TN 9 Tamil

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.3 நாச்சியார் திருமொழி

கற்பவை கற்றபின்

 

Question 1.
திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தொடை நயம் மிக்க பாடல்களுள் எவையேனும், இரண்டினை இணையத்திலோ நூலகத்திலோ திரட்டி வகுப்பறையில் பாடுக.
Answer:

திருப்பாவைப்பாடல் (24)

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்ப் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பாடல் – 15 (திருப்பாவை)

எல்லே இளங்கிளியே இன்னம் உறக்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கை மீர்போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

 

Question 2.
கண்ணனைப் பல்வேறு உறவு நிலைகளில் வைத்துப் பாடிய பாரதியார் பாடல்களும் உங்களைக் கவர்ந்த பாடல்களைக் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே, ஆண்டாள் கண்ணனைத் தன் நாயகனாக எண்ணியது போல்.
பாரதியாரும் கண்ணனை தோழனாக (கண்ணன் என் தோழன்)
தாயாக (கண்ணன் என் தாய்) தந்தையாக (கண்ணன் என் தந்தை)
சேவகனாக (கண்ணன் என் சேவகன்), விளையாட்டுப் பிள்ளை
(கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை), காதலனாக (கண்ணன் என் காதலன்)
என்று பல நிலைகளில் வைத்துப் பாடியுள்ளார்.

சான்று :

விளையாட்டுப்பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத………………
புல்லாங்குழல் கொண்டு வருவான் – அமுது
பொங்கித் ததும்பும் நற் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போல – அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போமே……..
இப்பாடலில் குழலிசைத்து அனைவரையும் மயக்கும் குழந்தையாக எண்ணிப்பாடியுள்ளார் அல்லவா ……..

மாணவர் :

ஐயா ……. தோழனாக என்று சொன்னீர்கள் அதற்கு ஒரு சான்று சொல்லுங்கள் ஐயா!
“ பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென்றால்” ஒரு
பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும்வழிவினை ஆளும் வழி – பயன்
உண்ணும் வழியுரைப் பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்.

 

தோழனாக கண்ணன் வாழ வழி சொல்வானாம். கூப்பிடும் போது அரை நொடிக்குள் வருவானாம். மழைக்குக் குடையாவான்; பசிக்கு உணவாவான்; என்றன் வாழ்வே என் கண்ணன் என்கிறார்.

மாணவர்களே இதன் மூலம் பாரதி கண்ணனைத் தோழனாய்க் கொண்டார் என்பதையும், நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

நல்ல நண்பன்வாழவழிகாட்டவேண்டும், துன்பம் வரும் போது நம்மைத்தாங்குகிறவனாகவும்
இருக்க வேண்டும் என்கிறார்.

மாணவர்கள் : நன்றி ஐயா! …….

Question 3.
சங்க காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள பெண்புலவர்களின் சில கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்குக.
Asnwer:

ஔவையார் பாடல்

முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்ற மேலிட்டு
ஆஅஓல் எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவலி அலைப்பஎன்
உயவு நோய் அறியது துஞ்சும் ஊர்க்கே (குறுந்தொகை – 28)

 

ஒக்கூர் மாசாத்தியார்

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் – மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழு நன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீகிப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே (புறநானூறு)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
Answer:
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Answer:
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

 

குறுவினா

Question 1.
கண்ண ன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
Answer:

  • கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
  • மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளைஊதுபவர்கள் நின்றுகொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.
    “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
    முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற்”

சிறுவினா

Question 1.
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
Answer:

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடுப்பிடு சாந்த மோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ……………. இவ் அடிகளில் உள்ள நயங்கள்.
அ) அடியெதுகை, அடிஇயைபு
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிமோனை, அடிஇயைபு
ஈ) சீர்மோனை, சீர்இயைபு
Answer:
அ) அடியெதுகை, அடிஇயைபு

Question 2.
திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..
அ) நாயன்மார்கள்
ஆ) ஆழ்வார்கள்
இ) சமணர்கள்
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) ஆழ்வார்கள்

 

Question 3.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
அ) நம்மாழ்வார்
ஆ) பேயாழ்வார்
இ) பெரியாழ்வார்
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
இ) பெரியாழ்வார்

Question 4.
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்
அ) 110
ஆ) 140
இ) 120
ஈ) 150
Answer:
ஆ) 140

Question 5.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்
இ) நளவெண்பா
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்

 

Question 6.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி

i) அ – சரி
ii) ஆ – சரி
iii) இரண்டும் சரி
iv) இரண்டும் தவறு
Answer:
iii) இரண்டும் சரி

Question 7.
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
அ) கண்ணன்
ஆ) கன்னன்
இ) கோவலன்
ஈ) நெடுஞ்செழியன்
Answer:
அ) கண்ண ன்.

Question 8.
கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

 

Question 9.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 2
Answer:
அ) (iv)
ஆ) (i)
இ) (ii)
ஈ) (iii)

குறுவினா

Question 1.
ஆண்டாள் – குறிப்பு வரைக.
Answer:

  • திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.

 

Question 2.
ஆண்டாள் பாடியதாகக் குறிப்பிடப்படும் இரு தொகுதிகள் யாவை?
Answer:

  • திருப்பாவை
  • நாச்சியார் திருமொழி

நெடுவினா

Question 1.
]கண்ணனைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுவனவற்றை விளக்குக.
Answer:
முன்னுரை:
பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. திருமாலை நாயகனாக எண்ணி ஆண்டாள் பாடுவதாக அமைந்தது நாச்சியார் திருமொழி ஆகும்.

ஆண்டாளின் கனவும், கண்ணனும்
ஆடும் இளம் பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்’. இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

‘மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர். அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்’ எனக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

 

முடிவுரை :
கண்ணன் மீது ஆண்டாள் கொண்ட காதலின் வெளிப்பாடே கனவாக மலர்ந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

பாடலின் பொருள்

நடனம் ஆடும் இளம்பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

வடமதுரையை (மதுராபுரி) ஆளும், மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு, புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
இவ்வாறு கண்ணன் வரும் காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

 

மத்தளம் முதலான இசைக் கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். இக்காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *