
வைக்கோற் போர், நெற்கதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றின் விளக்கங்களைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது, வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.
ஐயா : நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி : ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே
ஆசிரியர் : ஆமாடா ………” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.
சுதா :ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் : அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும்,
வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.
சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் : நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல். அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி
சுதா : நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லை
குறுவினா
Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை
Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”
சிறுவினா
Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.
மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.
Question 2.
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answer:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.
நெடுவினா
Question 1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.
பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்.
“………….. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்”.
குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.
“தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்”
பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.
“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”
இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.
“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”
முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
அ) கம்பராமாயணம்
ஆ) இராவணகாவியம்
இ) தண்ணீர்த்தேசம்
ஈ) பொன்னியின் செல்வன்
Answer:
ஆ) இராவணகாவியம்
Question 2.
இராவண காவியத்தின் பாடல்கள்
அ) 2100
ஆ) 2500
இ) 3100
ஈ) 3500
Answer:
ஈ) 3100
Question 3.
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Answer:
அ) புலவர் குழந்தை
Question 4.
யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்
அ) பெருந்தேவனார்
ஆ) வாணிதாசன்
இ) வரந்தருவார்
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஈ) புலவர் குழந்தை
Question 5.
“மன்னிய” – என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
பெயரெச்சம்
Question 6.
பொருத்துக.
Answer:
அ. ii) ஆ. i) இ. iv) ஈ. ili)
Question 7.
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
அ) காகம்
ஆ) ஆறுமணிக்குருவி
இ) நாகணவாய்ப்பறவை
ஈ) நாரை
Answer:
இ) நாகணவாய்ப்பறவை.
Question 8.
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
அ) பாலைக்காய்
ஆ) பாகற்காய்
இ) ஏலக்காய்
ஈ) வாழைக்காய்
Answer:
அ) பாலைக்காய்
Question 9.
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
Answer:
இ) மருதம்
Question 10.
கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆனது ……………..
அ) முக்கூடை
ஆ) முக்குழல்
இ) முத்தளிர்
ஈ) முக்கொம்பு
Answer:
ஆ) முக்குழல்
Question 11.
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்டவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) இராவணன்
ஈ) குகன்
Answer:
இ) இராவணன்
Question 12.
“மரை முகம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) உருவகம்
ஈ) உரிச்சொற்றொடர்
Answer:
அ) உவமைத்தொகை
Question 13.
புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்துவாரே – இதில் அமைந்துள்ள நயம்
அ) அடிமோனை
ஆ) சீர்மோனை
இ) அடிஎதுகை
ஈ) சீர்எதுகை
Answer:
அ) அடிமோனை
Question 14.
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
அ) கடற்காகம்
ஆ) கடற்காளான்
இ) கடலாமை
ஈ) கடல் அலை
Answer:
ஈ) கடல் அலை
Question 15.
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
அ) சேவற்கொண்டை
ஆ) யானைத்தந்தம்
இ) மான்கொம்பு
ஈ) மயிற்தோகை
Answer:
ஆ) யானைத்தந்தம்
Question 16.
‘போர்’ அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?
அ) உழைமான்
ஆ) கவரிமான்
இ) கலைமான்
ஈ) செந்நாய்
Answer:
அ) உழைமான்
Question 17.
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
அ) உழைமான்
ஆ) செந்நாய்
இ) மந்தி
ஈ) வானரம்
Answer:
ஆ) செந்நாய்
குறுவினா
Question 1.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Answer:
- இராவண காவியம் காலத்தின் விளைவு
- ஆராய்ச்சியின் அறிகுறி
- புரட்சிப் பொறி
உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்தாகும்.
Question 2.
புலவர் குழந்தை – குறிப்பு வரைக.
Answer:
- இராவணக் காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை ஆவார்.
- தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
Question 3.
புலவர் குழந்தையின் படைப்புகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
Answer:
- யாப்பதிகாரம்
- தொடையதிகாரம்
Question 4.
குரக்கினம் மருண்டு நோக்குமால் – ஏன்?
Answer:
- பறையின் ஒசையைப் போல் ஆரவாரமாய் விழும் அருவியோசை .
பாடுகின்ற பைங்கிளிகள் - பொன் போன்ற அழகிய சிறகினை விரித்து ஆடும் மயில் இவற்றைக் கண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு மிரட்சியுடன் நோக்கியது என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.
Question 5.
குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் யாவை? எந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது?
Answer:
- முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவை குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
- முல்லை நிலத்தில்.
Question 6.
கோர்வை / கோவை பற்றிய சொற்பொருள் விளக்கம் தருக.
Answer:
கோ என்பது வேர்ச்சொல்.
- கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
- எ.கா : ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.
Question 7.
மைவனம், முருகியம் – என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் யாவை?
Answer:
மலைநெல், குறிஞ்சிப்பறை.
சிறுவினா
Question 1.
இராவண காவியத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
இராவண காவியத்தில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவையாவன.
- தமிழகக் காண்டம்,
- இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம்
- பழிபுரிகாண்டம்
- போர்க்காண்டம் என்பவையாகும்.
Question 2.
மருதநில சிறுவர்களின் மனமகிழ் செயல்பாடுகளை எடுத்தியம்புக.
Answer:
தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற்போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.
Question 3.
நெய்தல் நில வண்டுகள் பற்றி எழுதுக.
Answer:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.